புவி வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு காரணம் அரசா? அல்லது மக்களா? இந்தியாவில் மத்திய – மாநில அரசுகள் அதைப்பற்றி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

ஏப்ரல் 30, 2024 • Makkal Adhikaram

உலக அளவில் புவி வெப்பமயமாதல்! நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பூமியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது . சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டால், மனித வாழ்க்கை,உயிரினங்கள், நிம்மதியாகவும் , சந்தோஷமாகவும் வாழ முடியாது . இதைப் பற்றி இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ? 

சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முடியவில்லை என்றால், மனித உயிர்கள்,  உயிரினங்கள் அதிக அளவில் உயிரிழப்புகள், வாழ்க்கை போராட்டங்கள், நோய்களுக்கு ஆளாக நேரிடும் .அதனால், சுற்றுச்சூழல் பற்றி அவசியம் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2024 புவியின் வெப்பம் கூடுதலாக தற்போது வெயிலின் தாக்கம் 110° முதல் 112 டிகிரி வரை அதிகரித்துள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மக்கள் காரணமா? அல்லது இதற்கு அரசு காரணமா? அல்லது இயற்கையின் சுற்றுச்சூழல் காரணமா? யார் காரணம் ?ஆட்சியாளர்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. குறிப்பாக திமுக அரசு இது என்னவென்று கூட தெரியாமல், ஆட்சியில் இருப்பது வீண். நீ எத்தனை கோடி சம்பாதித்தாலும், இந்த இயற்கை உன்னை அனுபவிக்க விடாது. இயற்கை மனது  வைத்தால் தான் ,மனித வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

அதாவது ஒரு பக்கம் வண்டி வாகன புகை மூலம் வருகின்ற வெப்பத்தை குறைக்க வேண்டும் .பிளாஸ்டிக் கழிவுகளால் வருகின்ற பாதிப்பு அதை தூய்மை செய்து அல்லது அதற்கு மாற்றாக வேறு ஏதாவது இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இது தவிர, தற்போதைய வெப்ப நிலைக்கு தாங்க முடியாத மக்கள் தங்கள் வீடுகளில் ஏசி அதிக அளவில் பயன்பாட்டிற்கு வாங்கி செல்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது இன்னும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும். அதாவது, காற்றில் உள்ள ஈரத்தன்மை(நைட்ரஜன்) உறிஞ்சி ,அதை தான் சில் என்ற ஒரு காற்றை அது கொடுத்து வருகிறது.

எல்லோரும் வீட்டிலும் ஏசி, காரிலும் ஏசி,  பஸ்ஸிலும் ஏசி என்று ஏசியை பயன்படுத்த ஆரம்பித்து விட்டால், அடிக்கின்ற காற்று அனல் காற்றாக மாறிவிடும். இந்த காற்றில் ஈரத்தன்மை இருக்கும் வரை தான் ஏசி கூட சில்லென்று காற்றை கொடுத்துக் கொண்டிருக்கும். சமீபத்தில் தற்போது கூட சென்னையில் ஒரு அலுவலகத்தில் பார்த்தேன். நல்ல வெயிலில் அந்த ஏசி ஓடுவது தெரியவில்லை. அந்த அளவுக்கு வெட்டவெளியில் வெப்பம் என்பதை அது ஊர்ஜிதப்படுத்துகிறது .இதிலிருந்து மக்களுக்கு என்ன தெரிகிறது ?  சுற்றுச்சூழல் மாறுபட்டு இருக்கிறது.

கடும் வெப்பம், கடும் குளிர், கடும் மழை இது எல்லாம் புவி வெப்பமயமாதலால் ஏற்படுகின்ற சுற்றுச்சூழல் பாதிப்பு. மனித வாழ்க்கைக்கு நல்ல காற்று ,வெப்பம், மழை இவை அனைத்தும் தேவை. ஆனால் அது தாங்க முடியாத வலி வேதனையாக இருக்கக் கூடாது. வெப்பம் மனித வாழ்க்கையில் ஹீட் ஸ்ட்ரோக் வரும் அளவுக்கு இருக்கக் கூடாது .

தற்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதனால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் செல்லும்போது, இந்த வெப்பத்தின் தாக்கம் கடுமையாக பாதிக்கிறது. இப்படிப்பட்ட மோசமான வெயில் பார்த்ததில்லை என்றுதான் 50 வயதை கடந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

 மேலும், ரியல் எஸ்டேட்டின் நகர்ப்புற வளர்ச்சி, மரங்கள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்பட்டு, நீர் நிலைகள் அழிக்கப்பட்டு, விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டு ,மக்களின் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 1960 இல் இருந்து சென்னையை கணக்கெடுத்தால் பல ஏரிகள் வரைபடத்தில் காணாமல் போய்விட்டது‌ என்கிறார்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் .இவை அனைத்தும் தான் ,தற்போதைய மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு. இது தவிர, தொழிற்சாலை கழிவுகள், நிலத்தடி நீர் மாசுபடுத்துகிறது .

இப்படி பஞ்சபூதங்கள் மனித வாழ்க்கைக்கு எதிராக மாறினால், மனிதன் வாழ முடியாது .இயற்கையோடு வாழ்ந்தால் தான் மனிதனால் வாழ முடியுமே, தவிர இயற்கையை எதிர்த்து ஒருநாளும் வாழ முடியாது. இயற்கையை மனிதன் அழித்தால், மனிதனை இயற்கை அழித்து விடும் என்று பலமுறை மக்கள் அதிகாரம் கட்டுரையில் எழுதி இருக்கிறேன். அதை மறுபடியும் நினைவுபடுத்துகிறேன். நாட்டில் ஆட்சி, அதிகாரம் எல்லாம் மக்களுக்காக என்பது போய்,அவரவர் சொந்த நலனுக்காக, இந்த ஆட்சி, அதிகாரங்கள் மாறிவிட்டது. அது மிகப் பெரிய தவறு.

முட்டாள்கள், குடிகாரர்கள், அரசியல் கட்சி சுயநலவாதிகள், வெத்து வெட்டுகள் ,அடியாட்கள் இவர்கள் எல்லாம் தற்போது அரசியலில் பதவிக்கு வருவதும், கட்சிகளில் பொறுப்புகளில் இருப்பதும் ,வெட்கக்கேடானது. 

அதனால்தான் தகுதியற்ற கூட்டங்கள் அரசியலில்,அரசியல் கட்சிகளில் இருப்பது, இவன் ஒருவனால் ஊருக்கே பாதிப்பு ,இவன் ஒருவனால் நகரத்திற்கு பாதிப்பு, இவன் ஒருவனால் நாட்டுக்கே பாதிப்பு ,இந்த சூழ்நிலைக்கு இன்றைய அரசியல் தள்ளப்பட்டு இருக்கிறது. மக்கள் சிந்திக்க வேண்டும் .அரசியல் என்பது மக்களுக்கு ஆனது. மக்கள் நலனுக்கானது என்பது போய் இவர்களுடைய சொந்த நலனுக்காக ஆகிவிட்டது .

இது ஒரு புறம், இதனால் மக்களுக்கு என்ன பயனும் இல்லை என்ற நிலையில் இந்த அரசியல் இருக்கும்போது, இயற்கை வளங்களை நாட்டில் அழித்துக் கொண்டு, கனிம வளத்தை அழித்துக் கொண்டு, காடுகளை அழித்துக் கொண்டு, இவர்களுடைய நிர்வாகம் இருந்து வருகிறது. 

இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் இன்னும் பத்தாண்டுகளில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு புவி வெப்பமயமாதல் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஒரு பக்கம் இயற்கையை அழிக்கிறது. மற்றொரு பக்கம் கோயில் சொத்துக்கள், கோயில் நிலங்கள்,தெய்வ காரியங்கள் எதையும் சரியாக செய்யாமல் வருமானத்தையும், சொத்தையும், நகைகளையும், எப்படி எடுக்கலாம்? என்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். குறிப்பாக இந்து கோயில்களின் வருமானங்கள் எதற்காக எடுக்கிறீர்கள்?

அதேபோல், கிறிஸ்தவ, முஸ்லிம் கோயில்களில் உள்ள வருமானத்தை எடுங்கள் பார்க்கலாம்? தவறு. மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .அதிகாரத்தின் உச்சம் தான், இந்து கோயில்களின் வருமானத்தை அரசு எடுப்பது, மிகப்பெரிய தவறு. இதுவரையில் இந்து அறநிலையத்துறை மூலம் முன்னாள் ஐ ஜி பொன்மாணிக்கவேல் சொன்னது போல, ஒரு வருஷத்துக்கு 500 கோடி சுமார் இந்து கோயில்களின் வருமானத்தை வரி விதித்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த எடப்பாடி ஆட்சியிலும் அதை செய்திருக்கிறார்கள்.

 இப்படி திமுக ,அதிமுக மாறி ,மாறி இயற்கை வளங்களை சுரண்டுவதும், இந்து கோயில்களின் வருமானத்தையும், இந்து தர்மத்திற்கு எதிரான காரியங்களிலும் ஈடுபட்டிருப்பதும், மிகப்பெரிய தவறு .மேலும், இந்து கோயில்கள் பஞ்சபூத சக்திகளின் அம்சம் .அதை இந்த அரசு தவறாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்த தவறுக்கு எல்லாம் கண்டிப்பாக யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு. இந்த உலகத்தை வழிநடத்தும் பஞ்சபூத சக்திகள் தான் இறைவன். அந்த இறைவனை அல்லது இறை சக்தியை தவறான அணுகு முறையில் செயல்படுத்தினால், அதன் பின் விளைவு யாராக இருந்தாலும் அதற்குரிய தண்டனை அது கொடுத்தே தீரும்.

இங்கே இயற்கையின் ஆற்றல் தெரியாமல், அதனுடைய பெருமை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இது புரியாது. சினிமா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, வாழ்க்கையின் அர்த்தம் புரியாது. கற்பனையில் சினிமா, நிஜத்தில் வாழ்க்கை. நடக்க முடியாத விஷயங்களை எல்லாம் கற்பனையில் சினிமாவில் பார்க்க முடியும். நிஜத்தில் அதை எல்லாம் செயல்படுத்தி காட்ட முடியாது .அதனால், இந்த சினிமா கலாச்சார வாழ்க்கை ஆன்மீகத்திற்கு, அரசியலுக்கு எதிரான ஒன்று. வருங்கால இளைய தலைமுறைகள் இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

 சினிமாவில் ஹீரோவாக நடிப்பவன் எல்லாம் அறிவாளியாக, பலசாலியாக, பெருமைக்குரியவர்களாக, ஒரு ஹீரோ இமேஜினேஷன்  (Hero imagination ) மட்டும்தான். அது வாழ்க்கையில் கொண்டு வந்தால், அந்த வாழ்க்கை வெற்றி பெறாது .தோல்வி தான் தழுவோம்.படத்தில் ஹீரோ 100 பேரை அடிப்பார் நிஜத்தில் அவ்வாறு அடிக்க முடியுமா இது தவிர இன்றைய இளைஞர்கள் சினிமா ஹீரோக்களை பார்த்து போதைக்கு அடிமையாகும் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகும் உடல் நலத்தை கெடுத்துக் கொண்டது தான் மிச்சம்

அந்த காலத்தில் நல்ல கருத்துக்கள், புரட்சிகரமான கருத்துக்கள் ,வைத்து படம் எடுத்தவர்கள் ,நடித்தவர்கள் கூட வெளிப்புற வாழ்க்கைக்கு தான் அவர்கள் வாழ்க்கை வெற்றியானது ஒழிய, அவர்களுடைய சொந்த வாழ்க்கை நலம் ,சந்தோசம் எல்லாமே தோல்விதான். ஒவ்வொரு சினிமா நடிகர்களும், தங்களுடைய சொந்த வாழ்க்கையை பற்றி வெளிப்படுத்தினால், அது எவ்வளவு மிக மோசமானதாக இருக்கும் என்பது தெரியாது. வெளி பார்வைக்கு தான் அவர்கள் மின்னும் நட்சத்திரங்கள். அந்த நட்சத்திரங்கள் கூட பகலில் தெரியாது. இரவில்தான் தெரியும். அது போல் தான் அவர்களுடைய வாழ்க்கை இருட்டுக்குள் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களாகத்தான் அவர்களுடைய வாழ்க்கை இரண்டு வருகிறது . 

அதனால், மனித வாழ்க்கை சினிமா கலாச்சாரத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறது. இது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் அவசியம் இதை புரிந்து கொள்ள வேண்டும். திமுக, அதிமுக இரண்டுமே சினிமா கலாச்சாரத்தின் அடிப்படையில் வெளிவந்துள்ள அரசியல். இது சினிமா போன்று வாழ்க்கை, அரசியல் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையை பற்றியோ, இந்து தர்மத்தை பற்றியோ கவலை இல்லை. முட்டாள்களை வைத்து ஓட்டு வாங்கி விட்டால், எத்தனை கோடி கொள்ளை அடிக்கலாம். இதுதான் இவர்களுடைய ஒரே கணக்கு .முட்டாள்களுக்கு, பணமும், பிரியாணியும் மதுவும் கொடுத்தால் போதும் .வேறு என்ன வேணும்? அவர்களுக்கு இதுவே கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் .

அதனால் ,இங்கே உழைப்பவர்கள் ,சிந்திப்பவர்கள் ,படித்தவர்கள், மனசாட்சியுடன் வாழ்பவர்கள், ஆன்மீக நெறியாளர்கள், இவர்கள் தான் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இயற்கை திருடனுக்கும் ஒரு காலத்தை நிர்ணயித்திருக்கிறது .அந்த காலம் வரை அது விட்டு வைக்கும். பிறகு அந்த இயற்கையே அடியோடு அதை அழித்துவிடும் .அதுதான் என்ற திமுக, அதிமுகவிற்கு நடக்கப் போகிறது.

இப்போது கூட இயற்கை என்ற ஒரு கடவுள், இந்த மனித சக்திக்கு இதை உணர்த்தினால் போதும், அடுத்த நிமிஷம் இந்த ஆட்சி இருக்காது. இந்த அரசியல் வெத்துவேட்டுகள் போல, அரசியல் கட்சியின் பேச்சாளர்களை போல, யூடியூப் பேச்சாளர்கள், உதவாத மூத்த பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் பேசி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இது எல்லாம் ஒரு கூலிக்கு மாரடிக்கிற ஒரு கூட்டம். அது எந்த கட்சி பணம் கொடுத்தாலும், அந்த கட்சிக்காக இவர்கள் கூவிக் கொண்டிருப்பார்கள் . 

மக்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. உண்மையை படியுங்கள். உண்மையை சிந்தியுங்கள். தர்மனையில் வாழுங்கள். இறைவனை நம்புங்கள். இயற்கை இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் .இயற்கை தான் மனிதனுக்கு வழிகாட்டி .வாழ வைக்கும் தெய்வம். அதனால்,நம் முன்னோர்கள் மாடுகளை, சூரியனை, கோயில்களில் வசந்த விழா,ஜாத்திரை திருவிழா, இவையெல்லாம் ஒரு கணக்குடன் தான் வழிபட்டு வாழ்ந்திருக்கிறார்கள்.

 இயற்கையை அழித்து ஒரு நாளும் மனிதன் சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடியாது. வருங்கால தலைமுறைகள் இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் . அதனால், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் கொடுமை எப்படி? இன்று தாங்க முடியாமல், இந்த வெப்பத்தை தாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ, அதே போல் தான் இந்த அரசியலும் இருந்து கொண்டிருக்கிறது. மக்கள் சிந்திக்க வேண்டும். மக்கள் அரசியலை படிக்க வேண்டும். பேசிக் கொண்டிருப்பவன் எல்லாம் அரசியல்வாதி அல்ல, சுயநலவாதியும், பொதுநலவாதி போல் கருத்துக்களை பேசிக் கொண்டிருக்கிறான்.அப்படிப் பார்த்தால் நானும் ஒரு அரசியல்வாதி தான்.

ஏனென்றால் அவன் வாயிலே பேசிவிட்டு போகிறான். நான் எழுத்திலே எழுதிவிட்டு போகிறேன். இவனுக்கும், எனக்கும் என்ன வித்தியாசம் ? மேலும், இங்கே திருடனும் ,நல்லவனை போல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறான். கொள்ளையடிப்பவனும், ஆற்றல் மிகுந்தவனாக காட்டிக் கொண்டிருக்கிறான். இவையெல்லாம் ஒரு நிமிடம் சினிமாவில் ஒரு காட்சியாக வைத்தால், எப்படி இருக்கும் ?அதுபோல்தான் இந்த அரசியலில் இது இருந்து கொண்டிருக்கிறது. 1962 க்கு முன் இருந்த அரசியலில் படிக்காதவர்கள் தேர்வு, தகுதியானவர்கள் அரசியலுக்கு வந்தார்கள். இப்போது படித்தவர்கள் தேர்வு ,தகுதியற்றவர்கள் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். 

அப்படி என்றால், இதற்கு என்ன காரணம் சினிமாவா? சினிமா கலாச்சாரத்தில் வருகின்ற எவரும் மக்கள் நலனில் அக்கறை செலுத்த முடியாது. ஏனென்றால் அரசியல் வாழ்க்கை ஒரு தியாகம் தான். அந்த தியாகத்தை செய்வதற்கு யாருக்கு அந்த தகுதி? எதிர்பார்ப்பற்ற அந்த அர்ப்பணிப்பு யாருக்குத் தகுதி? என்பதை கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மக்கள் சிந்திக்க வேண்டும். அதனால் தான் ,இன்று மக்களின் வாழ்க்கை இயற்கையுடன் போராட வேண்டி இருக்கிறது .சட்டத்தின்னுடன் போராட வேண்டி இருக்கிறது. சமூகத்தினுடன் போராட வேண்டி இருக்கிறது .வாழ்க்கையுடன் குடும்பத்துடன் போராட வேண்டி இருக்கிறது.

வாழ்க்கை என்பது இன்று போராட்டமே, வாழ்க்கையாகி விட்டது. எதிர்பார்ப்புகள் அதிகம். ஆனால், செயல்பாடு குறைந்துவிட்டது. இதுக்கு அர்த்தம் தெரியாத கூட்டங்கள் தான், அரசியல் கட்சிகளிலும், அரசியலிலும் போட்டி போட்டுக் கொண்டு நிற்கிறது. இவைகளை நம்பி வாழ்பவர்கள் ஏமாந்து போராட்டத்தை தான் சந்திக்க வேண்டும் . எப்போது அடியாட்களை அரசியலில் கொண்டு வந்தார்களோ, அப்போதே அரசியல் மக்களுக்காக இல்லை என்பதை வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்காளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

அடியாட்களுக்கு இங்கு என்ன வேலை ?உடம்பை காட்டிக் கொண்டிருப்பவனுக்கு இங்கு என்ன வேலை? சட்டையை கிழித்து கொள்பவனுக்கு இங்கு என்ன வேலை ?வாயிலே பேசிவிட்டு போவதற்கு இங்கே என்ன வேலை ?இதை எல்லாம் சிந்திக்காத வரை,மக்களின் வாழ்க்கை இனி இயற்கையோடு போராட வேண்டியதுதான் என்பதை புரிந்து கொள்வீர்களா ?

ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *