போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு கால பண பயன்களை வழங்க ஓய்வூதியதாரர்கள் அரசை கண்டித்து சாலை மறியல் .

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram

ஓய்வுகால பணப் பயன்களை தாம தமின்றி வழங்கக் கோரி அரசுப் போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் காரைக்குடி,  புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மண்ட லங்கள் மற்றும் திருச்சி அரசு விரைவு  போக்குவரத்து கிளை ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாயன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு திருச்சி மண்டலத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். போராட்டத்தை தமிழ்நாடு அரசு அனைத்து துறை  ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர்  செந்தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி சங்க மாநில மைய நிர்வாகி சின்னச்சாமி, மாநிலத் துணைத் தலைவர்கள் சண்மு கம், இளங்கோவன், மாநில துணை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் பேசினர்.  

பொதுத் துறையை பாதுகாக்க, போக்குவரத்து கழகத்தை தனியார் மய மாக்க கூடாது. பணியாளர்கள் நியமனத்தில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். ஓய்வு பெற்று  20 மாதங்கள் ஆகியும் வழங்கப் படாமல் உள்ள ஓய்வுகால பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும். 105 மாதமாக வழங்கப் படாமல் உள்ள டி.ஏ உயர்வை நீதி மன்ற தீர்ப்பின் படி உடனே  வழங்க வேண்டும். மேல்முறை யீடு செய்யக்கூடாது.  அரசின் மற்ற துறை ஓய்வூதியர்களின் திட்டத்தை போன்ற மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். 

சேம நல நிதியை நீதிமன்ற  தீர்ப்பின்படி உடனே வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை  ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *