இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசனின் சிறு குரு பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூகநலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன்! சிறு, குறு பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் நலனிலும், சமூக நலனிலும் அக்கறையுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் விடுத்துள்ள அறிக்கைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பிலும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்து கூட, இந்த பத்திரிகையாளர்கள் நலனில் ஒரு சிறு அக்கறை கூட காட்டாமல் இருந்து வந்துள்ளது. இது பற்றி மக்கள் அதிகாரம் பத்திரிகையில் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாக நான் செய்திகளை வெளியிட்டு இருக்கிறேன். ஒரு அரசியல் கட்சி கூட மனிதபிமான முறையில் கூட இந்த செய்தியை பற்றி பேசவில்லை. 

நான் என்ன கோரிக்கை செய்தி துறை இயக்குனரிடம் தொடர்ந்து வைத்து வருகிறேனோ, அதே கோரிக்கையை இன்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் அதை அப்படியே செயற்குழுவில் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார் .அவருக்கு எங்களுடைய பத்திரிகையின் சார்பிலும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஏனென்றால், அவருடைய சமூக அக்கரைக்கும், பத்திரிக்கையாளர்கள் மீது உள்ள அக்கரைக்கும், இதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள் என்று ஆயிரத்திற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கிறது. நான் எத்தனையோ அரசியல் கட்சிகளை அணுகி பார்த்தேன். ஒருவர் கூட அது பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால், இவர் ஒரு நல்ல விஷயத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று .

மேலும், தற்போது கூட செய்தித்துறை இயக்குனரிடம் பேசி விட்டு வந்தேன். ஐயா எங்களுக்கு சலுகை விளம்பரங்கள் கொடுங்கள், அப்போதுதான் நாங்கள் பத்திரிகை நடத்த முடியும். ஒவ்வொரு மாதமும் ,போராட வேண்டி இருக்கிறது. இவர்கள் மக்களின் வரிப்பணத்தில் பத்திரிக்கை நடத்துவார்கள். நாங்கள் சொந்த பணத்தில் எந்த அளவுக்கு சர்குலேஷன் காட்ட முடியுமோ, அதை தான் காட்ட முடியும். எங்களுக்கு அதே பணத்தை கொடுத்துப் பாருங்கள்? எங்களாலும் அந்த சர்குலேஷன் காட்ட முடியும். அந்தத் தகுதி இருக்கிற நபர்களுக்கு கொடுங்கள் என்று தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

 எத்தனையோ பேர் தகுதியான பத்திரிக்கையாளர்கள் ,பத்திரிக்கை நடத்த தகுதி இருந்தும், அவர்களால் பொருளாதாரம் இல்லாமல் பாதியிலே விட்டுச் சென்றிருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இயக்குனர் மட்டும் ஒன்று சொன்னார். என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன் என்று எனக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார் .அதாவது இந்த செப்டம்பர் மாதத்திற்குள் அக்ரிடேஷன் கார்டு, பஸ் பாஸ் தருகிறோம் என்று தான் தெரிவித்துள்ளார்.

 மேலும், நான் சொன்னேன் இன்று இந்த பத்திரிகை துறையை சீர் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எங்களுடைய இணையதளத்தை பத்திரிகையின் சர்குலேஷனில் கொண்டு வாருங்கள். ஏனென்றால் இன்று மக்கள் வாங்கி படிக்கும் பத்திரிகைகள் மிக மிகக் குறைவு .அரசியல் கட்சி செய்திகளை போட்டால் தான் ஒரு பத்து பத்திரிக்கை விற்கும். இல்லையென்றால் அது கூட விற்காது. இது அச்சு ஊடகத்தின் நிலை . 

இன்று செய்திகள் மக்களிடம் இணையதளம் முக்கியமாக கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறது. அதை எப்படி வரைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கொண்டு வாருங்கள். மேலும், முத்தரசன் அய்யா சொல்வது போல் சிறிய பத்திரிக்கை, பெரிய பத்திரிகை என்ற பேதம் பார்க்காமல் எல்லோருக்கும் பஸ் பாஸ், ஒழுங்கான முறையில் நடத்தக்கூடிய தகுதியானவர்களுக்கு அந்த சலுகை ,விளம்பரங்கள் போய் சேர வேண்டும். அப்போதுதான் இந்த சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் நடத்தக்கூடிய பத்திரிகைகள் இது! வியாபார நோக்கம் அற்றது .

இதை நன்கு செய்து துறை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, இன்று ஒரு உண்மையும் தெரிவிக்கிறேன். நான் தொடர்ந்து போராடிய போராட்டத்திற்கு என்னுடைய வழக்கறிஞர் முத்துசாமிக்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு அனுப்பிய லீகல் நோட்டீஸ், அது குறித்து எங்களுக்கு முக்கிய தகவல்களை கொடுக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இத்தனையும் மூன்று வாரங்களுக்குள் அனுப்பி வைக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

அது மத்திய, மாநில அரசின் செய்தித் துறையை விசாரிக்கும் என்று நம்புகிறேன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *