நாட்டில் மருத்துவத்துறை, மருத்துவக் கல்வி ,வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளதால்,  வியாதிகளால் மக்களின் வாழ்க்கை இன்று போராட்டமானது ஏன் ?

மருத்துவ கல்வியும், மருத்துவத் துறையும், நாட்டில் வியாபாரமாக்கப்பட்டுள்ளது. அதனால், இன்று 10 வயது குழந்தை முதல் 70,80,வரை நோயினால் பாதிக்கப்பட்டு, ஒரு போராட்டமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்னென்ன காரணங்கள்?  ஒரு பக்கம் உணவு பழக்க வழக்கங்கள், அடுத்தது விவசாயிகள் கெமிக்கல் உரங்களைப் பயன்படுத்தி, பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, வேளாண் பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். மற்றொரு பக்கம் கலப்பட எண்ணெய்கள், தரமற்ற பருப்பு வகைகள், ரோட்டோர கடை பஜ்ஜி, போண்டா விற்பனையாளர்கள், ஃபாஸ்ட் ஃபுட் விற்பனையாளர்கள், […]

Continue Reading

தமிழ்நாட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஹோட்டல் உணவுகள் பொதுமக்களின் நலனில் அக்கறையின்றி பணம் மட்டுமே குறிக்கோள் ஏன்?

ஒரு காலத்தில் ஹோட்டல் உணவகங்கள் பேருக்காக நடத்தினார்கள். இப்போது பணத்திற்காக மட்டுமே நடத்துகிறார்கள். அதனால், மக்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஆனால், இந்த நோய் எப்படி வந்தது? இதற்கான பின் விளைவு என்ன?  என்பது பற்றி ஆய்வு செய்து பார்ப்பவர்களுக்கு மட்டும் தான் இந்த உண்மை புரியும். மேலும், தற்போதைய ஹோட்டல் உணவுகள், ரோட்டோரகடைகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்கள், (சைவ -அசைவ உணவகங்கள்) மெஸ் உணவகங்கள் ,ஒரு ஊருக்கு அல்லது ஒரு நகரத்திற்கு ஒன்று, […]

Continue Reading

காவிரி தண்ணீருக்கு கர்நாடகம் கைவிரிப்பு ! டெல்டா மாவட்ட விவசாயிகளை தமிழக அரசு காப்பாற்றுமா ?

தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பதில் கர்நாடக முதலமைச்சர் சித்ராமய்யா முடிவில், ஒட்டுமொத்த அங்குள்ள அரசியல் கட்சிகள் இரண்டாவது முறையாக கூட்டி, நாளை நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்க அழுத்தம் கொடுக்கிறது கர்நாடக அரசு . இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகளை காப்பாற்ற தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?  குருவைப் பயிர்களை காப்பாற்றுவதற்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் வருமா ?வராதா? அக் கிராம மக்களின் மனநிலை என்ன?

பரந்தூர் விமான நிலையம் வருமா ?அல்லது வராதா? என்ற சூழ்நிலையில் தான் இந்த திட்டம் இருந்து வருகிறது .ஒரு பக்கம் அரசு அதற்கான செயல் திட்டத்தை வகுத்து செயல்பட்டாலும், மக்களின் மனநிலை என்ன ?என்பது பற்றி இதுவரை எந்த ஒரு புள்ளி விவரமோ அல்லது கருத்து கேட்பு கூட்டமோ நடத்தவில்லை . மேலும், இது ஒன்றும் முடியாட்சி அல்ல. அரசர்கள் நினைத்தால், குடிமக்களே ஓரிடத்தில் இருந்து அப்புறப்படுத்தி அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை செயல்படுத்த முடியும். ஆனால், […]

Continue Reading

அரசியல் கட்சிகள்! அரசியல் தவிர்த்து, மக்களை முட்டாளாக்கும், பேச்சுக்களை பேசுவது, தமிழ்நாட்டின் அரசியலா?

அரசியல் கட்சிகள் நாட்டில் எதற்காக இருக்கிறது? அவர்களின் நோக்கம் என்ன? அவர்களின் செயல்பாடு என்ன? இதைப் பற்றி தமிழக மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று.  இந்த அரசியல் கட்சிகளின் செயல்பாட்டையும் ,பேச்சுக்களையும், நோக்கத்தையும், தெரிந்து கொள்ளாமல் முட்டாள்களின் கூட்டம், சுயநலவாதிகளின் கூட்டம், ரவுடிகளின் கூட்டம் இதற்கு தலைமையேற்று நடத்துகின்ற கூட்டமாக தான் சில கட்சிகள், இன்று தமிழ்நாட்டில் பேசி வருகிறது. முட்டாள்களுக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. எதை சொன்னாலும் கைதட்டி, விசில் அடிக்க […]

Continue Reading

மனிதனால் விஞ்ஞானத்தை உருவாக்க முடியும். ஆனால், இயற்கையை உருவாக்க முடியுமா ? விமான நிலையத்தை உருவாக்கலாம் .ஆனால், இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனித வாழ்க்கையை உருவாக்க முடியுமா ?

மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் போட்டி போட்டாலும்,  வாழ்க்கையில்  நிம்மதி, சந்தோஷம் அடைய முடியுமா ? விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரிக்க ,அதிகரிக்க மனித வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் குறைந்து கொண்டு தான் வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு, விஞ்ஞான வளர்ச்சி இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மனித வாழ்க்கையின் நிம்மதி ,சந்தோஷம் குறைந்துவிட்டது .உதாரணத்திற்கு செல்போன் வந்ததிலிருந்து, உறவுகளிடம் பேசுவதை விட ,செல்போனில் தான் மனித வாழ்க்கை சஞ்சரிக்கிறது. நண்பர்களிடம் பேசுவதை விட, செல்போனில் தான் மனித வாழ்க்கை செலவழித்து வருகிறது […]

Continue Reading