அக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. செய்திகளாக சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மத்திய, மாநில அரசின் செய்தித்துறை அதிகாரிகளுக்கும், அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது .ஆனால், யாருமே அது பற்றி எந்த ஒரு விளக்கமும் கேட்கவில்லை.
மேலும், சட்ட நடவடிக்கையாக தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் எமது மூத்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்துசாமி இது சம்பந்தமாக லீகல் நோட்டீஸ் மத்திய, மாநில செய்தி துறை உயர் அதிகாரிகளுக்கும், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுகுக்கும் அனுப்பப்பட்டது. அதில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா என்னுடைய மக்கள் அதிகாரம் பத்திரிகையின் அனைத்து தகவல்களும் மற்றும் என்னுடைய ஐ டி ப்ரூப் கேட்டுள்ளது. அனைத்தும் எங்களுடைய மூத்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்துசாமி மூலம் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மக்கள் அதிகாரம் பத்திரிகையின் மின்னஞ்சல் முகவரி மூலம் உடனுக்குடன், இது சம்பந்தப்பட்ட இணையதள செய்திகளை பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பதை பொறுத்து தான், சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகளின் எதிர்காலம் அதில் அடங்கியுள்ளது.
மேலும், மத்திய மாநில அரசின் செய்தித் துறையில் உள்ள டி ஐ பி ஆர் மற்றும் டி ஏ வி பி யின் சட்டங்களை மாற்றாமல் சமூக நலன் பத்திரிகைகளுக்கு வளர்ச்சியும், எதிர்காலமும் இல்லை. இது சமூக நீதிக்கு எதிரான சட்டமாகத்தான் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த சட்டங்கள் போடப்பட்டுள்ளது. அதாவது சர்குலேஷன் என்பது ஒரு தவறான சட்டம். கட்சி பத்திரிக்கையும் சர்குலேஷனில் வந்து விடுகிறது. அதில் எந்தெந்த பத்திரிக்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்? என்பது கூட கிடையாது.அது மட்டும் அல்ல, இந்த சலுகை, விளம்பரங்கள் மத்திய மாநில அரசின் கொள்கை முடிவாகவே உள்ளது. இது எல்லாம் பத்திரிக்கை சுதந்திரத்தின் அவலங்கள் .
மேலும், செய்தி துறையில் ஒரு மிகப்பெரிய ஊழல் இந்த விளம்பரங்கள் மூலம் நடந்து வருகிறது. அது இந்த அரசின் விளம்பரங்களை ஏஜென்சி மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இந்த விளம்பரங்களில் 30 சதவீதம் கமிஷனை அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை கொண்டு சேர்க்கிறார்கள் என்ற தகவல். இதை உடனடியாக நிறுத்த வேண்டும். அதுவும் செய்தித்துறை இயக்குனர் எந்த பத்திரிக்கைக்கு சொல்கிறாரோ, அந்த பத்திரிக்கைக்கு இந்த ஏஜென்சி அரசின் விளம்பரத்தை கொடுப்பாராம். ஏன் அதை நேரடியாக கொடுக்க கூடாதா?
இப்படி எல்லாம் இந்த மத்திய மாநில அரசின் செய்தித் துறை சட்டங்கள் பத்திரிக்கை துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. மேலும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் கார்ப்பரேட் பத்திரிக்கையில் பணியாற்றுபவர்கள் மட்டும்தான் உறுப்பினர்கள். அதாவது அரசின் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும்தான் அதில் உறுப்பினராக முடியும். அது எந்த தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது? என்பதை பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், ஸ்டாலினுக்கு இது பற்றி எதுவும் தெரியாது. எப்படியோ குருட்டு அதிர்ஷ்டத்தால் முதலமைச்சராகிவிட்டார். இதனால், நாங்கள் எல்லாம் இந்த அதிர்ஷ்டசாலிகளிடம் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே,இதை சரி செய்ய வேண்டிய முக்கிய கடமையாக பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும் வைக்கின்ற முக்கிய கோரிக்கை .