தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபை குமார் சிங்க்கு ! விடையூர் கிராம மக்கள் பாராட்டு.

நாட்டில் தற்போது நீதிமன்றமும், லஞ்ச ஒழிப்பு துறையும் தான் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், அரசியல் நிர்வாகம் மிக மோசமாக உள்ளது. பொதுமக்கள் யாரிடம் சொல்வார்கள்? ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரி, அல்லது மாவட்ட ஆட்சியர், இவர்களிடம் தான் பொதுமக்களின் பிரச்சனைகளையும், குறைகளையும் முதலில் சொல்வார்கள்.  ஆனால், அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியர்களில்,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான்வர்கீசும் ஒருவர். அப்படி விடையூர் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் […]

Continue Reading

ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை எந்த காரணமும் இன்றி, தாக்க வேண்டிய அவசியம் என்ன ?இதற்கு பின்னணியில் யார் …………? காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பேபி FIR போட மறுத்தன் பின்னனி என்ன? நடவடிக்கை எடுப்பாரா? – SP செபாஸ் கல்யாண்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமஸ். 80 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை நுங்கம்பாக்கம் காலனியை சேர்ந்த கண்ணன் /தந்தை பெயர் வரதன் (வயது 44) என்பவர் தாக்க வேண்டிய அவசியம் என்ன? இருவருக்கும் எந்த முன் விரோதமும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எதனால் கண்ணன் ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை அடிக்க வேண்டும்? இவர் வேலை உண்டு. இவர் உண்டு இருப்பவர்.  அதாவது இவருடைய வீடு மணவாள நகரில் உள்ளது .நிலம் நுங்கம்பாக்கம் கிராம பஞ்சாயத்தில் உள்ளது. […]

Continue Reading

தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம் – வந்தவாசி நகராட்சி.

வந்தவாசி நகராட்சியில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம் துவங்கப்பட்டுள்ளது. இதில் வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை இந்த சேமிப்பு கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதை வந்தவாசி நகராட்சி பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் உபயோகமற்ற பொருட்களை இந்த சேமிப்பு கிடங்கில் கொடுக்கலாம். அல்லது அதை எடுத்து வர இயலாதவர்கள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வரும்போது, அவர்களிடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் ஜலால், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் தூய்மை இந்தியா திட்டம், […]

Continue Reading

ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவ வைபவம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் வைகாசி அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவ வைபவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் அர்ச்சனைகள் நடைபெற்றது. முத்துமாரி அம்மன் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக் காட்சியை காண பெரும் திரளாக அக்கிராமத்தினர் வந்து சாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர் ” வந்தை ” நளினி

Continue Reading

நாட்டில் கிருத்துவ மத வாதிகள் மலைகளில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என்றால் எந்த மலையும் இருக்காது.இயற்கையை அழித்தால் பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து சர்ச்சுகள் நூற்றுக்கணக்கில் கட்டி இருக்கிறார்கள். இப்போது புதுவிதமாக பூண்டி ஊராட்சியில் உள்ள அரும்பாக்கம் கிராம பகுதியில் உள்ள மலைகளில் நாங்கள் ஆராதனை நடத்துகிறோம் என்ற பெயரில் சிலுவை வழிபாடு நடத்துகிறார்கள்.  இந்த வழிபாட்டுக்கு ஊராட்சி மன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது. நாங்க எல்லாம் அந்த கிராமத்திற்கு நல்லது செய்கிறோம். அதற்கு பலனாக எங்களுக்கு அந்த மலையை நாங்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறோம் என்று ஒரு மறைமுகமான லஞ்சமாகத்தான் இது இருக்கிறது. அதற்கு மாவட்ட […]

Continue Reading

தேனி மாவட்ட திட்ட இயக்குனர் தண்டபாணி பணியிட மாற்றம் செய்யப்பட்டும் வசூல் வேட்டையில் ஈடுபடலாமா ?ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா நடவடிக்கை எடுப்பாரா?

தேனி மாவட்டத்தில் திட்ட இயக்குனராக பணிபுரிந்து வந்த தண்டபாணி தேனி மாவட்டத்தில் திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறதோ இல்லையோ திட்ட இயக்குனர் தண்டபாணிக்கு கமிஷன் போய்விடும் .அந்த அளவிற்கு இவர் மீது புகார் இருந்து வந்துள்ளது. இது தவிர, முன்னாள் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இவர் என்ன சொன்னாலும் ,அந்த கோப்புகளில் கையெழுத்து போட வைத்து வந்தார். அந்த அளவிற்கு இருவருக்கும் ஒரு நெருக்கம் இருந்துள்ளது. மேலும்,உள்ளாட்சியில் உள்ள அத்தனை பஞ்சாயத்து […]

Continue Reading

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அதிமுக ,திமுகவின் சார்பாக பணமும், பொருளும் தான் போட்டி போடுகிறதா ? இதைத் தேர்தல் ஆணையம் கவனிக்கிறதா? இல்லையா?

ஒரு வேட்பாளர் தேர்தலில் நிற்க ஏன் பொருளும், பணமும் கொடுக்க வேண்டும்? அதை கொடுக்காமல் அவரால் ஜெயிக்க முடியாதா? அப்படி கொடுத்து ஜெயிப்பது என்ன காரணத்துக்காக……. ? மேலும், தமிழ்நாட்டில் பெரிய அரசியல் கட்சிகள் என்று சொல்லக்கூடிய அதிமுகவும், திமுகவும் பணம் கொடுக்காமல் ஜெயிக்க முடியாதா?  அப்படி பணம் கொடுக்காமல் ஜெயிக்க முடியவில்லை என்றால், எதற்கு பெரிய கட்சி என்று சொல்லிக் கொள்கிறீர்கள்? பணம் கொடுத்து ஜெயிப்பது பெரிய கட்சி அல்ல. யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ […]

Continue Reading

ஸ்ரீ பெருமந்தூர் ஆர் டி ஓ அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு .

ஸ்ரீ பெருமந்தூர் ஆர் டி ஓ அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ராஜ லட்சுமி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading