விண்வெளியில் சேட்டிலைட்டுகள் செயலிழப்பு, நாசா விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், சித்தர்கள், மகான்கள் சொன்னது நடக்கப் போகிறதா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

ஜனவரி 04, 2025 • Makkal Adhikaram

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பூமியில், எந்தெந்த காலகட்டத்தில் எது நடக்கும் ?என்பதை எல்லாம் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு, சென்றிருக்கிறார்கள். அது காலத்தின் கட்டாயத்தில் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது. 

இது தவிர, சில அற்புதங்களை நிகழ்த்திய மகான்கள், சித்தர்கள் இதையெல்லாம் சொல்லிவிட்டு தான் போயிருக்கிறார்கள். ஆனால், உலகில் உள்ள மக்கள் செல்போன் இல்லாமல், இன்டர்நெட் இல்லாமல், டிவி இல்லாமல், அவர்களால் வாழ முடியுமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.  

ஒரு பக்கம்  நாட்டில் ஏழ்மையும், இன்னொரு பக்கம் சொகுசும், போட்டி, போட்டு, மக்களை போராட்ட வாழ்க்கையில் தள்ளிக் கொண்டிருக்கிறது. இங்கே இருப்பவனும் போராடிக் கொண்டிருக்கிறான். இல்லாதவனும் போராடிக் கொண்டிருக்கிறான். இதுதான் இன்றைய கலிகாலத்தின் உச்சம். 

மேலும், பூமியில் வாழ்கின்ற மக்கள் ,மனசாட்சி இல்லாமல் வாழ்ந்து, மனசாட்சி இல்லாமல் பேசி, உறவுகளுக்குள் போட்டி, பொறாமை, நட்புகளுக்குள் ஏமாற்றும் ,வஞ்சகம் சூழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தால், இந்த பூமி எத்தனை நாளைக்கு எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருக்கும் ? 

வாழ்க்கை என்பது இயற்கை எல்லோருக்கும் ஒரே காற்று தான் கொடுக்கிறது. ஒரே வெளிச்சம் தான் கொடுக்கிறது. ஆனால், அதனிடம் வேற்றுமைகள் இல்லை. விலங்குகளிடம் வேற்றுமைகள் இல்லை. மனிதர்களிடம் மட்டும் இவ்வளவு வேற்றுமைகளா? மேலும்,

 சித்தர்கள், மகான்கள் சொன்ன சேட்டிலைட்டுகள் செயல் இழுக்குமா ? நாசா விஞ்ஞானிகளும், அதைதான் எச்சரித்துள்ளனர். 

நாட்டில் செல்போன், டிவி, இன்டர்நெட், இல்லாமல் வாழ முடியாது என்று இன்று வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்களும், இளைய தலைமுறைகளும், நாசா விஞ்ஞானியின் எச்சரிக்கையை திரும்பிப் பார்ப்பார்களா? அதாவது உலக நாடுகள் விண்வெளி  ஆய்வுக்காக  அனுப்பப்பட்ட சேட்டிலைட்டுகள் வானமண்டலத்தில் குப்பைகளாக காட்சியளிக்கிறது. 

அது பூமியின் சுற்றுப்பாதை, மனிதர்கள் மோட் பொருள்கள், ஸ்பேஸ் எக்ஸ்ப்ளரேஷன் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் ஆகியவற்றால் நெரிசலாக உள்ளது. ஏனெனில், கெஸ்லர் நோய்க்குறி எனப்படும் டிப்பிங் பாயிண்ட் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

மேலும், நாசா விஞ்ஞானிகள் இது பற்றி டொனால்ட் கெஸ்லரால் முன்மொழியப்பட்ட கெஸ்லர் நோய்க்குறி, இந்த அடுக்கடுக்கான மோதல் காட்சி பூமியின் சுற்றுப்பாதையை பயன்படுத்த முடியாததாக செய்து உலக அளவில், தகவல் தொடர்பு,(space) விண்வெளி பயணங்கள், சீர்குலைக்க கூடும். எச்சரிக்கை செய்துள்ளனர். 

அது மட்டுமல்ல, விண்வெளியில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குப்பை துண்டுகள் மற்றும் மில்லியன் கணக்கான சிறிய துண்டுகளுடன் விண்வெளி உள்கட்டமைப்பு க்ரிட்டிக்கல் Critical) ரிஸ்க்காக உள்ளது என ESA தரவுகள் தெரிவித்துள்ளன. 

இதனால்,விண்வெளியில் முன்னாடி இல்லாத ஆபத்துக்களை ஸ்பேஸ் ( space ) எதிர்கொள்கிறது. எதுவுமே ஒரு அளவு தான். அளவுக்கு அதிகமாக விண்வெளியில் ,இவையெல்லாம் குப்பைகளாக தேங்கும் போது எதுவும் பயனற்று போகும் வாய்ப்பை மக்கள் அனுபவிக்கும் காலம் விரைவிலா….?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *