செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram
வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதன்மை சிறப்பு விருந்தினராக ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம் கலந்து கொண்டார். இந்த விழாவில் தலைமைப் பொறுப்பேற்று சிவயோகி பெருமாள் சாமிகள் ( ஓய்வு பெற்ற ஐஏஎஸ் )விழாவை சிறப்பித்தார்.
மேலும், வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் எம் .வடிவேல் முன்னிலை வகுத்தார். முன்னாள் தலைமை நீதிபதி மு.கற்பக விநாயகம் ஆன்மீகத்தில் சிறந்த சொற்பொழிவாளர். அவருடைய பேச்சு ஆன்மீக சாமியார்களே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு அவருடைய இறை பக்தி ,சீரடி சாய் பாபாவின் ஆத்மார்த்த சீடர்.
ஒரு தடவை அவருடைய பேச்சை நானே கேட்டிருக்கிறேன். அந்த அளவுக்கு அதில் ஆழ்ந்த எளிமையான ஆன்மீக பொருள், கருத்துக்கள், மக்களுக்கு தேவையான, வாழ்க்கைக்கு தேவையான உயர்ந்த சிந்தனைகள், அறிவு சார்ந்த கருத்துக்கள், அவர் பேச்சில் இருந்தது. இன்றும் எத்தனையோ வழக்கறிஞர்கள் அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய செல்கிறார்கள். நானே ஆச்சரியப்பட்டேன். ஒரு சாமியார் கூட இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்திருக்க மாட்டார்.
ஆனால், ஒரு வழக்கறிஞராக இருந்து நீதிபதியாக பணியாற்றி, இவர் ஆன்மீகத்தில் இந்த அளவுக்கு சொற்பொழிவு ஆற்றுகிறாரே என்று ஆச்சரியப்பட்டேன் . ஒரு மனிதனுள் இருக்கும் இறை சக்தி, அதை அவ்வளவு எளிதில் தெரிந்து கொள்ள முடியாது. இறை நிலையில் இருப்பவர்கள் மட்டுமே அதை தெரிந்து கொள்ள முடியும் . மேலும், வெளியிடப்பட்ட நூலின் பெயர் என்னை செதுக்குபவர்கள். இது ஒரு அருமையான தலைப்பு. இதில் ஆன்மீகமும் இருக்கலாம், சமூகமும் இருக்கலாம், அரசியலும் இருக்கலாம் அப்படிப்பட்ட ஒரு தலைப்பு தான் என்னை செதுக்குபவர்கள். இந்த நூலை எழுதியவர் அ.வசந்த குமார் .