முகமூடி கொள்ளையர்கள் கைது – போலீசார் அதிரடி:

உடுமலை, காங்கேயம் மடத்துக் குளம், தாராபுரம் என திருப்பூர் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் முகமூடிக் கொள்ளையர்கள் பல்வேறு வீடுகளில் கொள்ளை அடித்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். திருப்பூர் மாவட்டத்தையே அலற விட்ட இந்த முகமூடி கொள்ளை யர்களை பிடிக்க போலீசார் 3 தனிப்படை அமைத்து துப்பாக்கி முனையில் தேடி வந்தனர். இந்நிலையில் உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி பிரிவில் நான்கு முகமுடி கொள்ளையர் களையும் நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒரு […]

Continue Reading

ஈரோட்டில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பென்ஷன் உயர்த்த ஆர்ப்பாட்டம் .

ஈரோடு மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில், தொழிலாளர்களுக்கு பென்ஷன் ரூ. 1,000-ல் இருந்து ரூபாய் 5,000 ஆக உயர்த்த வேண்டும். தொழிலாளர்களின் குடும்பத்தினரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். பஞ்சபடியுடன் கூடிய ஓய்வூதியம், தொழிலாளர்களின் ஊதிய உச்சவரம்பை ரூபாய் 30 ஆயிரம் உயர்த்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை […]

Continue Reading

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் திடீர் பிளவு பொதுமக்கள் அதிர்ச்சி .

கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழ் கிளை வரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக சிறுப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வராதால் கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்கு சென்று பார்த்த போது நிலம் இரண்டாக பிளவு பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தற்போது வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்

Continue Reading

நாமக்கல்லில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம் .

நாமக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் இரண்டாம் கட்ட ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சரவணன், மாவட்ட அமைப்புச் செயலாளா் பிரபா ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஆா்.லட்சுமி நரசிம்மன், மாவட்ட இணை செயலாளா் குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். அப்போது ‘மற்ற துறை பணிகளை கிராம […]

Continue Reading

நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி நிவாரணம் கேட்டு விவசாயிகள் உடல்களுடன் போராட்டம் .

ஈரோடு மாவட்டம்.காங்கேயம்: காங்கேயம் நகராட்சி மூன்றாவது வார்டு தொட்டியபட்டி, அம-ராங்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி மோகன்குமார், 62; தனது தோட்டத்தில், 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார். நேற்று காலை பட்டிக்கு சென்று பார்த்த-போது, 15 ஆடுகள், 15 குட்டிகள் இறந்து கிடந்தன.காங்கேயம் நகராட்சி வருவாய் ஆய்வாளர், கால்நடை மருத்து-வர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதித்தார். உயிருக்கு போரா-டிய […]

Continue Reading

திண்டுக்கல்லில் செயல்படும் பிரபல நிறுவனம் (டி-மார்ட் (D Mart))-க்கு Sec 55 படி நோட்டீஸ், ரூ.3000 அபராதம் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

திண்டுக்கல், சீலப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பல்பொருள் அங்காடியான டி-மார்ட் (D Mart) கடை குறித்து whatsapp மூலம் அனுப்பப்பட்ட புகாரின் பேரில் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது உணவு விற்பனை பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கை உரைகள் மற்றும் தலைக்கு மாட்ட கூடிய நெட் கேப் அணியவில்லை எனவும், உணவு பொருள்களின் காலாவதி தேதி குறித்து ஆய்வு செய்யும்போது அதில் காலாவதிகள் தேதி இடம்பெறவில்லை எனவும், உணவுக்கான […]

Continue Reading

ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி மலைக்குறவா்கள் ஆா்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம்.இராசிபுரம் வட்டத்துக்கு உள்பட்ட மலைக்குறவன் இனத்தவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மலைக்குறவன் பழங்குடியினா் முன்னேற்ற சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பி.முருகேசன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஏ.வி.சண்முகம் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். அதன் மாநிலத் தலைவரும், முன்னாள் அரூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.டில்லிபாபு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். […]

Continue Reading

பவானி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்.

ஈரோடு மாவட்டம்.பவானி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் மக்களைத் தேடிச் சென்று குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீா்வு காணும் வகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சியா் மாதந்தோறும் ஒருநாள், வட்ட அளவில் தங்கி, மக்களுக்கான சேவைகள் தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் கள ஆய்வு செய்து வருகிறாா். அதன்படி, ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் ‘உங்களைத் […]

Continue Reading

மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளா்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு.

ஈரோட்டில் மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக மாட்டு வண்டிகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும், மாட்டு வண்டிக்கு பதிலாக சுமை வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா். ஆனால், சுமை வாகனங்களை இயக்கினாலும் மூட்டைகள், பாா்சல்களை ஏற்றி, இறக்கும் பணிகளில் தாங்களே ஈடுபடுவோம் என்றும், அதற்கு சுமை தூக்கும் தொழிலாளா்கள் இடையூறு செய்யக்கூடாது என்றும் மாட்டு வண்டிதொழிலாளா்கள் கோரிக்கை […]

Continue Reading

நாமக்கல்லில் நெடுஞ்சாலையோரம் பனை விதை விதைப்பு பணி

நாமக்கல் மாவட்டம்.இராசிபுரம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையோரம் பனை விதை விதைப்பு பணி அண்மையில் நடைபெற்றது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு, நாமக்கல் மாவட்ட நிா்வாகம் ஆகியவை இணைந்து மாவட்டம் முழுவதும் உள்ள காவிரிக் கரையோரம், நீா்ப்பிடிப்புப் பகுதிகள், சாலையோரங்களில் ஒரு கோடி பனை விதை விதைப்பு பணியை நடத்தி வருகிறது.இதனைத் தொடா்ந்து ராசிபுரம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நெடுஞ்சாலையோரங்களில் பனை விதைகள் விதைப்பு பணிகள் நடைபெற்றன. ராசிபுரம் நெடுஞ்சாலைத் […]

Continue Reading