
நாட்டில் எவனுடைய சொத்தாக இருந்தாலும் பரவாயில்லை,அது வக்ஃபு வாரிய சொத்தாக ஆக்கிவிடலாம்.அதற்கு இவர்கள் ஓட்டுக்காக இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை அறிவித்திருப்பது இந்துக்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் ஒரு துரதிஷ்டவசமான அரசியல். ஒரு குறிப்பிட்ட சிலருக்கு இவர்கள் அரசியல் செய்வதை இந்துக்கள் அனைவரும், கிறிஸ்தவர்கள் அனைவரையும்,முட்டாள்கள் ஆக்கிவிட்டார்கள்.

இப்படிப்பட்ட ஒரு கேவலமான அரசியல் திமுக ஸ்டாலினும்,தமிழக வெற்றி கழகத்தின் விஜயும் செய்வது ஒரு கேவலமான அரசியல். இதை இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் உண்மை கூட சொல்ல வக்கில்லாத இவர்கள் நாட்டின் நான்காவது முதுகெலும்பு. மேலும்,முதலில் இந்த இரண்டு கட்சியினர் உடைய சொத்துக்களை வக்ஃபு வாரிய சொத்துக்களாக ஏற்றுக் கொண்டு,பிறகு இருவரும் ஊருக்கு உபதேசம் செய்யலாம்.போராட்டம் நடத்தலாம்.அதற்கு மக்கள் தயார்.

இந்த நாட்டில் ஆயிரம் 500 க்கு ஓட்டு போடுபவன் இருக்கும் வரை இது போன்ற பிளாக் லிஸ்ட் அரசியல்வாதிகள், சீப்பான அரசியலை செய்து கொண்டிருப்பார்கள். இந்த அரசியல் எல்லாம் கேரளாவில் செய்ய முடியாது. தவிர, கேரளாவில் இருக்கின்ற பாதிரியார்களே, இந்த சட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். எத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் இன்று வக்ஃபு வாரிய சொத்துக்களாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்? என்பது இந்த இரண்டு கட்சியிலும், கொடி பிடித்துக் கொண்டு தோஷம் போடும் கூட்டங்களுக்கு இந்த உண்மை தெரியுமா?

மேலும், இந்துக்களும் கிறிஸ்தவர்களும் நாட்டில் ஏமாளிகளா? உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தாலும், உச்ச நீதிமன்றம் ஊரில் இருப்பவன் சொத்து எல்லாம் வஃக்பு வாரிய சொத்துக்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுமா? எவ்வளவு மலிவான அரசியல் நாட்டில் மக்கள் அரசியல் தெரியாத இருக்கும் வரை இது போன்ற அரசியல் கட்சிகள் மலிவான அரசியலை செய்து கொண்டு தான் இருப்பார்கள். உஷார் மக்களே உண்மை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தால், நீங்கள் ஏமாந்தால் எல்லோரும் சேர்ந்து ஏறி மிதித்து விடுவார்கள்.