நாட்டில் உண்மையை வெளிப்படுத்துவதற்கு பத்திரிக்கைகள் தேவை! ஆனால், பொய்யும், போலி செய்திகளையும், வெளியிடுவதற்கு பத்திரிகை – தொலைக்காட்சிகள் தேவையா ? – சமூகநலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள்.

சமூக நலனுக்காக பத்திரிகை நடத்துபவர்கள் தமிழ்நாட்டில் ஐந்திலிருந்து 10% இருக்கலாம். இது மக்களுக்காக, மக்களின் நலனுக்காக, இந்த பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும், சில அரசியல் கட்சிகளிடமும், அதிகாரிகளிடமும் எதிர்ப்புகளை சம்பாதித்து பத்திரிக்கை நடத்த வேண்டியிருக்கிறது.  இந்த நிலையில் அரசியல் கட்சிகள் பல பொய்களை மக்களிடம் சொல்லி அரசியல் செய்வதும், அதையும் உண்மை என்று மக்களிடம் செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதும், பத்திரிக்கை துறைக்கு வந்த சோதனையாக தான் உள்ளது. மேலும், பத்திரிகை என்றால் என்ன? என்று தெரியாத மக்களிடம் […]

Continue Reading

இன்றைய சமூகப் பிரச்சனைகளில் முக்கியமானது போலி பத்திரிகை –  பத்திரிகையாளர்கள், மற்றும் சட்ட பிரச்சனைகளை எப்படி மத்திய – மாநில அரசின் செய்தித் துறை  சமாளித்து, சீர் செய்யப் போகிறது ?

போலி பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களால் சமூகத்தில் பத்திரிகையின் மதிப்பு ,மரியாதை ,கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர ,சோசியல் மீடியா மற்றும் கார்ப்பரேட் பத்திரிக்கை அரசியல் என பல பிரச்சினைகளைக் கடந்து, சமூக பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் பல போராட்டங்களுக்கு இடையே பத்திரிகை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . இது ஒரு புறம் என்றால், மற்றொரு புறத்தில் அரசியல் கட்சிகள், ஒரு அரசியல் கட்சியை பற்றி விமர்சனம் செய்யும்போது, அந்தக் கட்சியினர் கட்சி சார்ந்த முத்திரை குத்துகிறார்கள். ஆனால்,  […]

Continue Reading

தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குனர் குமாருக்கு பிரிவு உபசார விழாவில்  இயக்குநர்கள் , இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் -வாழ்த்து.

திருப்பூரில் பிறந்து 34 ஆண்டுகள் அரசு பணியில் பல இடங்களில் வேலை பார்த்த  இணை இயக்குனர் குமார் இறுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் கிண்டி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில்,சிறப்பான வரவேற்பு அளித்து ,பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது இவரைப் பற்றி அந்நிகழ்ச்சியில் பேசிய ,இயக்குநர்கள் , இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் ! ஒரு மனிதன் பிறந்து […]

Continue Reading

ராஜ் பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ஆளுக்கு ஒரு செய்தியை சொல்கிறார்கள். இதில் எது உண்மை? எது பொய்? – குழப்பத்தில் மக்கள் .

ராஜ் பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் சொல்லப்பட்ட செய்தி .காவல்துறை அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. அந்த ரௌடி கருக்கா வினோத் சாலையில் தான் பெட்ரோல் குண்டு வீசினான் என்று தெரிவிக்கிறது. ஆனால், திமுக அமைச்சர் ரகுபதி இந்த ரவுடியை பாஜகவை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தான் இவரை பெயிலில் எடுத்தார் என்று சொல்கிறார்.  சபாநாயகர் அப்பாவு ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பாஜகவின்ருக்கு தொடர்பு […]

Continue Reading

போலி பத்திரிகைகளை ஒழிக்க, மத்திய அரசின் நடவடிக்கை பிரிதிகளை அலுவலகத்தில் சமர்ப்பிப்பது மட்டும் தானா ?

மத்திய அரசு இன்று போலி பத்திரிகைகளை ஒழிக்க அந்தந்த பத்திரிகைகள் தங்களுடைய பிரதிகளை அவப்பொழுது அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரஸ் இன்பர்மேஷன் ப்ரோ ( pib) ல்  கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதே மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கின்ற அதே சலுகை, சாமானிய சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கும் கொடுக்க வேண்டும். அதாவது அச்சுப்பிருதிகளை சமர்ப்பிப்பதற்கு உத்தரவு போடும் அதிகாரிகளும், அமைச்சர்களும் சலுகை விளம்பரங்களுக்கு ஏன் அந்த உத்தரவை போடக்கூடாது? […]

Continue Reading

காவிரி தண்ணீருக்கு கர்நாடகம் கைவிரிப்பு ! டெல்டா மாவட்ட விவசாயிகளை தமிழக அரசு காப்பாற்றுமா ?

தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பதில் கர்நாடக முதலமைச்சர் சித்ராமய்யா முடிவில், ஒட்டுமொத்த அங்குள்ள அரசியல் கட்சிகள் இரண்டாவது முறையாக கூட்டி, நாளை நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்க அழுத்தம் கொடுக்கிறது கர்நாடக அரசு . இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகளை காப்பாற்ற தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?  குருவைப் பயிர்களை காப்பாற்றுவதற்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் […]

Continue Reading

தமிழ்நாடு பனை நல வாரியத்தின் தலைவர் நாராயணனுக்கு பனையரசன் விருது .

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்ட மாணவர்களையும் ,தன்னார்வலர்களையும் ,ஒருங்கிணைத்து  பாராட்டு விழா சென்னை டீலஸ் ஹோட்டலில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் பனை வாரிய தலைவருக்கு பனையரசன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் சிறப்புரையாற்றினார். மேலும், ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி […]

Continue Reading

தமிழக அரசு  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான்வர்கீஸ் மாற்றம் செய்துள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். புதிதாக வந்துள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பாரா?

பொதுமக்களின் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் ,கிடப்பில் போட பட்டு வந்த மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான்வர்கீஸ், இவர் இருக்கும் வரை பொதுப் பிரச்சினைகளைப் பற்றி பொதுமக்கள் புகார் அளித்தால், கண்டு கொள்வதில்லை. ஆனால், கட்சிக்காரர்களும், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், எம்பிக்களும் சொல்வதை தான் செய்வார் .இந்த வேலையை செய்வதற்கு ஒரு மாவட்ட ஆட்சியர் தேவையா? இன்று கூட என்னிடம் பாதிக்கப்பட்ட மூன்று நபர்கள் போன் செய்து மாவட்ட ஆட்சியர் மாறிவிட்டார் என்று சந்தோசமாக தெரிவித்தார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய […]

Continue Reading

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபத்ரா செல்லத்துரை தலைமையில், பனை விதை நடும் நிகழ்ச்சியினை நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார் .

கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் 13 கடலோர பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை ,முட்டம், மண்டைக்காடு, சங்குத்துறை, மணக்குடி தெங்கபுதூர், லெமோரியா கடற்கரை, சொத்தவிளை, குளச்சல், தேங்காய் பட்டினம், பெரிய காடு ,இறையன்புத்தன் துறை, சின்னத்துரை போன்ற இடங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நலப்பணி திட்ட தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், அந்தந்த பகுதி பஞ்சாயத்து தலைவர் மற்றும் அப்பகுதி உதவியாளர்கள் கலந்து கொண்டு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பனை […]

Continue Reading

செய்தி மக்கள் தொடர்பு துறையின் பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு கார்ப்பரேட் நிறுவனங்களில்  இருப்பவர்களுக்கே உறுப்பினராக இருக்க தகுதியா ? என்ன பத்திரிக்கை சமூக நீதி ?

தமிழ்நாட்டில் பத்திரிகைகளில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகள், சமூக நீதி வேறு எங்கும் இருக்க முடியாது. காரணம் நான் பெரிய பத்திரிக்கை, நான் பெரிய தொலைக்காட்சி, நீ சிறிய பத்திரிகை இப்படி ஒரு அரசியலுக்குள் ,பத்திரிகைகள் உலா வந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு உண்மை தெரியாது. பத்திரிக்கை என்றால் என்ன என்று தெரியாது.  எப்படி பெரும்பாலான அரசியல் கட்சியினருக்கு அரசியல் என்றால் என்ன என்று தெரியாதோ, அதேபோல்தான் பத்திரிகைகளிலும், இந்த அடையாள அட்டை இருந்தால், நானும் பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்ளும் […]

Continue Reading