தினமலர் நிர்வாகி வைத்தியநாதனைப் பார்த்து திமுக அரசு பயப்படுகிறதா? நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசியல் உள்நோக்கத்தையும், அரசியல் தலையீட்டையும் புரிந்து, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சட்ட நடவடிக்கை எடுத்து இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?- தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கம்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மார்ச் 05, 2025 • Makkal Adhikaram

நாட்டில் சட்டத்தின் மாண்பை பாதுகாக்கும் ஆளுநர்கள் அரசு நிர்வாகமும், ஆட்சியாளர்களும், சட்டத்தை அலட்சியப்படுத்தும் போது, ஆளுநர் அதற்கு முக்கியத்துவம் அளித்து, அப் பிரச்சனையை தீர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்.மேலும்,  

இங்கு பிரச்சனையே என்னவென்றால்! தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 57 ஆண்டுகளாக ஒரு தனி மனிதன், தென்காசி மாவட்டம், ஸ்ரீ அண்ணாமலை நாதர் கோயில் சொத்துக்களை குறிப்பிட்ட சில தனி நபர்கள் அபகரித்திருப்பதை எதிர்த்து, நீதிமன்றம் ,சட்ட போராட்டம், அரசு நிர்வாகம் ,அனைத்திற்கும் புகார் மனுவாக அளித்து போராடிவரும் ஒரு நபர்தான் ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஹரிஹரன் .

இவர் போராடுவது கோயில் சொத்துக்கள் கோயிலுக்கு போய் சேர வேண்டும் என்பது நோக்கம் .ஆனால், கோயில் சொத்தை அபகரித்த நபர் தினமலர் பத்திரிக்கை நிர்வாகி வைத்தியநாதனுக்கு முட்டுக் கொடுத்து, அவரை ஏன் திமுக அரசு! அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பயப்படுகிறது? இதுதான் முக்கிய கேள்வி? இதை பொதுமக்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை திமுக அரசு அவரைப் பார்த்து பயப்படுகிறதா? அப்படி என்றால் திமுக அரசின் வீக் பாயிண்ட் என்ன? அது வைத்தியநாதனுக்கு தெரிந்திருக்குமா? மேலும்,  

 சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் அதற்கு மறைமுக வேலை செய்து கொண்டிருக்கும் மேற்படி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும், தலைமைச் செயலக உயர் அதிகாரிகளும், துறை சார்ந்த அமைச்சர்களான சேகர்பாபு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அதாவது பத்திரப்பதிவு தவறாக இந்த சொத்துக்களை பதிந்துள்ளது. 

அதேபோல் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த சொத்துக்களுக்கு இன்றுவரை அதனுடைய ஒரிஜினல் டாக்குமெண்ட்களில் மோசடி செய்து மறைத்து உள்ளடி வேலை செய்துவிட்டார்கள் அவையெல்லாம் மோசடியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்படி இருந்தும் திமுக அமைச்சர்கள் அதற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேலை அரசியல் உள்நோக்கமா?

மேலும், இது எதற்கு? இதைப் பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், இப் பிரச்சனையில் தலையிட வேண்டும். அரசியல் கட்சிகள் சமூக நன்மைக்காக இருக்கிறது என்றால், இந்த கோயில் சொத்தும் சமூக நன்மைக்காகவும், பொது மக்களுக்காகவும் தான் இருக்கிறது. இது தினமலர் பத்திரிகைக்காகவும், நிர்வாகிக்காகவும் இல்லை. மேலும், 

எத்தனையோ பிரச்சனைகளுக்கு போராடுகிற, குரல் கொடுக்கிற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இதற்காக போராட முன் வர வேண்டும் என்று ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பாகவும், மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பாகவும், தமிழக சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பாகவும், அனைவரும் இச் சமூக பிரச்சனைக்கு குரல் கொடுத்து போராட கோரிக்கை. இதில் எந்தவித அரசியல் லாபமும் இன்றி சமூக நன்மையை கருத்தில் கொண்டு போராட முன் வர வேண்டும் என்பதுதான் முக்கிய கோரிக்கை.மேலும்,இது சாதாரண சொத்து அல்ல, பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்து என்பதை பொதுமக்களும், அரசியல் கட்சிகளும், சமூக நலன் அமைப்புகளும், தெரிந்து கொள்ள வேண்டும். 

இது தவிர, தமிழக அரசின் சட்டத்தின் நிர்வாகம் சீர்குலைந்து இருப்பதால், இப் பிரச்சனையில்  சட்டத்தின் மாண்பைக் காக்க தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் என்பது சாமானியனுக்கு ஒரு சட்டம், தினமலர் பத்திரிக்கைக்கு ஒரு சட்டம் என்பது இல்லை என்பது தமிழக மக்களுக்கு தெரியும் ஆனால், அது தமிழக அரசுக்கு தெரியாமல் இருக்கிறது. இவர்களுக்கு சமூக பிரச்சனை எது? மக்கள் பிரச்சனை எது? நீதிமன்ற உத்தரவு எது? என்று தெரியாமல் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வாய்க்கு வந்தவரை பேசிவிட்டு, அதை கார்ப்பரேட் மீடியாக்கள் விளம்பரப்படுத்திவிட்டு தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் வேலை, பத்திரிகை வேலை அல்ல.

 மேலும், ஒரு பொது பிரச்சனைக்காக ஒருவர் தீக்குளிக்கும் அளவிற்கு ஹரிஹரன் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்றால், நாட்டில் எங்கே சமூக நீதி? சமூக நீதி? சமூக நீதி? என்று கத்திக் கொண்டிருக்கின்ற திருமாவளவன் எங்கே போய்விட்டார்? அவரவருக்கு வேண்டும்போது சமூகநீதி, அடுத்தவனுக்கு அது என்ன (நீதி) அநீதியா? மேலும், ஹரிஹரன்

நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசின் நிர்வாகம், சட்டத்தின் ஓட்டைகளை சட்டமாக செயல்படுத்திக் கொண்டிருப்பது பற்றி தமிழக ஆளுநர்  ஆர். என். ரவி இப் பிரச்சனையில் சட்டத்தை பாதுகாத்து சமூக நீதி கிடைக்க தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பிலும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், தமிழக மக்களின் பிரச்சனையாக, மேற்படி பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *