அக்டோபர் 12, 2024 • Makkal Adhikaram
ஒரு நாளைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எத்தனை இடங்களில் ஆய்வு கொள்கிறார் ? இவருக்கு கீழ் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் மாவட்டத்தில் எத்தனை இடங்களில் ஒரு நாளைக்கு ஆய்வு மேற்கொள்கிறார்கள்? இந்த புள்ளி விவரங்களை தினமும் இவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்துவார்களா ?
மேலும், பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டு அதன் தரம், பாதுகாப்பு பற்றி சான்று என்ன? என்று மக்களுக்கு தெரியப்படுத்துவார்களா? இது போல், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட விபரத்தினை மக்களுக்கும், பத்திரிகைகளுக்கும், தெரியப்படுத்துங்கள் .பிறகு மக்கள் இந்த எக்ஸ்ட்ரா வேலையைப் பார்ப்பார்கள்.மேலும்,
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நீங்கள் சாப்பிடும் போது உணவு சரி இல்லையா? அதை உடனே போட்டோ எடுத்து எங்கள் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்புங்கள் .நாங்கள் அதை புகார் வழக்காக பதிவு செய்து விசாரணைக்கு உட்படுத்துகிறோம். மக்கள் திருடனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க சொல்வது போல் தான், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சொல்வது. மக்கள் தவறுகளை கண்டுபிடித்து உங்களுக்கு அனுப்பினால், நீங்கள் எதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 50 பேர் வேலை செய்கிறீர்கள்? நீங்கள் மேற்பார்வை செய்துவிட்டு, சம்பளம் வாங்கிக் கொள்கிறீர்களா ? களத்தில் இறங்கி வேலை செய்யுங்கள். அப்போதுதான் இப் பிரச்சனைக்கு உண்மையான தீர்வு .
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த பகுதியில் உள்ள ஹோட்டல் அல்லது மிக்சர், ஸ்னாக்ஸ் தயாரிக்கும் கடைகள் ,அவர்கள் எந்த எண்ணெயில் தயாரிக்கிறார்கள் ?என்பதை நீங்கள் முதலில் ஆய்வு செய்யுங்கள். அடுத்தது கும்மிடிப்பூண்டியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு எண்ணெய் கம்பெனிகள் தயாரிப்பதில், அதன் தரம் என்ன? அதன் பாதிப்பு என்ன? அதைப் பற்றி முதலில் ஆய்வு செய்யுங்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் அதிகப்படியான சமையல் எண்ணெய் தயாரிக்கும் கம்பெனிகள் உள்ளது.
அதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாமாயில் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய்கள் அதில் எந்த அளவுக்கு கெமிக்கல் கலப்படம் செய்கிறார்கள்? அதே போல் பருப்பு வகைகளில் கலப்படங்கள், அதாவது முதல் தரத்தையும், கடைசி தரத்தையும் ஒன்றாக கலப்படம் செய்து திருவள்ளூர் பெரிய கடைகளிலே விற்கிறார்கள் . மக்கள் பணத்தை கொடுத்தும், அதற்கான தரமான பொருள் கிடைக்கவில்லை.
அதேபோல் ரோடு ஓரக் கடைகளில் இருக்கக்கூடிய பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் வகைகள் தரமானதாக இல்லை.அந்த எண்ணெய் கருப்பாகி பயன்படுத்தக் கூடாது என்ற அளவில் கூட, அதே எண்ணெயில் சுட்டு விற்கிறார்கள் .ஆனால், இதையெல்லாம் தினமும் மக்கள் வாங்கி சாப்பிட்டு தான் செல்கிறார்கள். அதனால் தான், இன்று மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் வர முக்கிய காரணமாகிறது.
மேலும்,இன்று இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பிபி, சுகர், கொலஸ்ட்ரால் வர காரணம் இந்த தரமற்ற எண்ணைகளால் விற்கக்கூடிய தின்பண்டங்கள் மற்றும் தரமற்ற கம்பெனிகள் தயாரிக்கும் சமையல் எண்ணெய்கள் இதுதான் முக்கிய காரணம் .இதனால் டாக்டர்கள் தான் வருமானம் பார்க்கிறார்கள். மக்கள் நோயில் அவதிப்படுகிறார்கள்.
அடுத்தது, கம்பெனிகளில் தயாரிக்க கூடிய இந்த பாமாயில் கம்பெனிகள் சுகாதாரமற்ற முறையில் அதை தயாரிக்கிறார்கள் .அந்த எண்ணெய்கள் மலிவான விலையில் கிடைக்கிறது என்று அதை வாங்கி உபயோகப்படுத்தும் மக்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல், அதுவே நோயை உருவாக்கும் சக்தியாக இந்த எண்ணை வகைகள் இருக்கிறது .அதனால், உணவு பாதுகாப்புத் துறை முதலில் கம்பெனிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
பிறகு, கடைகளில் விற்பனை செய்யும் தின்பண்டங்கள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், ரேஷன் கடைகளில் விற்கக்கூடிய பாமாயில் தரமானதாக இருக்கிறதா? என்பதை லேபுக்கு (Lab )கொண்டு போய் ஆய்வு செய்ய வேண்டும் . அப்போதுதான் இதற்கு தீர்வே ஒழிய, நீங்கள் வீடியோ போட்டு, அதைப் பார்த்து மக்கள், உங்களுக்கு அந்த உணவு போட்டோ எடுத்து அனுப்பி அதை புகார் வழக்காக பதிவு செய்து, விசாரணைக்கு உட்படுத்துவது, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.
மேலும், இதில் பணியாற்றக்கூடிய மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு பின்புலத்தில் இருந்து கொண்டு பணியாற்றினால், மக்களுக்கான உண்மையான சேவை இதில் கிடைக்காது. அதனால், இந்த போலித்தனமான வீடியோ போடும் வேலைகளை விட்டு, விட்டு களத்தில் இறங்கி எல்லோரும் பணியாற்றுங்கள் . அப்போதுதான் இப் பிரச்சனைக்கு தீர்வு .