அமுதம் கடைகளில் ரூ 499-க்கு 15 மளிகை பொருட்கள் விற்பனை! இதையே வெளியே வாங்கினால் எவ்வளவு ஆகும்?

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram

 தீபாவளி பண்டிகையொட்டி தமிழக அரசின் அமுதம் அங்காடி ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அது பொதுமக்கள் மத்தியில்இந்த 15 பொருட்கள் வெளியே வாங்கினால் கூடுதல் செலவு என இல்லத்தரசிகள் தெரிவிக்கிறார்கள்.தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி, நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைகள், இனிப்பு, பலகாரங்கள் ஆகும்.

தீபாவளிக்கு பலகாரங்களை வீடுகளில் செய்ய தொடங்கிவிட்டார்கள். இதை செய்ய முடியாதவர்கள் கடைகளில் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். வீடுகளில் கூட விற்பனை செய்வதற்காக ஆர்டரின் பேரில் பலகாரங்கள் செய்கிறார்கள்.இப்படியிருக்கையில் ஏழை எளிய மக்களால் மளிகை பொருட்கள் வாங்கி பலகாரம் செய்து தர இயலாது என்பதால் தமிழக அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி தீபாவளியையொட்டி குறைந்த விலையில் 15 மளிகை பொருட்களை மக்களுக்கு கொடுப்பது என்பதுதான். அந்த வகையில் ரூ 499 -க்கு மளிகை பொருள் தொகுப்பானது, அமுதம் பிளஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.இது தமிழக அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொகுப்பில் மொத்தம் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

கடுகு+ உளுத்தம் பருப்பு- 125 கிராம்

சீரகம்- 100 கிராம்

வெந்தயம்- 100 கிராம்

சோம்பு- 50 கிராம்

மிளகு- 50 கிராம்

மிளகாய்- 250 கிராம்

தனியா- 500 கிராம்

மஞ்சள் தூள் 50 கிராம்

புளி- 500 கிராம்

உப்பு- 1 கிலோ

உளுத்தம் பருப்பு – 500 கிராம்கடலை பருப்பு- 200 கிராம்

பாசிப்பருப்பு- 200 கிராம்

வறுகடலை- 200 கிராம்

பெருங்காயத்தூள்- 15 கிராம்

மொத்தம் 3.840 கிலோ கொண்ட பொருட்கள் ரூ 499 க்கு கிடைக்கிறது. எனினும் தமிழகத்தில் இயங்கும் வெளிநாட்டை சேர்ந்த சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்த 499 ரூபாயை விட விலை குறைவாகத்தான் இருக்கும் என நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள். மேலும் பொருளின் தரத்தையும் எடையையும் கூட அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோபாலபுரத்தில் உள்ள அமுதம் மக்கள் அங்காடியில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனையை அமைச்சர் சக்கரபாணி நேற்று தொடங்கி வைத்தார். உடன் அந்த துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் இருந்தார். இந்த 15 பொருட்கள் குறித்து மக்கள் கூறுகையில் இந்த அமுதம் அங்காடியில்தான் நாங்கள் எல்லா பொருட்களையும் வாங்குவோம்.

பொதுவாகவே இங்கு மற்ற கடைகளுடன் ஒப்பிடும் போது 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை விலை குறைவாகவே இருக்கும். இதனால் எங்களுக்கு மாதம் 100 முதல் 200 ரூபாய் வரை மிச்சமாகும். அது போல் தீபாவளியை முன்னிட்டு குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள்என்ற ஒரு முன்னெடுப்பை அரசு கொண்டுள்ளது.

இது நிச்சயம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இந்த பொருட்களை வெளியே வாங்கினால் ஜிஎஸ்டி எல்லாம் போடுவார்கள். ரேஷன் கடை என்பதால் அந்த பணம் நமக்கு மிச்சமாகும். இந்த 15 பொருட்களையும் வெளியே வாங்கினால் நிச்சயம் 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை செலவாகும். ஆனால் 500 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை பணம் மிச்சமாகும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *