பள்ளிக்கல்வித்துறை 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இமெயில் ஐடி கிரியேட் செய்து தர அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளதாக தகவல்.
இதில் அரசியல் உள்நோக்கம் இருக்குமா? என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வி ?ஏன் என்றால் மாணவர்கள் இந்த மெயில் ஐடி மூலம் என்ன தெரிந்து கொள்ளப் போகிறார்கள்? அதுதானே முக்கியமான ஒன்று .அதுமட்டுமல்ல, இந்த மெயில் ஐ டி ,வகுப்பு ஆசிரியர் உதவியுடன் இமெயில் ஐடி கிரியேட் செய்து அதை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .
அவர்கள் சொல்லும் விளக்கம் மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் போது அவர்களுக்கு அறிவுரை வழங்க இந்த மெயில் ஐடி என்று தெரிவிக்கிறார்கள். மாணவர்கள் வாங்குகின்ற தேர்வு மதிப்பெண் பொருத்துதான் அவர்களுடைய உயர்கல்வி தீர்மானிக்கப் போகிறது .இதில் அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த மெயில் ஐடியை வைத்து மாணவர்களுக்கு என்ன சொல்லப் போகிறது?
மேலும், அரசியலில் இவர்களுடைய வாக்குகளை சேகரிக்க ஈமெயில் ஐடி பயன்படுத்துவார்களா ?என்று அரசியல் கட்சிகள் சில சந்தேகங்களை எழுப்புகிறது. மேலும்,மாணவர்களுக்கு எதுவும் புரியாத ஒரு வயது . இது எதற்கு ?ஏன்? என்று கூட சிந்திக்கத் தெரியாதவர்கள் .
அதனால், இந்த மெயில் ஐடி கல்வி சம்பந்தப்பட்ட அல்லது பாடம் சம்பந்தப்பட்ட செய்திகளை தவிர்த்து அரசியல் செய்திகள் வந்தால் ?இவர்கள் என்ன அதைப் பற்றி புரிந்து கொள்வார்கள் ?மேலும், இது ஒரு புதுமையாக உள்ளது .இந்த புதுமை தான் சந்தேகத்தை கிளப்புகிறது. எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு மெயில் ஐடி கிரியேஷன் பள்ளி மாணவர்களுக்கு இல்லை என்பதுதான் முக்கியமாக கவனிக்க வேண்டிய உள்ளது .அதனால் மாணவர்கள் , பெற்றோர்கள் உஷார் .