செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram

நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக ஐந்து பாடப்பிரிவுகளை உருவாக்க மாவட்ட ஆட்சியாளரிடம் மாணவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1.CSC, 2.ECE, 3.ME, 4.EEE ஆகிய நான்கு பாடப் பிரிவுகளில் ஏறத்தாழ 300க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நமது மாவட்டங்களில் அருகில் உள்ள மாவட்டங்களில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இல்லாததால் இ கல்லூரியில் நமது மாவட்ட மாணவர்கள் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள திருச்சி,கரூர்,சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

இந்த நாலு பாடப்பிரிவுகளை தவிர்த்து மற்ற பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் தனியார் கல்லூரிகளை நோக்கி செல்கின்றனர். எனவே இக்கல்லூரில் புதிதாக 5 பாடப்பிரிவுகளை உருவாக்க வேண்டும் எனவும் இக்கல்லூரில் ஆய்வகமே இல்லாமல் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவும் இதனால் தனியார் கல்லூரியில் சென்று ஆய்வகம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது எனவே இக்கல்லூரியில் புதிதாக ஆய்வகம் கட்டிடம் அமைத்து தரவும், கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கி கீழே விடுகின்றனர், எனவே மாணவ மாணவிகளுக்கு போதிய பேருந்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.