ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி மலைக்குறவா்கள் ஆா்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம்.இராசிபுரம் வட்டத்துக்கு உள்பட்ட மலைக்குறவன் இனத்தவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மலைக்குறவன் பழங்குடியினா் முன்னேற்ற சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பி.முருகேசன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஏ.வி.சண்முகம் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். அதன் மாநிலத் தலைவரும், முன்னாள் அரூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.டில்லிபாபு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். […]

Continue Reading

பவானி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்.

ஈரோடு மாவட்டம்.பவானி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் மக்களைத் தேடிச் சென்று குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீா்வு காணும் வகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சியா் மாதந்தோறும் ஒருநாள், வட்ட அளவில் தங்கி, மக்களுக்கான சேவைகள் தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் கள ஆய்வு செய்து வருகிறாா். அதன்படி, ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் ‘உங்களைத் […]

Continue Reading

மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளா்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு.

ஈரோட்டில் மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக மாட்டு வண்டிகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும், மாட்டு வண்டிக்கு பதிலாக சுமை வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா். ஆனால், சுமை வாகனங்களை இயக்கினாலும் மூட்டைகள், பாா்சல்களை ஏற்றி, இறக்கும் பணிகளில் தாங்களே ஈடுபடுவோம் என்றும், அதற்கு சுமை தூக்கும் தொழிலாளா்கள் இடையூறு செய்யக்கூடாது என்றும் மாட்டு வண்டிதொழிலாளா்கள் கோரிக்கை […]

Continue Reading

நாமக்கல்லில் நெடுஞ்சாலையோரம் பனை விதை விதைப்பு பணி

நாமக்கல் மாவட்டம்.இராசிபுரம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையோரம் பனை விதை விதைப்பு பணி அண்மையில் நடைபெற்றது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு, நாமக்கல் மாவட்ட நிா்வாகம் ஆகியவை இணைந்து மாவட்டம் முழுவதும் உள்ள காவிரிக் கரையோரம், நீா்ப்பிடிப்புப் பகுதிகள், சாலையோரங்களில் ஒரு கோடி பனை விதை விதைப்பு பணியை நடத்தி வருகிறது.இதனைத் தொடா்ந்து ராசிபுரம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நெடுஞ்சாலையோரங்களில் பனை விதைகள் விதைப்பு பணிகள் நடைபெற்றன. ராசிபுரம் நெடுஞ்சாலைத் […]

Continue Reading

மயானத்தை காணவில்லை! சேலம் கலெக்டரிடம் புகார் மனு .

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை சேர்ந்த செஞ்சிறகுகள் என்ற தொண்டு அமைப்பின் தலைவர் தினேஷ், 30, என்பவர், ‘சுடுகாட்டை காணவில்லை’ எனும் பேனரை இரு கைகளால் பிடித்தபடி, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி, பேனரை பறிமுதல் செய்து, அவரை கலெக்டரிடம் புகார் அளிக்க அனுப்பினர். பின், அவர் கூறியதாவது: தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட, 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, அங்குள்ள மயானத்தில் கொட்டப்படுகிறது. மயானத்தின் ஒரு பகுதியில், […]

Continue Reading

திமுகவின் ஒன்றிய துணை செயலாளர் சேது முருகானந்தம் தன்னுடைய கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் போட்டுள்ள சட்டம் கூட தெரியாமல் பேசுவது என்ன ?

செப்டம்பர் 17, 2024 • Makkal Adhikaram அரசியல் கட்சிகள் என்பது தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே என்று தான் ஒரு தவறான நினைப்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன் வந்த செய்தியிலும், அதை தான் குறிப்பிட்டேன். இவர்களை எல்லாம் உட்கார வைத்து பாடம் எடுக்க வேண்டும். அரசியல் என்றால் என்ன? எதற்கு அரசியல் கட்சி? கொலை மிரட்டல், ரவுடிசம் இவர்களுக்கு தான் கட்சி தேவையா? இப்படிப்பட்டவர்களுக்கு தான் அரசியல் கட்சிகளில் பதவி, பொறுப்பு கொடுப்பார்களா?  மக்கள் ஏமாளிகளாக […]

Continue Reading

ஒஸ்ட்டு காவல் அதிகாரிக்குபெஸ்ட் சான்றிதழ்!இது அடுக்குமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி?

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மற்றும் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் வட்டார காவல் ஆய்வாளராக சாலமன் ராஜா பணிசெய்து வருகிறார் இவரின் மேற்பார்வையில் உள்ள வாலாஜா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்சட்டத்துக்கு விரோதமான முறைகேடுகள் நடந்து வருவதாக பெயர் சொல்ல விரும்பாத சமூக ஆர்வலர்கள் மனம் திறந்தனர் காட்டன் சூதாட்டம் நடைமுறையில் தலை விரித்து ஆடுகிறது சூதாட்ட ஏஜென்ட்கள் மீது அவ்வப்போது வாலாஜா போலீசார் பெட்டி கேஸ் போட்டுவிட்டு அதனைத் தடுத்து நிறுத்தியது போல பாவனை செய்கின்றனர் இந்த […]

Continue Reading

சேலம் வார்டு கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வால் சலசலப்பு.

சேலம்மாவட்டம் : சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., – எம்.எல்.ஏ., அருள். சேலம், அஸ்தம்பட்டி அருண் நகரில் உள்ள இவரது வீட்டருகில், சேலம் மாநகராட்சி, 15வது வார்டு கூட்டம் நேற்று காலை துவங்கியது. மண்டல குழு தலைவி உமாராணி தலைமை வகித்தார். அங்கு சென்ற அருள், ‘என்னை ஏன் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. மக்கள் பிரச்னையை பேச நான் வரக்கூடாதா?’ என்றார். இதற்கு உமாராணி கேள்வி எழுப்ப, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் கூட்டத்தின் நடுவில் அமர்ந்து அருள் தர்ணாவில் […]

Continue Reading

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்கள் பெற வாய்ப்பு – துளசிமதி நம்பிக்கை .

நாமக்கல் மாவட்டம். வருங்காலங்களில் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மேலும் அதிக பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளதாக பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற துளசிமதி தெரிவித்துள்ளார். பாரீசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்ற கால்நடை மருத்துவ கல்லூரி மாணவி துளசிமதிக்கு, நாமக்கல் லத்துவாடியில் உள்ள கல்லூரியில், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், சக மாணவர்கள் மேளத்தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் […]

Continue Reading

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனு .

ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவா் ப.ஈஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிகோவில், ஈரோடு மேற்கு ஒன்றியப் பகுதியில் அதிகமாக மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. வரும் 20-ஆம் தேதி காலாண்டுத் தோ்வுகள் தொடங்க உள்ளன. இந்நிலையில், ஈரோடு – கவுந்தப்பாடி செல்லும் அரசுப் பேருந்துகளான ‘8 ஈ, 8டி’ ஆகியவை நசியனுாரில் இருந்து சாமிகவுண்டம்பாளையம் பிரிவு, குருச்சான்வலசு, அலமேடு, குமரன்மலை, காஞ்சிகோவில் வழியாக செல்கின்றன.கடந்த, 3 மாதங்களாக […]

Continue Reading