ஜனவரி 19, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஊழல் என்பது ஏதோ சிறிய விஷயம் போன்று பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் காட்டிக்கொண்டிருக்கிறது .ஆனால், அதன் பாதிப்பு, அதன் பின் விளைவு, எத்தகைய தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்துகிறது? அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன ? இது பற்றி அரசு அதிகாரிகளுக்கு தெரியுமா? தெரிந்தவர்கள் 15 சதவீதம் இருப்பார்கள். தெரியாதவர்கள் 85 சதவீதம் இருப்பார்கள். ஊழல் என்றால் என்ன? என்று அர்த்தம் தெரியாத பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள், பத்திரிகைகளில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஊழலைப் பற்றி தெரியாதவர்கள் எப்படி ,ஊழலுக்கு எதிராக போராடுவார்கள்? இவர்களும் பஸ் பாஸ் வாங்கிக் கொண்டு, கலெக்டர் அலுவலகத்தில் இவர் ஒரு செய்தியாளர்,என்று அந்தந்த பத்திரிகைகள், இவர் தான் எங்கள் நிருபர் என்று கடிதம் கொடுத்து அனுப்புகிறார்கள் . அதை வைத்து இவர்களும் பஸ் பாஸ் வாங்கி ,பத்திரிகையின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் .ஆனால் ,இந்த சமூக நலன் ,தேச நலன் கருதி ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு இதுவரை எந்த சலுகைகளும், விளம்பரங்களும் மத்திய, மாநில அரசுகள் கொடுக்கவில்லை என்பதுதான் நாட்டின் மிகப்பெரிய வேதனை. உழைப்பவனுக்கு ஊதியம் இல்லை. உழைக்காமல் அரசியல் கட்சிகளிலும், அரசியலிலும் சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பது போல, இந்த பத்திரிகைகள் சர்குலேஷன் அடிப்படையில், இந்த சலுகைகள் தினசரி பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இது பற்றி பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், அது பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது .மேலும், இந்த ஊழல் என்பது நாட்டில் மிகப்பெரிய அரசியல் மோசடி வேலை. அதாவது வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கை துரோகமாகும். இந்த நம்பிக்கை துரோகம் எப்படி நடைபெறுகிறது? வாக்காளர்களுக்கு ஊழலைப் பற்றி தெரியாது. வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு அதன் அதிகாரம் தெரியாது .ஏதோ கொடுக்கிற பணத்துக்கு நன்றியுடன் அவர்கள் சொல்லும் சின்னத்தில் வாக்களிக்கிறார்கள். அதனால், நாட்டில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது? என்பதை விரிவாக பார்க்கலாம். முதலில் ஊழல் என்றால் என்ன ? ஊழல் என்பது கோடிகளில் அந்தப் பணத்தை அதிகாரம் மிக்கவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். அப்படி பல ஆயிரம் கோடி, பல லட்சம் கோடி என்ற ஊழல் செய்த பணம், எங்கே பதுக்குகிறார்கள்? சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள். வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள் .அப்படி வெளிநாடுகளில் முதலீடு செய்யும் போது ,இந்திய பணத்தின் மதிப்பு ,அதன் தேவை, வெளிநாட்டுக்கு சாதகமானதாக உள்ளது. ஆனால், நம் நாட்டில் அதே பணம் இங்கே புழங்கினால் ,வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், மக்களிடம் பண நடமாட்டம், இவை எல்லாம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், இங்கே இந்த பணம் எப்படி வந்தது? என்ற கேள்வி எழும் போது, அதை வெளிநாடுகளில் முதலீடு செய்வது போல் காட்டி, அங்கிருந்து இங்கு கொண்டு வருகிறார்கள். அதாவது பிளாக் மணி என்று சொல்வார்கள். இப்படி ஊழல் செய்து சம்பாதித்த கருப்பு பணத்தை அதை வெள்ளையாக்கி, இங்கே கொண்டு வருகிறார்கள். அப்போதுதான் வருமானவரித்துறை, சிபிஐ ,அமலாக்கத்துறை பிடியில் சிக்குகிறார்கள். அப்படி சிக்கிய அமைச்சர்கள் அதிமுக, திமுக சொத்து குவிப்பு வழக்குகளில் ஊழல் வழக்குகளில் இன்று வரிசை கட்டி நிற்கிறது .இது ஒரு புறம் மற்றொரு புறத்தில் இந்த ஊழல் பணத்திற்கு பின்னால் தற்போது ஒவ்வொரு எம்எல்ஏ, எம்பி ,மந்திரி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னாள், இன்னாள் வரை இந்த ஊழல் சட்டப்படி நடந்து வருகிறது. இதை மக்களால் தடுக்க முடியவில்லை. அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை . இதன் பின் விளைவு இன்று குறைந்தபட்சம் ஒரு எம்எல்ஏ 500 கோடி என்றால், மந்திரி குறைந்தபட்சம் ஆயிரம் கோடி, அதற்கும் மேலே லட்சம் கோடி ,இப்படி கோடிகளில் இவர்களுடைய கொள்ளை அரசியலில் இருந்து வருகிறது. இதை பாதுகாப்பவர்கள், இதற்கு பக்கபலமாக இருப்பவர்கள், இவர்களின் சொத்துக்களுக்கு பினாமியாக இருப்பவர்கள் ,அந்தந்த அரசியல் கட்சி நிர்வாகிகள், இந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏ, மந்திரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் இவர்களுடைய ஊழல் பணத்தால் நாட்டில் ரவுடியிசம் வளர்ந்துள்ளது . ரவுடிசம் வளர்ந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நீதிமன்ற வழக்கு கொலை கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு இந்த ஊழல் பணம் முக்கிய காரணமாக செயல்படுகிறது இதனால் அப்பாவி மக்களின் வாழ்க்கை வாழ்க்கை போராட்டம் ஆகிறது .மேலும், ஊழலில் புழங்கிக் கொண்டிருப்பவர்கள் ,இந்த ஊழல் பணத்தால் சட்டத்தை விலைக்கு வாங்குகிறார்கள். அதிகாரிகளை விலைக்கு வாங்குகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள், நேர்மையான அதிகாரிகள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அப்பாவி மக்கள் ஏமாந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தது வாக்களித்த மக்களுக்கு மதிப்பில்லை, மரியாதை இல்லை .அவர்களால் உண்மையை தட்டிக் கேட்க முடியவில்லை. நியாயம் கிடைக்காமல் ஒவ்வொரு விஷயத்திலும் போராட வேண்டி இருக்கிறது. ஆனால் ஊழல்வாதிகள் அரசியல் அதிகாரத்தால், ஒரு பக்கம் ஊழலுக்கு எதிரானவர்களாக பேசிக்கொண்டு, ஊழல் செய்து பல ஆயிரம், பல லட்சம் கோடிகளை பார்ப்பது தற்போதைய நவீன அரசியல். இந்த நவீன அரசியலில் பொய் என்பது சகஜமாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் பணம் தான் என்று மக்கள் நினைத்து விட்டார்கள். அந்த நினைப்பு மிகப்பெரிய தவறு . ஒரு பக்கம் ஊழல் செய்த பணத்தால் விலைவாசிகள் ஏறிவிட்டது. எவ்வளவு ஏறினாலும் ஊழல்வாதிகளுக்கு கவலை இல்லை. அவர்கள் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு சட்டம் மூலம் நீதி கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகிறது. 1965 க்கு முன் இருந்த அரசியல் ,மக்களுக்கு எந்த இலவசமும் இல்லை. பசி பட்டினியால் கூட வாழ்ந்திருக்கிறார்கள். அப்போது சந்தோஷத்திற்கும், நிம்மதிக்கும் குறைவில்லை . இப்போது பசி, பட்டினி இல்லை. சந்தோஷம், நிம்மதி மக்களின் வாழ்க்கையில் கேள்வி குறையாகிவிட்டது.மேலும்,ஊழல் செய்த பணத்தால் ,அந்தந்த பகுதியில் அரசியல் கட்சிகள் பெயரில் மக்களிடையே பிளவு ஏற்படுத்துகிறது . ஒரு ஊருக்கு பத்து கட்சிகள் என்றால், பத்து பிரிவாக மக்களை பிளவுபடுத்துகிறது. ஜாதியால் சமூக உறவுகளை […]
Continue Reading