தமிழ்நாட்டிலே அதிகமான சுற்றுச்சூழல் பாதிப்புள்ள சிப்காட் கும்மிடிப்பூண்டி . இங்கு உள்ள சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு அதிகாரி லிவிங்ஸ்டன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பொதுமக்கள் கேள்வி?

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

செப்டம்பர் 28, 2024 • Makkal Adhikaram

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் சுற்றுச்சூழல் மாசு அதிக அளவில் உள்ளதால் பொதுமக்கள் வேறு வழியில்லை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவிக்கிறார்கள். கம்பெனிகள் தேவை. ஆனால், அந்த கம்பெனிகள் மனித வாழ்க்கைக்கு பிரச்சனைகளாகவும், உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும், விவசாய நிலங்களுக்கும், இது மக்கள் வாழ்க்கையில் பிரச்சனையாக இருந்து வருகிறது என்பது இங்குள்ள பொதுமக்களின் குற்றச்சாட்டு .

 . இது பற்றி சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் டிவிஷனல் இன்ஜினியர் லிவிங்ஸ்டன் இடம் கேட்க வந்த போது ,அவர் அலுவலகத்தில் இல்லை. போன் செய்தாலும் அவர் மீட்டிங்கில் இருப்பதாக மெசேஜ் வந்தது. இது ஒரு பக்கம் மக்கள் பிரச்சனை என்றாலும், மற்றொரு பக்கம் இந்த புகை மண்டலம் காற்று மண்டலத்தை ஒவ்வொரு நாளும் மாசு படுத்திக் கொண்டிருக்கிறது. மனிதன் வாழ்வதற்கு காற்று, தண்ணீர் ,மண், ஆகாயம், அதாவது வான மண்டலம் இவை அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும். 

அதாவது பஞ்சபூதங்கள் தான் மனித வாழ்க்கையை தீர்மானிக்கிறது . விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித வாழ்க்கைக்கு அளவோடு இருக்க வேண்டும். அது அளவுக்கு அதிகமானால், அதுவே தீமையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒவ்வொரு விஞ்ஞானத்தின் வளர்ச்சியிலும், மனித வாழ்க்கையின் நிம்மதி, சந்தோஷம், நிறைவு குறைந்து கொண்டுதான் இருக்கிறது. காற்று மண்டலத்தில் எந்த அளவுக்கு மாசு ஏற்படுகிறதோ, அந்த அளவிற்கு விவசாயத்தின் உற்பத்தி குறைந்து விட்டது.மேலும்,

அதேபோல் நிலத்தடி நீர், குடிக்க தண்ணீர் மாசு அடைந்தால் மக்களுக்கு நோய் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல, இந்த நச்சுக்கள் விலை பொருட்களில் கலந்து அதை மனிதன் உண்டு .அதனால் பல நோய்கள் உருவாகிறது.இதைப் பற்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முதலில் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை . அடுத்தது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த எண்ணெய்கள் சுகாதாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறதா? இந்த எண்ணெயை கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாக இருக்கிறதா?  மக்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறதா? என்பதை எந்த ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரியையும், இதை லேபில்  (Lab test) ல் கொண்டு போய் பார்ப்பதில்லை. 

இதைப் பற்றி திருவள்ளூர் மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு அதிகாரி போஸ் இடம் கேட்டபோது, அவர் இந்த மாவட்டத்திலேயே நான் தான் அதிகமான எண்ணெயை கடைகளில் இருந்து எடுத்து நான் அவார்ட் வாங்கி இருக்கிறேன் என்கிறார். இந்த அவார்டு வைத்து இவருக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். மக்களுக்கு இவருடைய அவார்டால் எந்த நன்மையும் இல்லை. முதலில் இந்த ஒவ்வொரு எண்ணை தயாரிக்கும் கம்பெனிகள் எந்த தரத்தில் வெளி வருகிறது ?அந்த எண்ணைகள் எந்த ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டது ?ஆய்வு செய்யப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிறது? இவை அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள், கடமைக்கு உணவு பொருட்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். 

ஏன் திருவள்ளூர் கடைகளில் கூட பருப்பு வகைகளில் கலப்படம், எண்ணை வகைகளில் கலப்படம், இதைக் கூட இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் எப்படி எண்ணெய் நிறுவனங்களில் உள்ள கலப்படத்தை தரத்தை கண்டுபிடிப்பார்கள்?கேட்டால் நீங்கள் சேம்பிள் கொண்டு வந்து எங்களிடம் காட்டுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அதற்கு நீங்கள் வேலைக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. எப்படி போலீஸ் திருடனை மக்கள் பிடித்து கொடுங்கள். நாங்கள் அவன் மீது வழக்கு போட்டுக் கொள்கிறோம் என்று சொல்வது போல், இவர்கள் பேசுகிறார்கள்.

மேலும்,இந்த கலப்படம் பொருட்கள், தர மற்ற எண்ணெய்கள் என்று மக்களுக்கு அதிகப்படியான ஹார்ட் அட்டாக் ஏன் வருகிறது? 50 வயது கூட தாண்டவில்லை .அவர்களுக்கெல்லாம் ஹார்ட் அட்டாக் வருகிறது. காரணம் எண்ணெய் பொருட்கள் தூய்மையானதாக இல்லை. கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகப்படியான எண்ணெய் கம்பெனிகள் இருக்கிறது. இந்த கம்பெனிகள் எல்லாம் தரமான எண்ணையை உற்பத்தி செய்கிறதா? என்பது மிகப்பெரிய கேள்வி? இந்த எண்ணெய் கம்பெனிகளில் இருந்து வரக்கூடிய புகை, அந்த பகுதி முழுவதுமே ஒரு தீயில் கருகிய உபயோகமற்ற எண்ணெய் வாசனை தான் வருகிறது. இது கும்மிடிப்பூண்டியில் இருந்து பெரியபாளையம் வரும் வரை இருக்கிறது. 

இது மட்டுமல்ல, கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் கம்பெனிகளால் சுமார் 20 கிலோ மீட்டர் அளவுக்கு அந்த பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த புவியின் சுற்றுச்சூழல் மாசு அதிக வெப்பத்தை, காற்று மண்டலத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் புவி வெப்பமயமாதல் தொடர்கிறது. புவி வெப்பமயமாதலால் இயற்கையின் பாதிப்பை அதாவது அதிக வெயில் அதிக மழை இவை எல்லாம் மனித குல  வாழ்க்கைக்கு எதிரானது . இதைப்பற்றி ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு தேவை பணம். அதிகாரிகளுக்கு தேவை பணம். இதனால் எவ்வளவு பாதிப்புகள் மக்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது ?மக்கள் சகித்துக் கொண்டு வேறு வழியில்லை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் மக்கள் நிலைமை.

மேலும், பக்கத்திலே ஆந்திராவில் ஸ்ரீ சிட்டி என்ற சிப்காட் இருக்கிறது. அங்கே (பொல்யூஷன்) சுற்றுச்சூழல் மாசு என்பதே இல்லை என்கிறார்கள்.  அந்த அளவிற்கு அங்குள்ள மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் அதை பராமரித்து வருகிறார்கள். இதை ஏன் தமிழ்நாட்டில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரிகள் பராமரிக்கக் கூடாது ? என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு . 

மேலும், கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் சூர்யா டிஎம்டி கம்பெனி ,ஏ ஆர் எஸ் டி எம் டி கம்பெனி, எம் டி சி, ரதி ரப்பர் கம்பெனி, சன்ஃபீஸ்ட் அலுமினியம் கம்பெனி, கேமின் ஆடு, மாடு ,கோழி தீவன கம்பெனி, அஞ்சான் மாத்திரை கம்பெனி, டிவிஎம் ஆயில் கம்பெனி, கேவிடி ஆயில் கம்பெனி, டால்மியா சிமெண்ட் கம்பெனி, ஜி ஆர் மெட்டல் கம்பெனி, டிவிஎஸ் கம்பெனி, ட்ரிபிள் 7 ஊறுகாய் கம்பெனி ,ஆச்சி மசாலா ஊறுகாய் கம்பெனி இவையெல்லாம் ஒரு பக்கம் நிலத்தடி நீரையும், மண்ணையும் மாசு படுத்திக் கொண்டு, மற்றொரு பக்கம் காற்று மண்டலத்தை மாசு படுத்திக் கொண்டு, கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு அதிக அளவில் எல்லையை மீறும் கம்பெனிகளாக இருந்து வருவதாக தகவல். 

இது பற்றி பொதுமக்கள் தருகின்ற தகவல் என்ன? என்பதை பற்றி இங்கே வீடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது .அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் பார்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *