நாமக்கல்லில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம் .

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாமக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் இரண்டாம் கட்ட ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சரவணன், மாவட்ட அமைப்புச் செயலாளா் பிரபா ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஆா்.லட்சுமி நரசிம்மன், மாவட்ட இணை செயலாளா் குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். அப்போது ‘மற்ற துறை பணிகளை கிராம நிா்வாக அலுவலா்கள் மீது திணிக்கக் கூடாது. கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும். ஜன.8-இல் நடைபெற்ற பேச்சுவாா்த்தை உடன்பாடுகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மின்னணு அளவை பணியைபுறக்கணிப்பது’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஏற்கெனவே செப்.9-இல் வட்டாட்சியா் அலுவலகம் முன்பும், 19-இல் கோட்டாட்சியா் அலுவலகத்திலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் வரும் 30-இல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *