
அரசு விருந்தினர் மாளிகையில், குறைந்த வாடகையில் தங்க நாடாளுமன்ற, சட்டமன்ற, ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள் போன்றவருக்கு ஒதுக்கப்படும் ரூம்களில் (2020 முதல் 2023) மூன்றாண்டுகளில் சுமார் 114 கோடி கொள்ளையா ?
நாட்டில் இப்படி ஒரு ஆட்சி செலவு கணக்கு எழுதி விருந்தினர் மாளிகையில் கொள்ளையடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி சென்னையில் உள்ள அரசு விருந்தினர் இல்லம், உதகமண்டலத்தில் உள்ள தமிழக விருந்தினர் இல்லம், மேலும், புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு விருந்தினர் இல்லம், இந்த மூன்று விருந்தினர் இல்லத்தில் சட்டமன்ற நாடாளுமன்ற மற்றும் அரசு உயர் அதிகாரிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள் சென்று தங்கி வருகின்றார்கள். அவ்வாறு தங்குவதற்காக உருவாக்கப்பட்ட மேற்படி விருந்தினர் இல்லத்தில் குறைந்த வாடகையில் ரூம்கள் விடப்படுவது வாடிக்கை இவர்கள் வாடகை கொடுத்து தங்கினார்களா? அல்லது வாடகை கொடுக்காமல் தங்கி விட்டார்களா? என்ற கேள்வி பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.

ஏனென்றால், மாவட்டத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்குவதற்கு கூட குறைந்த வாடகை விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்படி இருக்கும் போது இது எப்படி இவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது? என்பது குறித்து பொதுமக்கள் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமல்ல, இவர்கள் எதற்காக தங்கினார்கள்? இதனால் மக்களுக்கு என்ன நன்மை? எதுவுமே இல்லை.

இதைவிட ஒரு கொடுமை கொரோனா காலத்தில் கூட இந்த விருந்தினர் மாளிகையை பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்படி விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு மூன்று ஆண்டுகளில், சுமார் 114 கோடி மொத்தமான செலவுத் தொகை RTI தகவலில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல், தேனி மாவட்டத்தில், போடிநாயக்கனூர் ஆர்.ராமகிருஷ்ணன் என்பவர் விண்ணப்பித்து பெறப்பட்ட தகவல்.

மேலும்,இந்த ஆட்சியில் தண்ணீருக்காக சுமார் 2 கோடி செலவு பண்ணி இருக்கிறார்கள். ஒரு R.O பிளான்ட் வைத்துவிடலாம். தொலைபேசி கட்டணம் 2.5 லட்சம், விருந்தோம்பல் செலவு 16 லட்சத்துக்கு மேல், பொருட்கள் வாங்கிய செலவு 5.5 லட்சம், இதுபோக RENT வாடகை எடுத்த ரூம் அதாவது தனியாரிடம் சுமார் 16 லட்சம் ஆக மொத்தம் சென்னை ஊட்டி தமிழ்நாடு டெல்லி பாண்டிச்சேரி ஆகிய விருந்தினர் மாளிகையில் மூன்றாண்டுகளில் சுமார் 114 கோடி செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இதையெல்லாம் இந்த கணக்குகளை எப்படி அரசு தணிக்க செய்துள்ளது? தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் வாங்கி தணிக்க செய்து விட்டார்களா? என்பதுதான் பொதுமக்களின் முக்கிய கேள்வி? தவிர பாண்டிச்சேரி அரசு விருந்தினர் இல்லத்தில் தங்க ஒரு நாளைக்கு ரூம் வாடகை Rs: 2600 / அப்படி இருக்கும்போது மற்ற அரசு விருந்தினர் மாளிகையில் தங்க இதுவரை ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் ஒரு ஆண்டுக்கு எத்தனை கோடி அந்த வருமானம் எல்லாம் என்ன ஆனது செலவு கணக்கு Rs: 114 கோடி காட்டப்பட்டுள்ளது எப்படி என்பதுதான் பொதுமக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி!

மேலும், நாட்டில் திமுக ஆட்சியில் முக்கியமான மாணவர்களின் கல்விக்காக செலவு செய்வதற்கு கூட நிதி இல்லை என்று தெரிவிக்கின்ற திமுக அரசு இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? அதேபோல், பத்திரிக்கை துறையில் சமூக நலன் பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரங்கள் கொடுக்க நிதி இல்லை என்று சொல்லக்கூடிய திமுக அரசு இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?

இதற்கெல்லாம் செலவு செய்ய நிதி இருக்கிறதா? நாட்டின் முக்கியமான பத்திரிக்கை துறைக்கு செலவு செய்தால் நிதி இருக்காது. ஊழலை பாராட்டக்கூடிய பத்திரிகைகளுக்கு செலவு செய்ய கோடிக்கணக்கில் நிதி இருக்கிறதா? இதையெல்லாம் மக்கள் கேட்க மாட்டார்கள். மக்கள் பார்வைக்கு போகாது என்ற ஒரு தைரியம் தானா?