சிமெண்ட் ரோடு போட்டதாக கணக்கு காட்டி பணம் மோசடி – கூவி, கூவி தண்டோரா.

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram நிலக்கோட்டை அருகே மட்டப்பாறை ஊராட்சியில், சிமெண்ட் ரோடு போட்டதாக கணக்கு காட்டி, பணம் மோசடி செய்ததாக தண்டோரா மூலம் அறிவிப்பு செய்த சமூக ஆர்வலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, மட்டப்பாறை ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த மகேந்திரன் தலைவராகவும், ரமேஷ் துணைத் தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில், மட்டப்பாறை ஊராட்சியில் 2023 – 24 ஆம் ஆண்டு மகாத்மா […]

Continue Reading

தாக்குதலுக்கு ஆளான பெண் டிஎஸ்பி காயத்ரி திடீர் இடமாற்றம்.. அவசர அவசரமாக உத்தரவிட்ட அதிகாரிகள்!

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் காவல் துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த காளிகுமார் (வயது 35) (டிரைவர்). இவர் சமீபத்தில் வாகனத்தில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்த நாயக்கன்பட்டி விளக்கு அருகே காளிகுமார் சென்றபோது, ​​2 பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென காளிகுமாரை வழிமறித்து […]

Continue Reading

திண்டுக்கல் மாநகராட்சி வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் விவகாரம் – இ-சேவை மைய உரிமையாளர் கைது

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ-சேவை மைய உரிமையாளர் ரமேஷ்ராஜாவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.போலீசார் விசாரணையில் சரவணனுக்கு வங்கியில் பணம் செலுத்தியது போல் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தது வேதாந்திரிநகரைச் சேர்ந்த ரமேஷ்ராஜா என தெரிந்தது.  இவர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். […]

Continue Reading

ஆன்மீகவாதி மகாவிஷ்ணு செய்த தவறு என்ன ? பாவ புண்ணியத்தின் கணக்கு பற்றி பேசியது தவறா? அரசியலில் தவறே இருப்பதால் அமைச்சர்களுக்கு அது பற்றி பயமா?

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram மகாவிஷ்ணுவை பள்ளியில் பேச அழைத்தது, அரசு பள்ளியின் ஆசிரியர்கள். அவர்கள் அழைத்ததும் தவறு இல்லை. மகாவிஷ்ணு பேசியதும் தவறு இல்லை. இதற்கு இடையில் பேசிய ஊனமுற்ற ஆசிரியர் சங்கர் அரசியலாக்கி விட்டார். இது அரசியல் ஆவது தெரியாமலே திமுக அரசு அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இதனால், திமுகவிற்கு தான் பாதிப்பு. இது ஒரு சிறிய பிரச்சனை. இது தமிழக மக்கள் பேசும் அளவிற்கு ஆக்கியது திமுக ஆட்சியின் முட்டாள் தனம் […]

Continue Reading

What was the mistake of the mystic Mahavishnu? Is it wrong to talk about the account of sins and virtues? Are ministers afraid of politics because it is wrong?

September 10, 2024 • Makkal Adhikaram It was the teachers of the government school who invited Mahavishnu to speak at the school. It’s not wrong to call them. There is nothing wrong with what Mahavishnu said. Meanwhile, Shankar, a disabled teacher who spoke, politicized. The DMK government is politicising this without knowing it. This will affect […]

Continue Reading

குடும்பத் தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு மருமகனும் தற்கொலை!

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே குடும்பத் தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு மருமகனும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எல்லப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பழனிசாமிக்கும், படியூரில் ஹாலோ பிளாக் கம்பெனி நடத்தி வந்த அவரது மருமகன் ராஜ்குமாருக்கும் கடந்த 6 வருடங்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று காரில் எல்லப்பாளையம் கிராமத்திற்கு சென்ற ராஜ்குமார், அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த பழனிசாமியை […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டம் ,ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் .

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (50). அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்த இவர், ஒரு லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகத் தெரிகிறது, இதன் மூலம் இவரை நம்பி ஏராளமானோர் சீட்டுக்கட்டி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக இவரது வீடும் கடையும் பூட்டிய நிலையிலேயே இருப்பதைக் கண்டு அவரிடம் சீட்டுப் பணம் கட்டியவர்கள் கைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள […]

Continue Reading

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக 5 பாடப்பிரிவுகளை உருவாக்க இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாமக்கல் கலெக்டரிடம் மனு!

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக ஐந்து பாடப்பிரிவுகளை உருவாக்க மாவட்ட ஆட்சியாளரிடம்  மாணவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1.CSC, 2.ECE,  3.ME, 4.EEE ஆகிய நான்கு பாடப் பிரிவுகளில் ஏறத்தாழ 300க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். […]

Continue Reading

மகாவிஷ்ணு சொற்பொழிவுக்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் வந்தது எப்படி?: சமூக வலைதளத்தில் வைரல் பதிவு .

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram சென்னை: மகாவிஷ்ணு சொற்பொழிவு சர்ச்சையான நிலையில், அதில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர், அந்த நிகழ்ச்சிக்கு வந்தது பற்றிய ஒரு பதிவு சமூக வலைதளத்த வைரலாக பரவி வருகிறது. சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவாற்றிய பரம்பொருள் அறக்கட்டளையின் தலைவர் மகா விஷ்ணு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளியின் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் குரல் கொடுத்தார். மகாவிஷ்ணுவின் […]

Continue Reading

திண்டுக்கல் மாவட்டம்,செந்துறை பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தின் முன்பு கோர விபத்து .

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram செந்துறை பத்திரப்பதிவு அலுவலகத்தின் முன்பாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வேகமாக ஓட்டி வந்ததால், எதிரே வந்த டாட்டா ஏசி வாகனத்தின் மீது மோது அதே இடத்தில் மரணம் அடைந்தார்.  மேலும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தை குறைத்து கூடுமானவரைக்கும் தங்களுடைய உயிரை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Continue Reading