மார்பில் அயன்பாக்ஸ் சூடு., உடலெல்லாம் ரணகொடூரம்.. பணத்திமிர், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு பலியான 16 வயது சிறுமி.!

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram

பணம் கொஞ்சம் சேர்ந்துவிட்டால் திமிரும் அதிகரித்து, அதிகாரவர்க்கம் ஏழை-எளிய மக்களை கொடுமைப்படுத்தி அவர்களை கொலை செய்யும் அளவுக்கு சித்ரவதை செய்யும் சூழல் பதறவைக்கிறது.பணிப்பெண்ணாக சிறுமி

சென்னையில் உள்ள அமைந்தகரை, மேத்தா நகரில் வசித்து வரும் பழைய கார் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் முகமது நவாஸ், தனது மனைவி நசியா, 4 வயது மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரின் தொழில்முறை நண்பர் லோகேஷ். நவாஸ் – நசியா தமப்தியின் வீட்டில், 16 வயதுடைய சிறுமி ஒருவர் குடும்ப வறுமையால் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

குழந்தையுடன் குழந்தையாக பணிப்பெண் .

கடந்த ஒரு ஆண்டாக தஞ்சாவூரை சேர்ந்த தந்தையை இழந்த சிறுமி, குடும்பத்தின் வறுமையை போக்க பணிப்பெண்ணாக வேலையில் இணைந்து இருக்கிறார். இவர் நசியா – நவாஸ் தம்பதியின் மகளான 4 வயது சிறுமியிடம் அன்புடன் பழகுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனால் தினமும் இருவரும் பேசி மகிழ்ந்து வந்த நிலையில், ஒருகட்டத்தில் சிறுமி எப்போதும் பணிப்பெண்ணான சிறுமியுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

உடலெல்லாம் காயம்

இந்த விஷயம் நவாஸ் – நசியா இடையே ஆத்திரத்தை ஏற்படுத்த, தனது நண்பர் லோகேஷ், ஜெய்சக்தி, உறவினரான பெண் ஒருவர் என 6 பேராக சேர்ந்து இவர்கள் சிறுமியை கொடுமைப்படுத்தி இருக்கின்றனர். உடலில் சிகிரெட் சூடு, தாக்கி காயமடைய வைத்தது என அராஜகம் செய்தவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக மார்பகத்தில் அயன் பாக்ஸால் சூடு வைத்து உச்சகட்ட மிருகத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

சித்ரவதையால் மரணம்

தீபாவளியன்று சிறுமி தொடர் தாக்குதலால் வாயில் நுரைதள்ளி உயிரிழக்க, பதறிப்போன நவாஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை உறவினரின் வீட்டில் தங்க அனுப்பிவைத்து, சிறுமியின் சடலத்தை கழிவறையில் வைத்துதுர்நாற்றம் வெளியே தெரியாமல் இருக்க தொடர்ந்து ஊதுபத்திகளை கொளுத்தி வைத்துள்ளார். பின்னர் வழக்கறிஞர் வாயிலாக காவல்துறையினருக்கு சடலம் ஒன்று இவர்களின் வீட்டில் இருப்பதாக தகவல் மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மீட்பு

தகவலை அறிந்த அதிகாரிகள் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து சிறுமியின் சடலத்தை மீட்ட நிலையில், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின் இதுகுறித்து சிறுமியின் தாய், பெரியம்மாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் சென்னை வந்த நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.வறுமையால் துயரம்

குடும்ப வறுமையால் சொந்த மகளின் சடலத்தை தஞ்சாவூர் எடுத்துச் செல்லக்கூட வழியில்லாத நிலையில், அவர்கள் சென்னையிலேயே மகளை மின்சார இடுகாட்டில் தகனம் செய்ததாகவும் தெரியவருகிறது. கைதான 6 பேரின் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏழைத்தானே அவளுக்கெல்லாம் யார் வருவார் என்ற எண்ணமே இவ்வாறான துயரத்திற்கு முதல் காரணமாக அமைகிறது. இவ்வாறான கொடூர செயலை செய்வோர், தனது இறுதி ஆயுள் வரை பிணையில் வெளிவரக்கூட இயலாமல் சிறையில் வாழ்நாட்களை கழிப்பதே சரியான அதிகபட்ச தண்டனையாக இருக்கும் என்பதே ஆதங்கத்தில் கலங்குவோரின் கூக்குரலாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *