ஈரோட்டில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பென்ஷன் உயர்த்த ஆர்ப்பாட்டம் .

ஈரோடு மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில், தொழிலாளர்களுக்கு பென்ஷன் ரூ. 1,000-ல் இருந்து ரூபாய் 5,000 ஆக உயர்த்த வேண்டும். தொழிலாளர்களின் குடும்பத்தினரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். பஞ்சபடியுடன் கூடிய ஓய்வூதியம், தொழிலாளர்களின் ஊதிய உச்சவரம்பை ரூபாய் 30 ஆயிரம் உயர்த்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை […]

Continue Reading

317 நபர்களுக்கு பணி ஆணை வழங்கிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா .

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 317 நபர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் மகேந்திரா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் இன்று மாவட்ட ஆட்சியர் நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலையில் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / […]

Continue Reading

கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் பெயரில் மிரட்டல் மோசடி கலெக்டர் கிராந்தி குமார் பாடி எச்சரிக்கை .

பத்திரிகையாளர்கள்பெயரில் மக்களையும், அரசு அலுவலர்களையும், மிரட்டி, மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று, கோவை கலெக்டர் கிராந்தி குமார் எச்சரித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், போட்டோகிராபர்கள், வீடியோ கேமராமேன்கள் ஆகியோர், அரசுக்கும் அரசு அலுவலர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக செயல்பட்டு சமூகத்திற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இத்தகைய பொறுப்புமிக்க பணி மேற்கொள்ளும்பத்திரிகையாளர்கள் மத்தியில், பத்திரிகையாளர்கள் என்ற பெயரில், மோசடி செயல்களில் பலரும் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. கோவையில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் […]

Continue Reading

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் திடீர் பிளவு பொதுமக்கள் அதிர்ச்சி .

கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழ் கிளை வரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக சிறுப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வராதால் கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்கு சென்று பார்த்த போது நிலம் இரண்டாக பிளவு பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தற்போது வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்

Continue Reading

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.55,000/- அபராதமும் பெற்றுத் தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நத்தம் N.கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி செல்வம்(26) என்பவரை நத்தம் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் […]

Continue Reading

நாமக்கல்லில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம் .

நாமக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் இரண்டாம் கட்ட ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சரவணன், மாவட்ட அமைப்புச் செயலாளா் பிரபா ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஆா்.லட்சுமி நரசிம்மன், மாவட்ட இணை செயலாளா் குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். அப்போது ‘மற்ற துறை பணிகளை கிராம […]

Continue Reading

நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி நிவாரணம் கேட்டு விவசாயிகள் உடல்களுடன் போராட்டம் .

ஈரோடு மாவட்டம்.காங்கேயம்: காங்கேயம் நகராட்சி மூன்றாவது வார்டு தொட்டியபட்டி, அம-ராங்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி மோகன்குமார், 62; தனது தோட்டத்தில், 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார். நேற்று காலை பட்டிக்கு சென்று பார்த்த-போது, 15 ஆடுகள், 15 குட்டிகள் இறந்து கிடந்தன.காங்கேயம் நகராட்சி வருவாய் ஆய்வாளர், கால்நடை மருத்து-வர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதித்தார். உயிருக்கு போரா-டிய […]

Continue Reading

திண்டுக்கல்லில் செயல்படும் பிரபல நிறுவனம் (டி-மார்ட் (D Mart))-க்கு Sec 55 படி நோட்டீஸ், ரூ.3000 அபராதம் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

திண்டுக்கல், சீலப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பல்பொருள் அங்காடியான டி-மார்ட் (D Mart) கடை குறித்து whatsapp மூலம் அனுப்பப்பட்ட புகாரின் பேரில் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது உணவு விற்பனை பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கை உரைகள் மற்றும் தலைக்கு மாட்ட கூடிய நெட் கேப் அணியவில்லை எனவும், உணவு பொருள்களின் காலாவதி தேதி குறித்து ஆய்வு செய்யும்போது அதில் காலாவதிகள் தேதி இடம்பெறவில்லை எனவும், உணவுக்கான […]

Continue Reading

பவானி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்.

ஈரோடு மாவட்டம்.பவானி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் மக்களைத் தேடிச் சென்று குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீா்வு காணும் வகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சியா் மாதந்தோறும் ஒருநாள், வட்ட அளவில் தங்கி, மக்களுக்கான சேவைகள் தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் கள ஆய்வு செய்து வருகிறாா். அதன்படி, ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் ‘உங்களைத் […]

Continue Reading

மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளா்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு.

ஈரோட்டில் மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக மாட்டு வண்டிகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும், மாட்டு வண்டிக்கு பதிலாக சுமை வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா். ஆனால், சுமை வாகனங்களை இயக்கினாலும் மூட்டைகள், பாா்சல்களை ஏற்றி, இறக்கும் பணிகளில் தாங்களே ஈடுபடுவோம் என்றும், அதற்கு சுமை தூக்கும் தொழிலாளா்கள் இடையூறு செய்யக்கூடாது என்றும் மாட்டு வண்டிதொழிலாளா்கள் கோரிக்கை […]

Continue Reading