தூய்மை பணியாளர்களின் பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ பணத்தை அவர்கள் கணக்கில் செலுத்தாமல் JP VINCIPLE ஒப்பந்த நிறுவனம் தூய்மை பணியாளர்களை ஏமாற்றுகிறதா ? இதற்கு நகராட்சி அதிகாரிகள் உடந்தையா?

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மாவட்டம் ரிசன்ட் போஸ்ட்

அக்டோபர் 07, 2024 • Makkal Adhikaram

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கஸ்பா புதுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் இந்துமதி, இவர் தூய்மை பணியாளராக ஆற்காடு நகராட்சியில் பணியாற்றி வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பது,

JP VINCIPLE ஒப்பந்த நிறுவனம் தூய்மை பணியாளர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ செலுத்தாமல் ஏமாற்றுகிறது .இதற்கு நகராட்சி அதிகாரிகள் துணையுடன் நகராட்சியில் போலி பில் தயார் செய்து எங்களை ஏமாற்றி வருகிறார்கள்.மேலும்,அவர்

நான் ஆற்காடு நகராட்சியில் தூய்மை பணி செய்யும் தனியார் JP VINCIPLE நிறுவனத்திற்கு கீழ், தூய்மைபணி மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்தேன். நான் மட்டுமில்லாமல் எனது தாயார் தூய்மை பணியாளராகவும், எனது தம்பி ஓட்டுனராகவும், பணி புரிந்து வந்தோம். மேற்கண்ட நிறுவனம் எங்களுக்கு மட்டுமில்லாமல் நகராட்சியில் பணி புரியும் அனைத்து பணியாளர்களுக்கும். சரியான முறையில் வருங்கால வைப்பு நிதி மற்றும் சேம நல நிதியினை செலுத்தவில்லை. இதனை JP VINCIPLE நிறுவனத்திடம் கேட்டதற்கு, உங்கள்  கணக்கில் PF தொகையினை செலுத்தி விட்டோம் என்று கூறியதன் பெயரில் நான் EPSO ஆன்லைனில் என்னுடைய UAN எண்ணினை பதிவு செய்து பார்த்ததில் மேற்கண்ட நிறுவனம் எனக்கும் என்னுடன் பணிபுரியும் நபர்கள் யாருக்கும் pF  செலுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். 

மேற்கண்ட நிறுவனம் ஆற்காடு மட்டுமில்லாமல் விஷாரம், திருத்தணி ஆகிய நகராட்சிகளிலும் இதேபோன்று பணியாளர்களுக்கு PF மற்றும் ESI தொகையினை சரியான முறையில் செலுத்தவில்லை. என்பதை நான் RTI போட்டு அறிந்துகொண்டேன். மேலும்,

இந்நிறுவனம் PF பில்களை போலியாக தயாரித்து அவர்கள் பணி செய்யும் இடங்களில் (ஆற்காடு, விஷாரம், மற்றும் திருத்தணி) நகராட்சிகளில் செலுத்தி பில் பட்டியல்களை பெற்றுள்ளனர். ஆற்காடு நகடராட்சியில் துப்புரவு அலுவலர், துப்புரவு ஆய்வாளர், மற்றும் ஆணையாளர் ஆகிய அதிகாரிகளின் துணையுடன், போலியான பில்களை அளித்து மாதந்தோறும், பில் பட்டியல் பெற்றுள்ளனர்.

மேலும் இந்த நிறுவனம் ஆற்காடு நகராட்சியில் 165 பணியாளர்கள் திருத்தணியில் 120 பணியாளர்கள்.விஷாரத்தில்96 பணியாளர்களையும் வைத்து பணிசெய்ய வேண்டும். ஆனால் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே பணியாளர்களை பணியமர்த்தி உள்ளனர். அதேபோல் மொத்தமாக 380 பணியாளர்களுக்கு செலுத்தவேண்டிய Pf மற்றும் esi தொகையினை செலுத்தாமல் 132 பணியாளர்களுக்கு மட்டுமே செலுத்தி உள்ளனர்.

 இதனை பலமுறை ஆற்காடு நகராட்சியின் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இவ்வாறாக, தூய்மை பணியாளர்களுக்கு செலுத்த வேண்டிய PF மற்றும் Esi தொகையினை, முறையாக செலுத்தாத, JP VINCIPLE நிறுவனம் மீதும், அதன் உரிமையாளரான  நாகராஜன்  மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, போலியான பில்களை ஆய்வு செய்து, மேற்கண்ட JP VINCIPLE நிறுவனம் எந்த இடத்திலும் பணி செய்யாத வண்ணம் JP VINCIPLE நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் இட்டு, தூய்மை பணியாளர்களின் வாழ்வை, காத்து எங்களுக்கு சேர வேண்டிய PF மற்றும் esi தொகையினை பெற்றுத் தருமாறும், கேட்டுக்கொள்வதுடன், மேற்கண்ட நிறுவனத்திடம் இணைந்து ஊழல் புரிந்துள்ள நகராட்சி அதிகாரிகளின் மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *