மே 09, 2025 • Makkal Adhikaram

நாடு பாகிஸ்தானுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இவர்கள் பாகிஸ்தான் நாட்டுக்காக பரிந்து பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள் என்ற போர்வையில், மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்ற ஒரு உண்மை.
ஒரு சாதாரண பாமர மக்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, தேசப்பற்று இல்லாமல் பேசுகிறார்கள் என்றால், இவர்கள் இது நாள் வரை அவர்களுக்காக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்பது தான் தமிழக தேச உணர்வாளர்கள் கேள்வி? மேலும்,
இவர்கள் இங்குள்ள முஸ்லிம்களும், இவர்களும், பாகிஸ்தான் தீவிரவாத முஸ்லிம்களுடன் கைகோர்த்து இருந்தார்களா? ஏற்கனவே, தமிழ் தேசியம் என்று தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் கைகோர்த்துக்கொண்டு அவர்களிடம் பணம் வாங்கினார்களா?
அதுவும் இவர்களுடைய அரசியல் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் அரசியலா? இப்படிதான் இந்த தேச விரோத சக்திகளுக்கு செய்திகளை வெளியிட்டு பணம் சம்பாதிக்கும், ஊடகங்களும், சோசியல் மீடியாக்களும், தமிழ்நாட்டில்! தமிழக மக்களை ஏமாற்ற இருக்கிறதா? என்று பல கேள்விகள் தேச உணர்வாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வைகோவின் நடிப்பிற்கு சிவாஜி கணேசன் கூட தோற்று போய் விடுவான்.
இப்படிப்பட்ட போலி அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், மத்தியில் கூலிக்கு மாரடைக்கும் பத்திரிக்கை, தொலைக்காட்சி கூட்டங்களுக்கு மத்தியில், இந்த அரசியல் புரியாமல் ஏமாந்து கொண்டு, ஆயிரம், ஐநூறுக்கு வாக்களித்துக் கொண்டு, ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல், ஊழல்வாதிகளுக்கு வாக்களித்துக் கொண்டு, தேச துரோகிகளுக்கு வாக்களித்துக் கொண்டு, நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம்,தொழில் வளம், எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கும், இவர்களுடைய அரசியல் மற்றும் நாட்டுப்பற்று என்ன? என்பதை நாட்டு மக்கள், நாட்டில் போர் வந்த போதாது, தமிழக மக்கள் புரிந்து கொள்வார்களா?
மேலும், ராணுவ வீரர்கள் தாய் நாட்டிற்காக போரில் அவர்களுடைய உயர்த்தியாகும், வாழ்க்கை தியாகம், குடும்பத்தியாகம், இதற்கெல்லாம் நாட்டு மக்கள் அவர்களுக்கு தலை வணங்கிய தீர வேண்டும்.
இந்த நேரத்தில் இந்த தாய் நாட்டின் மண்ணைக் காப்பதற்காக இரவு, பகலாக ராணுவ வீரர்கள் போரிடும் போது, காவல் தெய்வங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுகிறார்கள்.
அவர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் வணங்கும் தெய்வங்கள், அவர்களுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல், நாட்டின் வெற்றிக்காக போரிட்டு மீண்டும் இந்த மண்ணில் சந்தோஷத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துவோம்.
மேலும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இளையத்தின் சார்பாக இந்திய மண்ணில் வாழ்கின்ற மற்றும் ஜீவசமாதி அடைந்த மகான்கள்,சித்தர்கள், யோகிகள், இந்த ராணுவ வீரர்களுக்கு பக்க துணையாக உங்களுடைய அருளும், ஆசியும், சக்தியும், கொண்டு அவர்களை காப்பாற்ற வேண்டிக்கொள்கிறேன்.