100 நாள் வேலை திட்டத்தில் மோசடி நடந்தால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், இந்த தொலைபேசி எண்ணில் ஜனவரி 1 முதல் 8925811328 தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்த தகவல்.மேலும், சில தினங்களுக்கு முன் மக்கள் அதிகாரம் பத்திரிகை இணையதளத்தில் வெளியிட்ட செய்தி தமிழக அரசுக்கு கேட்கவில்லை என்றாலும், அது மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தமிழக மக்கள் சார்பாக மக்கள் அதிகாரம் பத்திரிக்கைக்கும், தேனி மாவட்ட ஒப்பர் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரத்திற்கும், தேனி மாவட்ட எமது நிருபர் முரளிதரனுக்கும் கிடைத்த வெற்றி. பல ஆண்டுகளாக கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தில் நடந்து வந்த என் ஆர் ஜி எஸ் ( NRGS) வேலைகளில் நடைபெற்று வந்த ஊழல், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கொண்டு வந்துள்ளது .அதில் யார் தவறு பண்ணாலும், அதாவது ஊராட்சி மன்ற தலைவரோ அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரோ அல்லது கிராம பஞ்சாயத்து செயலாளரோ, அந்த நிதி சம்பந்தமான மோசடிகள் அல்லது வேலை செய்யும் மக்களுக்கான சம்பளம் மற்றும் தில்லுமுல்லு எதுவானாலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி : 8925811328 . எண்ணுக்கு புகார் அளித்தால் ,சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதில் யார், யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? என்பது தான் மிகவும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள். எனவே ,இந்த 100 நாள் வேலை திட்டத்தில் இனி தமிழக முழுவதும் இந்த நிதியை தவறான முறையில் வேறு செயல்பாட்டுக்கு கொண்டு சென்றால், அது பற்றியும் புகார் அளிக்கலாம் என்று மத்திய அரசு இந்த எண்ணை வெளியிட்டுள்ளது. இதை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், தங்கள் கிராமங்களில் நடை பெறும் ஊழல்கள், தில்லுமுல்லுகள், எதுவானாலும் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் இதை தெரிவித்துள்ளார். இனி ஜனவரி 1 முதல் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு 100 நாள் வேலை திட்டத்தில் நடக்கின்ற கோடிக்கணக்கான மோசடிகளுக்கு தமிழக மக்கள் இனி முற்றுப்புள்ளி வைக்கலாம்.
Continue Reading