முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு சட்டம் வேறு, அரசியலுக்காக எப்படியும் பேசுவது வேறு, அதனால், அரசியலமைப்பு சட்டத்தை ஸ்டாலின் அரசியலாக்காக எப்படியும் பேச முடியுமா?

Follow Us அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அரசியலமைப்பு சட்டத்தை பற்றி புரியாதவர்களுக்கு கூட புரியும்படி விளக்கமாக மிகத் தெளிவாக ஜனாதிபதி மூர்மு விளக்கியுள்ளார்.

அதற்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். அதாவது ஜனாதிபதி மூர்மு மத்திய அரசுக்கு ஆதரவாகவும், சொல்படியும் செயல்படுகிறார் என்கிறார். அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமும், அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றியது.

ஆனால், இவர் பேசுவது அடாவடி அரசியல். நாட்டில் எந்த சட்டத்தில் மாநிலத்திற்கு சுயாட்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது? ஒரு முதலமைச்சர் வரைமுறையோடு தான் பேச வேண்டும். வரைமுறை இல்லாமல் பேசுகின்ற நிலை இப்போது தான் பார்க்கிறேன்.

இதுவே இந்திரா காந்தி காலத்தில் ஸ்டாலின் இப்படி பேசி இருந்தால்,இந்நேரம் அரசியலமைப்பை கேலிக்கூத்தாக பேசினார் என்று ஆட்சியை கவிழ்த்து, ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்திருப்பார்.

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி உச்சநீதிமன்றத்திற்கு, தீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் கிடையாது. யாருக்குமே அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு அதிகாரம் இல்லை. வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு,,அந்த சட்டமும் ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்தால் தான் அது சட்டமாக்கப்படும்.

நீதிபதிகள் ஒப்புதல் கொடுத்தால் அது சட்டமாகாது. இது கூட புரியாமல் பேசுவது முதலமைச்சருக்கு உள்ள தகுதியை ஸ்டாலின் இழப்பார். மேலும்,தமிழ்நாட்டில் எல்லோரும் முட்டாள்கள் கிடையாது.அதனால் நீ சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் கிடையாது.

தவிர,மக்கள் எங்களுக்கு வாக்களித்து விட்டார்கள். அதனால் நாங்கள் மந்திரியாகிவிட்டோம். எப்படியும் பேசுவோம் என்றால்,அதற்கு சட்டத்தில் இடம் இல்லை. உங்களை மந்திரி ஆக்கியது சட்டப்படி மக்களாட்சி செய்ய தான் மந்திரியாகி இருக்கிறார்கள். அதுவாவது தெரியுமா?

ஒருவேளை செய்தித்துறை இவருக்கு இப்படி எல்லாம் தவறான செய்திகளை கொடுத்து,மக்களாட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறார்களா? அல்லது மக்களுடையே திமுக சட்டத்திற்கு புறம்பான ஒரு ஆட்சியை நடத்துகிறது என்ற அவ பெயரை ஏற்படுத்துகிறார்களா? யாருக்கு தெரியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *