தமிழ்நாட்டில் கார்ப்பரேட் ஊடகங்களின் சீப்பஸ்ட் அரசியல் ஏமாறும் பொதுமக்கள்.

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அரசியல் மக்களுக்காக இல்லாமல் அரசியல் கட்சிக்காரர்களுக்காக மாற்றி இருக்கிறார்கள் இந்த ஊடக சீப்பஸ்ட் அரசியல் . தமிழில் சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு கேவலமான, மலிவான அரசியல் என்று தான் சொல்ல வேண்டும் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் செய்தியாளர் சந்திப்பு என்றால் ஒரு 50 மைக்குகள் இருக்கும் . நேற்று யூடியூபில் வந்த ஒரு செய்தி முன்னாள் அதிமுக அமைச்சர்ஜெயக்குமார் பேசும்போது பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது . பின்லேடனே வந்தாலும் முடியாது. பின்லேடனை யாரு இங்கே வரச் சொல்லி தமிழ்நாட்டு மக்கள் கேட்டார்கள்? இந்த ஊடகங்களிலே பேசுவது தான் அரசியல் என்று கார்ப்பரேட் ஊடகங்களும், அரசியல் கட்சியினரும் சேர்ந்து மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆட்சியாளர்களுடைய ,அரசியல் கட்சியினர் கருத்துக்களை மக்களிடம் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய கருத்துக்கள் என்ன? என்று அவர்களிடம் திணியுங்கள். அதுதாண்டா அரசியல். அரசியல் கட்சிக்காக மக்கள் இல்லை. மக்களுக்காக தான் அரசியல் கட்சிகள். நீங்கள் எந்த வேலைக்கு வந்தீர்களோ, அந்த வேலையை செய்வதற்கு தகுதி இல்லாமல், அரசியல் தெரியாத மக்களிடம் இவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். முட்டாள்கள் அதை கேட்டுக் கொண்டிருப்பார்கள். விவரமானவர்கள் அதை காதில் கூட வாங்குவதில்லை.

 மேலும், மக்கள் இது போன்ற கார்ப்பரேட் பத்திரிகைகளிடம் ஏமாறாதீர்கள். மீண்டும், மீண்டும் சொல்கிறேன். அரசியல் கட்சிகள் உங்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் . இவர் அதை சொன்னாரு ,அந்த கட்சியில் இவர் இதை சொன்னாரு, சீமான் ஒரு டான்ஸ் இதுவா அரசியல் ? இதையெல்லாம் அரசியல் தெரியாத மக்களிடம் வைத்துக் கொள்ள வேண்டும்.  சமூக சிந்தனை உள்ள பத்திரிக்கையாளர்கள் இதையெல்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .மேலும், மக்கள் அதிகாரம் மக்கள் நலனில் எப்போதும் இருக்கும்.மேலும், 

ஒரு நண்பர் ஒருவர் ஒரு பத்திரிக்கையில் செய்தியாளராக பணியாற்றிய வரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவருக்கு வாட்ஸ் அப்பில் நான் போடுகின்ற செய்திகளின் லிங்குகளை அனுப்பி வைத்திருந்தேன். ஒரு நாள் இந்த போட்டோவும் இதையும் எனக்கு அனுப்பினார். என்ன நினைப்பில் அவர் இருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால், தான் பெரிய லேபிள் பத்திரிக்கையில் பணியாற்றி இருக்கிறேன், எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பில் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். இது ஒரு சீப்பஸ்ட் அரசியல் இதையெல்லாம் எனக்கு அனுப்பாதீர்கள் என்று மெசேஜ் போட்டேன்.

இவர் விவரமானவராக இருந்தால் அப்போதே என்னைப் பற்றி புரிந்து இருக்க வேண்டும். அப்படி என்றால் எனக்கு நீங்கள் அனுப்பாதீர்கள் என்று மெசேஜ் போட்டு இருந்தார். தவறில்லை .இதைத்தான் இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கிறது. அந்த படத்தில் நிர்மலா சீதாராமன் ஒருபுறம் மற்றொருபுறம் தமிழ் இசை சவுந்தர்ராஜன் பாடம் இதற்கு மேலே வாசகம்  என்ன? என்றால் தெருத்தெருவா வேலை செய்யறதுக்கு ஒரு இனம், நோகாம நொங்கு திங்கிறதுக்கு ஒரு இனம் .இதுதான் மத அரசியல்.மேலும், 

மத அரசியலைப் பற்றி இவருக்கு தெரியாது. எது மத அரசியல்? எது மக்களுக்கான அரசியல்? எதுவும் தெரியாமல் தான் இன்றைய பத்திரிக்கை உலகத்தில் செய்தியாளர்கள் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கும் மதத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை ஒன்று. அடுத்தது பிஜேபியின் நிர்வாகம், அந்த கட்சிக்குள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அது அவர்களை பொறுத்த விஷயம். அந்தந்த கட்சி அவரவர்க்கு என்ன தகுதி இருக்கிறது? என்பதை பார்த்து அவர்களுக்கு கொடுப்பார்கள். அதனுடைய சாதக, பாதகங்கள் அவர்களுக்கு தான் தெரியும்.

 அடுத்தது நிர்மலா சீதாராமன் பற்றி நான் கேள்விப்பட்ட வரை, மத்தியில் ஒரு நிதி அமைச்சராக இருந்து 5 ஆண்டு நிறைவு செய்த ஒருவர், தேர்தலுக்கு செலவு செய்ய என்னிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார்.ஓபன் ஸ்டேட்மென்ட். இது தவிர, இவர் சென்னை வந்து செல்லும்போது, ஒரு தனியார் விடுதியில் கூட இதுவரை தங்கியதில்லை. அலுவலகத்தில், அரசு விடுதியில் மட்டும் தான் தங்குவார். இதிலே அவருடைய நேர்மை என்ன? என்பது புரிந்திருக்கும். நிதி அமைச்சருக்கு இருக்க வேண்டிய தகுதி நிர்மலா சீதாராமன் ஒருவரை தவிர, அந்தக் கட்சியிலே வேறு யாருக்காவது இருக்குமா? என்பது கேள்விக்குறி தான்.

 அவர் நினைத்திருந்தால் பல ஆயிரம் கோடி சம்பாதித்து இருக்க முடியும். எத்தனையோ கம்பெனிகள் வரிப்பணத்தை கொட்டி கொடுக்க தயாராக இருந்திருப்பார்கள் . அரசியலுக்கு ஜாதியும், மதமும் முக்கியமல்ல. நேர்மை தான் முக்கியம். அதனால் தான் ஜாதி அரசியலை முன்னெடுப்பவர்கள், அந்தந்த ஜாதிகளை நன்றாக சாப்பிட்டு, கொட்டையை வெளியில் துப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை . இதை ஏன் சொல்ல வருகிறேன்? என்றால் இந்த அளவிற்கு ஊடகத்தில் ஒரு பெரிய பத்திரிக்கையில் பணியாற்றிய செய்தியாளர் நிலைமை இது . இவருக்கு பல தொழிலதிபர்கள் அல்லது செல்வாக்கு உள்ள மனிதர்கள், அரசியல் புள்ளிகள் தெரிந்து இருக்கலாம் .அது வேறு ,இது வேறு இப்பதாவது புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *