ஏப்ரல் 06, 2025 • Makkal Adhikaram

பாம்பன் பாலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு பாலம்! அதாவது கடலில் அந்த வழியாக கப்பல் வரும்போது பாலம் தூக்கிக் கொள்ளும், தூக்கிக் கொண்டு அது கப்பல் போக்குவரத்தாக அந்தப் பாதை அமையும் .
அதே பாதை ரயில் வரும்போது, நீளவாக்கில் கீழே இறங்கி, ரயில் போக்குவரத்து போக செயல்பட்டு வரும். இப்படி ஒரு பாலம் 1914 லே ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலே கட்டப்பட்ட பாலம். 2014 ல் நூற்றாண்டுகளை கடந்த பாலம்.
அப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க பாலம் இயற்கையின் சீற்றத்தினால், மற்றும் விபத்துக்களால், பாலம் நூற்றாண்டுகளைக் கடந்து பழுதடைந்தது. பிறகு புதியதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தை புனரமைக்கப்பட்டு, அந்தப் பாலத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் திறந்து வைத்தார்.
இது தனுஷ்கோடிக்கும், மதுரைக்கும் இடையேயான ரயில் போக்குவரத்தாக இருந்தாலும், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே முக்கிய கப்பல் போக்குவரத்தாக இந்த பகுதி இருந்து வந்தது.தற்போது,
இப் பாலம் சுமார் 550 கோடி செலவில் 2.08 கிலோமீட்டர் நிலத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது எதிர்காலத்தில் இரட்டை இரயில் பாதை அமைக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.