போலி பத்திரிகைகளையும் போலி நிருபர்களையும் மத்திய அரசு களை எடுக்க ஆரம்பித்து விட்டதா ?

அரசியல் இந்தியா ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மே 30, 2024 • Makkal Adhikaram

நாட்டில் போலி பத்திரிகை நிருபர்கள் ,போலி பத்திரிகைகள் அதிக அளவில் பெருகி ,அதனால் சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லை .ஆனால் அவைகள் சமூகத்திற்கு தீமைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், மத்திய அரசு அதை எல்லாம் களை எடுக்க புதிய சட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அது இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு RNI லாகின் போர்ட்டல், இணையதளம் அதில் கேட்கின்ற கேள்விகள் அத்தனைக்கும் பதில் அளித்தால் தான், அது ஏற்றுக் கொள்ளும்.இல்லையென்றால் அது ஏற்றுக் கொள்ளாது .

மேலும் தினசரி பத்திரிகை என்று சலுகை ,விளம்பரங்களை வாங்கிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் அரசை ஏமாற்றிக் கொண்டு, பொய்யான ஆடிட் ரிப்போர்ட்களை கொடுத்துக்கொண்டு, சலுகை, விளம்பரங்கள், பஸ் பாஸ் வாங்கி கொண்டு இருக்கிறார்கள். அது இனிமேல் நடக்காது. தினசரி பத்திரிக்கை குறைந்தபட்சம் 10,000 பிரதிகளை தினமும் அச்சு அடித்தாக வேண்டும் . அப்படி அடிக்காமலே இந்த காப்பீ to ஜெராக்ஸ் பத்திரிகைகள் 200 பேப்பர், 100 பேப்பர், 300 பேப்பர் என்று அச்சு அடித்தும், அடிக்காமலும் பஸ் பாஸ் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.அது எங்கள் திறமை என்று இவர்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும், அந்தத் திறமை இனி வேலைக்காகாது.

 ஏனென்றால், இவர்கள் எந்த அச்சகத்தில் பிரின்ட் அடிக்கிறார்களோ, அந்த அச்சகத்தின் உரிமையாளர் இவ்வளவு பிரதிகளை இவர் தினமும் அச்சடிக்கிறார் என்று அவர் சான்று அளிக்க வேண்டும். அவர் எத்தனை பேப்பர் அச்சடிக்கிறார்? எங்கு பேப்பர் வாங்குகிறார்? அதற்கான ஜிஎஸ்டி கணக்கு அதில் கொண்டு வர வேண்டும். அது மட்டுமல்ல, இவர்களுடைய சேல்ஸ் ரிப்போர்ட் எவ்வளவு? அத்தனை விதிமுறைகளும் அதில் கேட்கும்போது நூற்றுக்கு பத்து பத்திரிகை கூட தேருமா? என்பது சந்தேகம் . இதில் சாமானிய சமூகநலன் பத்திரிகைகள் அவர்கள் ஆயிரம் இரண்டாயிரம் அடித்தாலும் அதை எல்லாம் எடுத்துக் கொள்கிறார்கள் .

அதிலும் தரமாக, ஒழுங்காக வெளி வருகிறதா? அதனுடைய இணையதளம் இது எல்லாம் பார்க்கிறார்கள். செய்திகளின் தரம் பார்க்கிறார்கள். இதை அத்தனையும், இனி பத்திரிக்கை துறைக்கு போட்ட கடிவாளம் தான். இது ஒரு நல்ல விஷயம் தான் .பத்திரிக்கை துறையை சீர் செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுக்கின்ற ஒரு நல்ல திட்டம் என்று சொல்ல வேண்டும். மேலும், நான் தற்போது கூட செய்தித்துறை இயக்குனரிடமும், செயலாளரிடமும் தெரிவித்தேன். ஒரு கார்ப்பரேட் நிறுவனம் பத்திரிக்கை நடத்துவதற்கும், எங்களைப் போன்ற ஒரு தனி மனிதன் இந்த சமூக நன்மைக்காக பத்திரிகைகள் நடத்துவதற்கும், அதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கிறது? அது உங்களுக்கு தெரியும் அல்லவா? என்று கேட்டேன். அவர்கள் புரிந்து கொள்கிறார்கள் .ஐஏஎஸ் அதிகாரிகளை பொறுத்த அளவில் அவர்களுக்கு சப்ஜெக்ட் புரிகிறது. நான் இன்னும் செய்தி துறைக்கு கேட்கிறேன். பத்திரிக்கை என்பது மக்களுக்காகவா? அல்லது ஆட்சியாளர்களுக்காகவா? இதற்கு பதில் தர முடியுமா?

ஏனென்றால், கார்ப்பரேட்டுகள் மக்களுக்காக பத்திரிக்கை நடத்தவில்லை. ஆட்சியாளர்களுக்காக நடத்திக் கொண்டிருக்கும் பத்திரிகைகள் அதிகம். இது தவிர, அரசியல் கட்சிகளுக்காகவும், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் நடத்துகின்றனர். இவர்களுக்கு எல்லாம் மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கும் போது, சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு இதுவரை அந்த சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல் இருந்தது செய்தி துறையின் மாபெரும் தவறு. 

மேலும், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும். மக்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டும். இதை சரி செய்துக் கொள்வது அரசின் புத்திசாலித்தனம் . ஆனால், அதை பாராட்டிவிட்டு, மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், பத்திரிகையும் ,தொலைக்காட்சியும் ஒரு பெரிய ஊடக பிம்பத்தை வியாபாரத்திற்காக மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வேலைதான், இந்த கார்ப்பரேட் ஊடகங்களின் மறைமுக அரசியல் ஊடக வியாபாரம் .

எந்த நோக்கத்திற்காக? பத்திரிக்கை இருக்க வேண்டுமோ, அந்த நோக்கத்திற்காக அவர்கள் பத்திரிகை நடத்தவில்லை. இதையும் இயக்குனரிடமும், செயலாளரிடமும் தெரிவித்தேன். நாங்கள் நீதிமன்றத்திற்கு போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் .எத்தனை நாளைக்கு  மக்களுடைய வரிப்பணத்தை இவர்களே சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்? நாங்க எல்லாம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?மேலும், அடிக்கடி சமூகநீதி, சமூக நீதி என்று பேசிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு இன்னும் இந்த சமூக நீதி கிடைக்கவில்லை. அநீதி தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது .

அதற்கு நிச்சயம் நீதிமன்றத்தில், நீதி வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நான் அதை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினேன். சமூக நலன் பத்திரிகைகளில் அதற்கான தகுதி, தரமான பத்திரிகைகளை மாவட்டத்திற்கு 10 பத்திரிக்கையாவது தேருமா? என்பதை கணக்கிட்டு எடுத்துக் கொள்ளுங்கள் .அதில் அரசியல் தலையிடு இன்றி தேர்வு செய்தால், நிச்சயம் இந்த சமூகத்திற்கு இந்த பத்திரிகைகள், இணையதளங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.மேலும்,ஒரு தனி மனிதன் பத்திரிக்கை நடத்தும்போது,

 இந்த துறையில் எவ்வளவு போராட்டங்கள் ? எவ்வளவு அவமானங்கள்? எவ்வளவு வேதனைகள்? எவ்வளவு வலிகள் சுமந்து பத்திரிகை நடத்த வேண்டி உள்ளது .ஆனால், பத்து லைன் எழுத தெரியாதவன் எல்லாம், நானும் பத்திரிக்கையாளன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்.திமுக, அதிமுக ஆட்சியில்

எந்தெந்த பத்திரிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ?என்று தெரியாமல் இருந்ததும் ,அரசியல் லாபங்களுக்காக அதை தவிர்த்தது, செய்தி துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் உண்மையை புரிந்து கொள்ள வில்லை . இனியாவது அந்த தவறுகள் நடக்காமல் இருந்தால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *