கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றும் . உலகப் போராக மாறுமா? – அச்சத்தில் உலக நாடுகள் .

அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram ஆரம்பத்தில் ஊக்கரைன், ரஷ்யா இடையே ஏற்பட்ட போர்!பிறகு இஸ்ரேல், காசா இடையே ஏற்பட்டு, ஹமாஸ்டன் போர் மூண்டது. நாளடைவில் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் களம் இறங்கி உள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவு தெரிவிக்கிறது. இப்படி ஒவ்வொரு நாடும் தனது நட்பு நாடுகளிடையே ஆதரவாக போரிட்டால்! அது உலகப் போராக மாறுமோ, என்ற அச்சத்தில் உலக நாடுகள் இருந்து வருகின்றன. அப்படி […]

Continue Reading

உப்பாறு அணைக்கு நீர் வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள, உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள், பெண்களுடன் வந்து பி.ஏ.பி., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறியதாவது: உப்பாறு அணைக்கு சட்டப்படி 1.3 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். இதன் வாயிலாக நேரடியாக, 6,060 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக, 10 ஆயிரம் நிலங்களும் பயன்பெறுகின்றன. மேலும், 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உப்பாறு அணை உள்ளது.தற்போது, பிஏ.பி., தொகுப்பு […]

Continue Reading

மதுரை ஐகோர்ட் கிளை 100 நாள் வேலை திட்டத்தை கொள்ளையடிக்கும் திட்டமா? என வேதனை.

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் கிராம ஊராட்சிகளின் அவலங்களை அதிக அளவில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஒரு பத்திரிக்கை மற்றும் இணையதளம். மேலும், ஊராட்சிகளில் நடக்கின்ற மோசடிகள், சகிக்க முடியாத ஒன்று.  ஒவ்வொரு கிராமத்திலும் சமூக ஆர்வலர்கள், கிராமத்தின் நலன் விரும்பிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடி கொண்டிருப்பது தான் அவர்கள் வேலையா? இந்த அதிகாரிகள் எதற்காக இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்த ஊழல்களுக்கு எல்லாம் இது […]

Continue Reading

மரங்களில் மின் வயர்கள் பதித்த விவகாரம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி உத்தரவு.!

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram தென்காசி மாவட்டம். அம்பாசமுத்திரம் அருகே மரங்களில் ஆண்டி அடித்து மின் வயர்கள் பதிந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அதை உடனே அகற்றி, மின்கம்பங்கள் அமைத்து வயர்களை இழுக்க மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ளது பிரபலமான காசிநாத சுவாமி கோவல். இந்த கோவிலுக்குச் செல்லும் சாலையில் இருபுறமும் பழமையான மருத மரங்கள் காணப்படுகின்றன. இந்த பகுதியில் முறையான மின்வசதி ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட மின்வாரிய துறைஅதிகாரிகள் […]

Continue Reading

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூகத்தின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அமைதி, இதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக இருப்பது எது?

நாட்டில் தகுதியானவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். தகுதியான அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும். மேடையில் பேசி விட்டு போவது, சினிமாவில் நடித்துவிட்டு போவது, நிஜ வாழ்க்கையில் அதை எல்லாம் கொண்டு வந்து சாதிக்க முடியுமா? கற்பனை உலகத்திற்கும், நிஜ உலகத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. அதேபோல்தான், சினிமா ரசிகர்களால் கைதட்ட முடியும். சினிமாவை பார்த்து ரசிக்க முடியும். ஆனால், செயல்படுத்த முடியுமா ?அதற்காக அவர்களால் உழைக்க முடியுமா? இது எல்லாவற்றையும் வாக்காளர்கள் சீர் தூக்கிப் பார்க்க […]

Continue Reading

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் அரசியல் ஆனது எதனால்?

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக, மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இதை மறுக்கிறார். இருப்பினும் ஏழுமலையான் பக்தர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஏ ஆர் டைரி ஃபுட்ஸ் நிறுவனம் திண்டுக்கல்லில் இருந்து திருமலைக்கு நெய்யை சப்ளை செய்து வந்துள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் நெய் தரமற்று இருப்பதாக இதை கருப்பு பட்டியலில் வைத்து, இருந்த நெய்யையும் […]

Continue Reading

நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி நிவாரணம் கேட்டு விவசாயிகள் உடல்களுடன் போராட்டம் .

ஈரோடு மாவட்டம்.காங்கேயம்: காங்கேயம் நகராட்சி மூன்றாவது வார்டு தொட்டியபட்டி, அம-ராங்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி மோகன்குமார், 62; தனது தோட்டத்தில், 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார். நேற்று காலை பட்டிக்கு சென்று பார்த்த-போது, 15 ஆடுகள், 15 குட்டிகள் இறந்து கிடந்தன.காங்கேயம் நகராட்சி வருவாய் ஆய்வாளர், கால்நடை மருத்து-வர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதித்தார். உயிருக்கு போரா-டிய […]

Continue Reading

திண்டுக்கல்லில் செயல்படும் பிரபல நிறுவனம் (டி-மார்ட் (D Mart))-க்கு Sec 55 படி நோட்டீஸ், ரூ.3000 அபராதம் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

திண்டுக்கல், சீலப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பல்பொருள் அங்காடியான டி-மார்ட் (D Mart) கடை குறித்து whatsapp மூலம் அனுப்பப்பட்ட புகாரின் பேரில் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது உணவு விற்பனை பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கை உரைகள் மற்றும் தலைக்கு மாட்ட கூடிய நெட் கேப் அணியவில்லை எனவும், உணவு பொருள்களின் காலாவதி தேதி குறித்து ஆய்வு செய்யும்போது அதில் காலாவதிகள் தேதி இடம்பெறவில்லை எனவும், உணவுக்கான […]

Continue Reading

கேவலமான கருத்துக்களை அரசியல்வாதிகள் பேசினாலும், அதை விளம்பரப்படுத்தும் கார்ப்பரேட் மீடியாக்கள், அரசியலில் மக்களை விட உயர்ந்தவர்களாக காட்டுவது ஏன்?ஏமாறும் மக்களும், சமூக ஆர்வலர்களின் மனக்குமுறல்கள் .

செப்டம்பர் 15, 2024 • Makkal Adhikaram வாக்களிக்கும் மக்கள் தான் ஜனநாயக நாட்டில் எஜமானர்கள். ஆனால் வாக்களிக்கும் மக்கள் இங்கே கேவலப்படுத்துகிறார்கள். ஓட்டுக்கு மட்டுமே 100 முறை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, பிறகு திரும்பிப் பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல, இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களும் சரி, அரசியல் கட்சி முக்கிய புள்ளிகளும் சரி ,அவர்கள் எதை பேசினாலும், எப்படி பேசினாலும் அதை முன்னிலைப்படுத்தி இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது.காரணம் வியாபாரம் மட்டுமே அதன் நோக்கம்.  மக்களை […]

Continue Reading