நாட்டில் சிறுபான்மையினர் மதமாற்றத்தை வைத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற போட்டியா ? அல்லது டார்கெட்டா? மதமாற்றத்திற்கு எதிராக விரைவில் சட்டம் – உள்துறை அமைச்சர் அமித்ஷா. .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram

இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு அதுவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் 50 ஆண்டு காலத்தில் மத மாற்றம் அதிகம் நடைபெற்றுள்ளது. இந்த மதமாற்றம் எப்படி நடக்கிறது ?என்றால் நான் உங்களுக்கு இதை செய்கிறேன். பிழைப்புக்கு வழி தேடி தருகிறேன். உங்களை பொருளாதாரத்தில் உயர்வான நிலைக்கு கொண்டு செல்கிறோம். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறோம். பெண்களுக்கு வேலை கொடுக்குறோம். வருமானத்தை ஏற்படுத்துகிறோம்.

இப்படி பல வகையில் அவர்களை பேச்சால் ஈர்த்து, சிலவற்றை கொடுத்து, இப்படித்தான் மதமாற்றம் நடந்திருக்கிறது. இதை நடத்துபவர்கள் யார் என்றால் சிறுபான்மையினர் தொண்டு நிறுவனங்கள் தான் . இந்த தொண்டு நிறுவனங்கள் அதாவது கிறிஸ்தவ தொண்டு  நிறுவனங்கள், முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது.

 இந்த தொண்டு நிறுவனங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது ? உண்மையான தொண்டு நிறுவனங்களா? அப்பாவி மக்கள் பல லட்சக்கணக்கானோர் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். ஒரு பக்கம் இயேசு உங்களுக்கு இந்த வியாதியை குணப்படுத்தி விடுவார். இயேசு உங்களுடைய பொருளாதாரத்தை முன்னேற்றி விடுவார். உங்களுக்கு வேலையை கொடுத்து விடுவார். இப்படி அவர்களை பிரைன் வாஷ் செய்து மதமாற்றம் செய்திருக்கிறார்கள். எத்தனையோ பேர் குழந்தை இல்லை என்று இயேசுவை கும்பிடுங்கள் ,உங்களுக்கு குழந்தை பிறக்கும் இப்படி ஒரு மூட நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டி அல்லது அவர்களிடம் சொல்லி ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். 

சமீபத்தில் கூட ஒரு கிராமத்தில் இருளர் இன மக்களை மதமாற்றம் செய்ய ஆறு மாத காலமாக ஒரு கிறிஸ்தவ அமைப்பு முயற்சி செய்தது. அவர்கள் வறுமையில் வாழக்கூடியவர்கள். அந்த வறுமையை பயன்படுத்தி,  அவர்களுக்கு ஏதாவது கொடுத்து, அவர்களை ஜெபக்கூட்டம் நடத்தி மதமாற்றத்திற்கு வேலைகளை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் என்னுடைய காதுக்கு வந்தவுடன் அவர்களை விரட்டியடித்து அந்த மதமாற்றத்தில் இருந்து அவர்களை காப்பாற்றி இருக்கிறேன். இப்படி ஒரு தொண்டு நிறுவனம் என்பது மதமாற்றத்திற்காக தொண்டு செய்யும் வேலைக்கு !அது அதற்கு பெயர் தொண்டு நிறுவனமா? இதையெல்லாம் பிஜேபி எதிர்க்கிறது. ஆனால், திமுக, அதிமுக இந்த மத மாற்றங்களை அவர்கள் எதிர்க்கவில்லை. அதனால், இவர்களுடைய ஒட்டுமொத்த எதிர்ப்பும் பிஜேபி மேல் காட்டுகிறார்கள்.

நீங்கள் யார் என்ன தவறு செய்தாலும் பரவாயில்லை,எங்களுடைய நோக்கம் அரசியல் வியாபாரம் எத்தனை கோடி கொள்ளை அடிக்கலாம்? மக்களை கொள்ளை அடிக்க வந்தவர்கள். அதனால், நீங்கள் மதமாவது மாற்றிக் கொள்ளுங்கள் .மாற்றாமல் போங்கள், எந்த மதத்தில் இருந்தாலும், எங்களுக்கு அரசியலில் கொள்ளை அடிப்பது தான். அதனால், இதைப் பற்றி தமிழ்நாட்டில் அதிமுகவும், திமுகவும் கவலைப்படுவதில்லை. கவலையெல்லாம் பிஜேபிக்கு தான்.

ஏனென்றால், வருங்காலத்தில் இந்த மதமாற்றத்தால் ஆட்சி மாற்றத்தை உருவாக்கலாம் என்பது இவர்களுடைய முக்கிய டார்கெட் .அதை நோக்கி தான் இந்த தொண்டு நிறுவனங்கள் பெயரில், மாதமாற்ற வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் நாங்கள் கல்வியை இலவசமாக கொடுக்கிறோம். எதையாவது ஒன்று சொல்லி மக்களை தங்கள் வசப்படுத்துவது தான், இவர்களுடைய முக்கிய வேலை. இதுதான் தொண்டு நிறுவனத்தின் வேலை. 

இந்த வேலைக்கு அமெரிக்கா போன்ற பெரும் பணக்கார நாடுகளில் இருந்து இந்த நிறுவனங்களுக்கு பணம் அனுப்புகிறார்கள். அது எந்த நோக்கத்திற்காக அனுப்புகிறார்கள் ? இவர்களுடைய தொண்டுக்காக அனுப்புகிறார்களா? அல்லது தொண்டு நிறுவனங்கள் பெயரில் மதமாற்ற வேலைக்கு அனுப்புகிறார்களா? என்பது அவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? தெரியவில்லை .மேலும், இந்தியாவில் மதமாற்ற வேலை செய்ய எத்தனையோ அந்நிய சக்திகள் மறைமுகமாக இதற்கு பணத்தை தொண்டு நிறுவனங்கள் பெயரில் அனுப்பி வைக்கிறது.

அடுத்தது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இந்துக்களுக்கு எதிரான அமைப்புகள், ஊடகங்கள், இவர்களுக்கும் இந்த தொண்டு நிறுவனங்கள் மூலமாக பணம் வருகிறது. அதனால் தான் நாட்டில் இந்த கூட்டம் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாக கூவிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கெல்லாம் மறைமுக ஆதரவு திமுக ,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ,விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் இத்தனை கட்சிகளும் அரசியல் தெரியாத மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் .

பணம் கொடுத்தால் எந்த பக்கம் வேண்டுமானாலும் பல பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருப்பார்கள். அது போல் இருந்த கட்சிகள் பணம் கொடுத்தால், எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருப்பார்கள். அது எங்களுக்கு எல்லாம் இவர்களுடைய அரசியல் என்னவென்று புரியும். புரியாத மக்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து தான் இவர்கள் கைதட்டி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது படித்த சமூகத்தை, படிக்காத கூட்டம் மிரட்டி அரசியல் செய்வதுபோல, இவர்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். 

இது தவிர, அரசியலில் ஆட்சியாளர்கள் ஊழல் செய்து கொள்ளையடித்த கருப்பு பணத்தை, இந்த தொண்டு நிறுவனங்கள் மூலமாக வெள்ளையாக்குகிறார்கள்.

இதற்கெல்லாம் பிஜேபி செக் வைக்கிறது என்பதுதான் ஒட்டுமொத்த இந்த மதமாற்ற சிறுபான்மை கும்பலுக்கு பிடிக்கவில்லையா? அதனால்தான் மோடியை சபிக்கிறார்கள். மோடிக்கு சாபம் கொடுக்கிறார்கள், இதை எல்லாம் மோகன் லாரன்ஸ் போன்றவர்கள் ஜெபக்கூட்டம் நடத்திக் கொண்டு, அவர்கள் இயேசுவிடம் மன்றாடி கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர் ஜெயிக்க கூடாது. அவர் தோல்வி அடைய வேண்டும்.

 இப்படியெல்லாம் இந்த குருட்டு தனமான மதவாத கும்பல் கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறார்கள். இதற்கு தற்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் சட்டம் கொண்டு வரப் போவதாக தெரிவித்துள்ளார். இது காலம் கடந்து செய்யக்கூடிய வேலையாக தான் இருக்கிறது. பிஜேபி எப்போதோ இந்த மதமாற்ற தடை சட்டத்திற்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஒருவரை மதமாற்றம் செய்தால்  அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும். இது இரண்டும் இருந்தால் தான், இந்த மதமாற்ற கும்பலை இந்தியாவில் இருந்து வெளியேற்ற முடியும் . 

ஒருவர் விரும்பி அந்த மதத்தில் சேருவது வேறு! விரும்பாமல் அவர்களை தொண்டு நிறுவனம் என்ற பெயரில் உங்களுக்கு இதை செய்கிறேன். அதை செய்கிறேன், என்று குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து தூக்கிக் கொண்டு போவார்களே, அந்த கதை தான் இந்த தொண்டு நிறுவனங்கள் வேலை. அறியாமையால் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை ஏமாற்றுவது சுலபம். வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை ஏமாற்றுவது சுலபம். இதை நோக்கி தான் இந்த தொண்டு நிறுவனங்கள் பெயரில் இந்த மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக இந்த சட்டங்களை காலதாமதம் செய்யாமல் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *