தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் கனிம வளத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒரு பக்கம் மக்களின் எதிர்ப்பு.
மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் அரசியல். இந்த அரசியலில் இருந்து திமுக தப்பித்துக் கொண்டது. முதலில் இதற்கு ஆதரவு தெரிவித்து விட்டு எதிர்ப்பு வந்தவுடன் அதை சட்டமன்றத்திலே தனித் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. இது திமுக அரசின் அரசியல் சாணக்கியத்தனம்.
இது தவிர, இந்த தனி தீர்மானத்தை இன்று இரவே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் இதில் எவ்வளவு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது? இதுவரை இப்படிப்பட்ட விஷயத்திற்கு எந்த தனி தீர்மானமும் சட்டமன்றத்திலே இயற்றப்பட்டதில்லை. இயற்றப்பட்ட தனித் தீர்மானத்தை உடனடியாக டெல்லிக்கு இரவோடு இரவாக கொண்டு போய் சேர்க்கப்பட்டதில்லை.
இப்படி எல்லாமே இதற்குள் மத்திய மாநில அரசின் அரசியல் மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது என்கின்றனர்.