நாட்டில் பத்திரிக்கை துறை இன்று கடினமான நெருக்கடிக்குள்ளான ஒரு துறையாக இருந்து வருகிறது . அதிலும் இந்த சிறிய பத்திரிகைகள் நடத்துவது சாதாரண வேலையல்ல, வாழ்க்கை போராட்டத்துடனும், சமூக போராட்டத்துடனும், நடத்திக் கொண்டிருக்கும் முக்கிய பத்திரிக்கை பணி .
இதில் கார்ப்பரேட் அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாகவும், அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகவும்,செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஒரு வேளை அதை எதிர்க்கட்சி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியாக இருந்தால்,செய்திகள் மக்களுக்கு நடக்கின்ற சில பிரச்சனைகளை வெளியிடுகிறது.
பெரும்பாலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்திகள் பத்திரிக்கை துறையில் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் செய்து துறையின் கொள்கை முடிவு என்பது தங்களுக்கு வேண்டிய பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது . இங்கே நடுநிலையான ஊடகங்களை தேட வேண்டி இருக்கிறது. நடுநிலையான ஊடகங்களுக்கு எந்த சலுகை விளம்பரங்களும் கொடுக்காமல் மறுக்கப்பட்டு வருகிறது. தவிர தகுதியான ஊடகங்கள் எது என்பது கூட தெரியாமல் செய்தித் துறை இயங்கி வருகிறது . சர்குலேஷன் என்பது ஒரு ஏமாற்று வேலை. மக்களுக்கான செய்திகள் உண்மை செய்திகள் அரசு அதிகாரிகள் செய்து துறையில் பணியாற்றுவது அவர்களுடைய தகுதியின்மையை எடுத்துக்காட்டுகிறது.
மேலும், பத்தாயிரம் பத்திரிகைகளுக்கு மட்டும்தான் அரசு அடையாள அட்டை என்று தெரிவிக்கிறது. இந்த பத்தாயிரம் பிரதிகளில் எவ்வளவு விற்பனை என்பதை பற்றி அவர்கள் சொல்லவில்லை. அடிப்பது மட்டுமே சொல்கிறார்கள். மேலும், இதில் அதிக அளவு ஆடிட்டர் ரிப்போர்ட்டில், குளறுபடிகள் செய்து அந்த அரசு அடையாள அட்டையும் வாங்கிக் கொண்டிருக்கும் பல பத்திரிகைகள் இருக்கின்றன.
மேலும், அப்படியே பத்தாயிரம் பிரரிதிகள் அச்சு அடித்தாலும்,நீங்கள் எவ்வளவு அந்த பத்திரிக்கைக்கு விளம்பரம் கொடுப்பீர்கள்? அப்பவும் தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு மட்டுமே கொடுப்பீர்கள் அது, அரசின் கொள்கை முடிவா?உங்களுடைய கொள்கை முடிவு யாருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு கொடுப்பீர்கள் மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டீர்கள் இதுதான் பத்திரிக்கை துறையின் கொள்கை முடிவா?
மத்திய மாநில அரசின் ஆளும் கட்சி தரப்பில் இருந்து தொடர்ந்து சமூகநலனுக்கான பத்திரிகைகளை புறக்கணித்து வருகிறது. செய்தித்துறை செய்திக்கு முக்கியத்துவமா?அல்லது சர்குலேஷனுக்கு முக்கியத்துவமா?எது என்பதை வெளிப்படுத்த வேண்டும். மேலும்,சினிமா செய்திகள் விளையாட்டு செய்திகள், விளம்பர செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள், மக்களுக்கு தேவையற்ற செய்திகள், பொய்யான செய்திகள், வியாபார நோக்க செய்திகள், இதில் எதை போட்டாலும், அதையும் சர்குலேஷனில் கணக்கெடுத்து கொள்கிறதா? மத்திய மாநில அரசின் செய்தித் துறை.?
மேலும், மக்கள் பத்திரிக்கை வாங்கி படிக்கும் மனநிலையில் இல்லாத போது எப்படி சர்குலேஷன் காட்டி பத்திரிகைகள் இந்த சலுகை விளம்பரங்களை பெறுகிறது? இதற்குள் மிகப்பெரிய மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இது சம்பந்தமாக ஆர்.டி. ஐ .யில் கேட்கின்ற கேள்விகளுக்கு எந்த தகவலும், பதிலும் இல்லை . பத்திரிக்கை துறை அரசுக்கா? ஆளும் கட்சியினருக்கா? அல்லது மக்களுக்காகவா? எது என்பதை மத்திய மாநில அரசின் செய்தி துறை தெளிவுபடுத்த வேண்டும் .
கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்றால், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளை எப்படி நடத்துவது? அது எப்படி மக்களிடம் உண்மை செய்திகளை கொண்டு செல்ல முடியும்? இந்தப் போராட்டத்தில் தான் பத்திரிக்கைத்துறை இருந்து வருகிறது. இதில் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் நாங்கள் மட்டும்தான் பத்திரிக்கை எங்களுக்கு மட்டுமே நீங்கள் சலுகை விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் இந்த பத்திரிகைகளுக்கு எல்லாம் கொடுக்கக் கூடாது என்பதை ஒரு உள்ளடி அரசியல் வேலை தொடர்ந்து 50 ஆண்டுகளாக செய்து வருகிறது.
இதில் பத்திரிக்கைக்கு தகுதியற்றவர்கள் அதிக அளவில் இருக்கின்றது. தகுதியான பத்திரிகைகளுக்கு கொடுப்பதற்கு கூட இந்த சலுகை விளம்பரங்களை மறுக்கப்பட்டு வருகிறது. மேலும்,தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த பத்திரிகைகளுக்கு சர்குலேஷன் என்பதை பார்க்காமல் இணையதளத்தின் அதன் பத்திரிக்கை செய்திகளை பார்த்து, இணையதளத்தின் பார்வையாளர்களை பார்த்து, அதற்கும் சலுகை விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் மற்றும் தமிழ்நாடு சமூகநலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும் , தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அரசாணை வெளியிட்டு இருக்கிறார். ஒரு செய்தியாளர் பத்தாண்டுகள் பணியாற்றி, அவர் இறந்தால் குடும்பம் நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் 15 ஆண்டு, 20 ஆண்டு அதற்கு மேலாக பணத்தின் மதிப்பு இறந்த குடும்ப நலநிதிக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சியில் பணிபுரியக்கூடிய அரசு அடையாள அட்டை வைத்திருக்கும் செய்தியாளர்களுக்கு மட்டும்தானா?அல்லது எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளுக்கும் மற்றும் இதில் செய்தியாளர்களாக பணியாற்ற கூடியவர்களுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதி உண்டா?இதில் மிகப்பெரிய குழப்பங்கள் இருக்கிறது.இதை செய்து துறை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். மேலும்,
இப்பிரச்சனைக்கு தீர்வு இறுதியானது நீதிமன்றம் தானா?