RTI act தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகளுக்கு! சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கண்டனம் .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஊராட்சிகளுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தகுதியானவர்கள் ஒரு சதவீதம் கூட தேட மாட்டார்கள் . எவ்வளவு பொய் கணக்கு எழுதலாம்? எப்படி எல்லாம் ஊர் சொத்துக்களை தன் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகலாம் ? இதற்கு தான் போட்டி போடுகிறார்கள். ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று போட்டி போடுபவர்கள் மிக மிக குறைவு. 

கிராமங்களில் நன்றாக பேசினால், அவர்களுக்கு ஏற்றார் போல் பேசினால், அவர்களுக்கு தேவையான ஏதோ ஒரு வேலையை செய்து கொடுத்தால், அவர்களுடைய நல்லது, கெட்டது நடக்கும் குடும்ப விஷயங்களில் மொழி கவர் எழுதினால், ஓட்டுக்கு அதிகம் பணம் கொடுத்தால் ,இப்படி மக்களே தவறு செய்கிறார்கள். இதை தேர்தல் ஆணையம் பலமுறை எமது பத்திரிக்கையில், இணையதளத்தில் கொண்டு சென்றோம் நடவடிக்கை எடுக்கவில்லை .அது அவர்களுடைய தவறு. 

ஊராட்சிகளில் நடக்கின்ற தவறுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு புகாராக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கொடுத்தால் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்துவது மாவட்ட ஆட்சியரின் தவறு .மேலும், நியாயத்தை தட்டி கேட்கும் சமூக ஆர்வலர்களுக்கும் ,சமூக நலன் பத்திரிகைகளுக்கும் தவறு செய்கின்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் காவல்துறையில் பொய் புகார்களை கொடுத்து, அவர்களை மிரட்டுவது அல்லது பொய் வழக்கு போடுவது இது எல்லாம் ஊராட்சிகளில் நடக்கின்ற வேலை இவ்வளவு தவறுகளை சுட்டிக்காட்டி பத்திரிகைகளில் வெளியிடும் பத்திரிகைகள் தமிழ்நாட்டில் ஒன்றோ அல்லது இரண்டோ தான் இருக்கும்.

 கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள் நோகாமல் பாராட்டிவிட்டு சலுகை, விளம்பரங்களை வாங்கி கொள்வார்கள். ஊராட்சி மன்ற தலைவர் இந்த போட்டி நடத்தினார் ,மரக்கன்று நட்டார், ஏலம் பெற்றார், எல்லாம் படிப்பதற்கு பெருமையாக தான் இருக்கும் .மாம்பழம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால், அதுக்குள்ள சொத்தை இருக்கும்போது அது எப்படி சாப்பிடுவது? இந்த நிலைமைதான் ஊராட்சிகள் நிலைமை. இதே நிலைமைதான் கார்ப்பரேட் பத்திரிகைகளின் நிலைமை.

 எஃப் ஐ ஆர் போட்டால் அவர்களைப் பற்றி வெளியிடுவார்கள். இது எப்படி என்றால்? காவல்துறையில் பணியாற்றுபவர்கள் திருடனை அவர்களாக பிடிக்காமல், மக்கள் பிடித்து அவர்களிடம் ஒப்படைத்தால், அவர்கள் எஃப் ஐ ஆர் போடுவார்கள். அதற்கு காவல்துறையே தேவையில்லை. இதே நிலைமைதான் இந்த கார்ப்பரேட் பத்திரிகை தினத்தந்தி, தினமணி  பெரிய தொலைக்காட்சிகள். மக்கள் செய்கின்ற தவறுகள் இன்று மக்களிடம் தான் வந்து நிற்கிறது.

அரசியல் தெரியாமல், தகுதி இல்லாமல் ஒருவரை தேர்வு செய்வதால், நாட்டில் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள்? எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது? இதை மட்டும் கணக்கிட்டு பாருங்கள், இதையே ஒரு சில சிறு பத்திரிகைகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர் டி ஐ மூலம் அவர்களுடைய பத்திரிகை நிருபர்கள் கேள்வி கேட்பார்கள். அந்த ஊராட்சிகளில் என்ன வரவு செலவு வந்தது? போனது? எந்தெந்த திட்டங்கள் வந்தது? இதில் எப்படி ஊராட்சி மன்ற தலைவர் தவறு பண்ணுவார் ?மேலும்,

அவர் கொடுத்த பணத்தை 10 பங்குக்கு மேல் எடுக்க வேண்டும். அதில் பெரும்பாலும் இந்த கணக்கை சரிகட்டும் ஆடிட்டர்கள், பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், எல்லோரும் கூட்டு சேர்ந்து இதில் பங்கு எடுத்துக் கொண்டு, தவறு வெளிவராமல் பார்த்துக் கொள்வார்கள் .இதிலேயும் கிராமத்தில் உள்ள ஒரு சில சமூக ஆர்வலர்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தால், அதை சரி செய்ய அரசியல் தலையீடு வரும். இவ்வளவு நிலையில் தடைகள் இருக்கும் போது RTI கேட்டு அதில் எந்தெந்த திட்டத்தில் எவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்பதை கணக்கு போட்டு, இந்த பிளாக் மெயில் பத்திரிக்கைகள் ஊராட்சி மன்ற தலைவர்களை குறி வைத்து லட்சங்களை சம்பாதிக்கிறார்கள். 

தேனி மாவட்டத்தில் இது போன்ற பத்திரிகைகள் பல இருப்பதாக தகவல். அது பற்றி எமது செய்தியாளர் மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் முரளிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படிப்பட்ட பத்திரிகை நடத்த வேண்டிய அவசியமில்லை. பேனா பிடிக்க வேண்டிய அவசியமில்லை. கத்தியைக் காட்டி மிரட்டலாம். இந்த பத்திரிகைகள் நடத்துவதற்கு எவ்வளவு போராட்டம்? எவ்வளவு கஷ்டங்கள்? தகுதி இருந்தும், அவர்களுடைய உழைப்புக்கு ,உண்மைக்கு அரசாங்கம் சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல் செய்தித் துறை தவறு செய்கிறது என்றால், தவறு செய்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது பத்திரிக்கையின் நோக்கம் அல்ல. 

பத்திரிக்கை என்றால்? எதற்காக பத்திரிக்கை? ஏன் பத்திரிக்கை? என்ற கேள்விக்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் பத்திரிகை என்கிறார்கள். ஏதோ பணம் சம்பாதிக்கணும், ஏதோ பல லட்சங்களை எப்படியாவது பார்க்கணும். இதற்கெல்லாம் பத்து ஆண்டுகாலம் இந்த பத்திரிகையுடன் நான் போராட வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சி இல்லாமல் பத்திரிகை நடத்துவது வீண் . 

பத்திரிக்கை என்றால் என்ன? என்று தெரியாமல் பந்தா காட்டி விட்டுப் போவதற்கு, பத்திரிக்கை நடத்த வேண்டிய அவசியமில்லை .ஒரு பத்திரிக்கை செய்தியைப் பார்த்து, தலைப்பை மாற்றி அப்படியே போடும் பத்திரிகைகளும் உண்டு. இவர்களும் பத்திரிகை என்கிறார்கள். இவர்களும் அடையாள அட்டை வைத்துக் கொண்டு நானும் பத்திரிகை என்கிறார்கள். இதையெல்லாம் மத்திய மாநில அரசின் செய்தித் துறை கண்டு கொள்வது இல்லை. எவ்வளவு தவறுகள் தொடர் சங்கிலியாக வருகிறது? இப்படி எல்லாம் இருப்பதால் இந்த பிரச்சனைகள் நாட்டில் அதிகரிக்க, அதிகரிக்க ஒரு கட்டத்தில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு, மக்களின் வாழ்க்கை போராட்டமாகி ,

வேலையில்லா தீண்டாட்டம், விலைவாசி உயர்வு ,வரி உயர்வு ,வருமானம் இல்லாமல் திருடு, கொலை ,கொள்ளை போன்ற சமூகப் பிரச்சனைகள் அதிகரிப்பு, இதனால், அரசியல் மக்களுக்கு ஏமாற்றமாகி மக்களின் வாழ்க்கை போராட்டமாக மாறும் .அப்படி மாறினால் மக்கள் நிம்மதி இல்லாமல், சந்தோசம் இல்லாமல், மனித வாழ்க்கை கேள்விக்குறியாகும். இதுதான் மனித வாழ்க்கையின் இறுதி முடிவு .

அதனால்,மக்கள் முதலில் திருந்த வேண்டும். நீங்கள் திருந்தாதவரை இதனுடைய தொடர் தவறுகள் எவ்வளவு சங்கிலியாக இருக்கிறது? என்பதை சிந்தியுங்கள். அரசியல் என்பது மக்கள் அதிகாரம் கொடுப்பதால், அது கொள்ளையடிப்பதற்கு அல்ல . தெரியாமல் வாக்களித்து விட்டான் அல்லது பணத்திற்காக வாக்களித்து விட்டான், அதை சட்டத்தின் மூலம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி நான் கொள்ளையடித்துக் கொள்கிறேன். நான் திருடிக் கொள்கிறேன். என்றால்! இதற்கு இந்த வேலைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *