ஆகஸ்ட் 22, 2024 • Makkal Adhikaram
ஈரோடு மாவட்டத்தில், 331 விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி கோரி, இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.
ஈரோடு மாவட்ட இந்து முன்னணி சார்பில் செப்., 7 முதல் 10 வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலை ஊர்வலமும் நடந்த உள்ளனர்.மாவட்டத்தில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி கோரி, நேற்று மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில், எஸ்.பி., ஜவகரிடம் மனு அளித்தனர். அதில் எந்தெந்த இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது என்பதையும், ஒலி பெருக்கி வைத்து கொள்ளவும் அனுமதி கோரியுள்ளனர்.
இதன்படி, சூரம்பட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 55, ஈரோடு டவுனில், 22, வீரப்பன்சத்திரத்தில், 122, தாலுகாவில், 58, கருங்கல்பாளையத்தில், 48 என, ஈரோடு போலீஸ் சப்-டிவிசனில், 305 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இது தவிர பவானி சப் -டிவிசனுக்கு உட்பட்ட சித்தோட்டில், 16, பெருந்துறை சப்-டிவிசனுக்கு உட்பட்ட அரச்சலுாரில், 4, வெள்ளோட்டில், 6 என மொத்தம், 331 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய உள்ளோம்.
செப்., 10 மாலை 5:00 மணிக்கு ஈரோடு சம்பத் நகரில் துவங்கி பெரிய வலசு, முனிசிபல் காலனி சாலை, மேட்டூர் சாலை, காமராஜர் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, கிருஷ்ணா தியேட்டர் வழியே காவிரி ஆற்றை ஊர்வலம் சென்றடையும். ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் செப்., 7ல் விநாயகர் சதுர்த்தி விழா துவங்கி, 9ல் நிறைவு பெறும். அன்று மாலை, 5:00 மணிக்கு ஊர்வலம் நடக்கிறது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.