தமிழ்நாட்டில் இந்து கோயில்களின் சொத்துக்களை பொது பயன்பாட்டிற்கு ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து வரும் ஜூலை 21 இல் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரர் சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் .

அரசியல் ஆன்மீகம் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூலை 20, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் இந்து கோயில்களின் சொத்துக்களை பாதுகாக்க இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரர் சுப்பிரமணியம் தலைமையில் ஜூலை 21 ல் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். 

மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கோயில்கள் ,மாநில அரசின் பிடியில் இருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு பல லட்சம் நிலங்கள், காலியிடங்கள் ,வீடுகள் இருக்கின்றன. கோயில்களின் வருமானம் ,கோயில் சொத்துக்களை பாதுகாக்க ,பராமரிக்க மட்டுமே தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ,இந்து சமய அறநிலையத்துறை சுமார் 75 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்யும் திராவிட அரசியல் கட்சிகளால் பத்தாயிரம் கோயில்களும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும், அழிக்கப்பட்டு அல்லது காணாமல் போனதாக இந்து சமய அறநிலையத்துறை ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

மேலும், இன்று கோயில்களின் சொத்துக்களை பொது பயன்பாட்டுக்கு என கலெக்டர் அலுவலகம், பேருந்து அலுவலகம் ,சமத்துவபுரம், சமூக நலத்துறை என பலவகைகளில் பகல் கொள்ளையாக கோயில் சொத்துக்களை அரசு கபளீகரம் செய்துள்ளது. அது மட்டுமல்லாமல், கோயில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடு, வாடகையோ கூட தருவதில்லை .அதேசமயம் அரசு நிலங்களை விட அதிகமான நிலங்களை, கிறிஸ்தவ மத ஸ்தாபனங்கள் வைத்துள்ளன. அவற்றில் ஒரு அங்குல நிலத்தை கூட போதும் பயன்பாட்டிற்கு அரசு கையகப்படுத்தியது உண்டா?

அதேபோல் மசூதிகளின் சொத்தாக கருதப்படும் வக்ஃப் வாரிய சொத்துக்களை பாதுகாக்க அரசு தமிழர்களின் வரிப்பணத்தில் இருந்து அள்ளிக் கொடுத்து, முஸ்லிம்களைக் கொண்டே நிர்வாகம் செய்ய வைக்கிறது. ஒருபுறம் இந்து கோயில்களின் சொத்துக்களை அரசாங்கம் திட்டமிட்டு சூறையாடுகிறது. மறுபுறம் ஆக்கிரமித்து கோயில் நிலங்கள் காணாமல் போக அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணை போகின்றனர்.

 பிரம்மாண்டமான கோயிலை நிர்மாணித்த நமது முன்னோர்கள், அதனை நிர்வகிக்க பாதுகாக்க பல ஆயிரம் கோடி உள்ள சொத்துக்களை இறைவன் பெயரில் எழுதி வைத்துள்ளனர். நீதிமன்றமும் கோயில் சொத்துக்கள் கோயில் பயன்பாட்டுக்காக தான் இருக்க வேண்டுமே ஒழிய, அதனை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தக் கூடாது என கூறி வந்துள்ளது. 

எனவே, கோயில் சொத்துக்களை பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். கோயில் சொத்துக்களை பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறைகள் ஏற்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது.எனவே,

 கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி, பக்தர்களை ஒன்றிணைத்து வருகிற ஜூலை 21ஆம் தேதி, தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதற்கு தமிழக மக்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *