உடுமலை, காங்கேயம் மடத்துக் குளம், தாராபுரம் என திருப்பூர் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் முகமூடிக் கொள்ளையர்கள் பல்வேறு வீடுகளில் கொள்ளை அடித்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தையே அலற விட்ட இந்த முகமூடி கொள்ளை யர்களை பிடிக்க போலீசார் 3 தனிப்படை அமைத்து துப்பாக்கி முனையில் தேடி வந்தனர்.
இந்நிலையில் உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி பிரிவில் நான்கு முகமுடி கொள்ளையர் களையும் நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ஒரு கார், இரண்டு இரு சக்கர வாகனங்கள் 36 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து உடுமலை டிஎஸ்பி ஆறுமுகம் கூறியது:
சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், மோப்ப நாய்கள் உதவி யுடனும் முகமூடி கொள்ளையர்கள் தப்பிச் சென்ற திசையினை ஆராய்ந்து குற்றவாளிகளை பிடித்துள்ளோம்.
இதில் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த முருகன் சிவகுரு(45) கள்ளக்குறிச்சி யை சேர்ந்த ராஜா(40) சுரேஷ்(34), தங்கராஜ்(55) என நான்கு பேரை கைது செய்து உள்ளோம்.
இவர்கள் மீது 20 க்கும் ஏற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.