நாட்டில் சமூக அரசியல்வாதியாக இருந்தவர்கள்! இன்று கார்ப்பரேட் அரசியல்வாதியாக திமுக, அதிமுக வில் எப்படி மாறினார்கள்?அதுதான் ஊழல் அரசியலா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மார்ச் 07, 2025 • Makkal Adhikaram

 நாட்டில் சமூக அரசியல்வாதியாக இருந்தவர்கள்! இன்று கார்ப்பரேட் அரசியல்வாதியாக திமுக, அதிமுக எப்படி மாறினார்கள்?அதுதான் ஊழல் அரசியலா?

1965 பிறகு திமுக, அதிமுக என்ற ஒரு கட்சி மக்களிடம் அறிமுகமானது. அப்போது இந்த கட்சியினர் நிலைமை என்ன? என்பது பற்றி அரசியல் தெரிந்த மக்களிடம் கேட்டுப் பாருங்கள். 

இன்று அப்படிப்பட்டவர்கள் சுமார் 65 முதல் 80, 85, 90 வயது உள்ள நபர்களை கேட்டால், திமுக கட்சி மற்றும் திமுகவினரின் சொத்து மதிப்பு, வாழ்க்கை தரம், அவர்களுடைய தகுதி, எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்கிறார்கள். மேலும்,1975க்கு  பிறகு எம்ஜிஆர் அதிமுக என்ற ஒரு கட்சியை உருவாக்கி 1977- 78 இல் தேர்தலில் நிற்கிறார். அப்போது இந்த கட்சியினர் உடைய வருமானம்? தொழில் ?தகுதி ?தரம்? எல்லாவற்றையும் எடுத்துப் பாருங்கள். எந்த அளவிற்கு இவர்களுடைய அரசியல் சமூக அரசியல்வாதியாக இருந்து, இன்று இரண்டு கட்சிகளிலும், கார்ப்பரேட் அரசியல்வாதியாக மாறி இருக்கிறார்கள். அதாவது அப்போது திமுக,அதிமுக  இரண்டு கட்சிகளிலும் இவர்கள்

சமூக அரசியல்வாதியாக இருக்கும்போது, ஒரு கட்சி கூட்டம் நடத்தும் போதும், அல்லது தேர்தல் செலவுக்கும் இவர்கள் தொழில் நிறுவனங்களை தான் நம்பியிருந்தார்கள் என்று தொழில் நிறுவனங்களை நடத்துகின்ற நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள் ஆனால், இன்று அப்படி இல்லை .இவர்களே கார்ப்பரேட் அரசியல்வாதியாக மாறிவிட்டார்கள் என்கிறார்கள்.

அதாவது கார்ப்பரேட் என்றால் குறைந்தபட்சம் 100 கோடி சொத்து மதிப்பு உள்ள அரசியல்வாதியாக இன்று அதிமுக, திமுகவில் மற்றும் கோடிக்கணக்கானோர் இந்த கார்ப்பரேட் அரசியல்வாதியாக இருக்கிறார்கள் என்று தெரிவிக்கின்றனர். நான் கேள்விப்பட்ட ஒரு சில சமூக அரசியல்வாதியாக இருந்த மற்றும் தற்போது பல ஆயிரம் 500 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கக்கூடிய கார்ப்பரேட் அரசியல்வாதிகளை பற்றி தான். அது மக்களுக்கும் தெரிந்த ஒன்று. இந்த தகவலும் மக்களிடம் வந்த தகவல் தான். தற்போது,

திமுகவில் எம்பி யாக இருக்கக்கூடிய ஜெகத்ரட்சகன் ஒரு சாதாரண வாடகை வீட்டில் குடியிருந்தவர் என்று கேள்விப்பட்டேன். இன்று பல ஆயிரம் கோடி கார்ப்பரேட் அரசியல்வாதி. அதேபோல், மாறன் குடும்ப சொத்து எல்லாம், ஒன்றும் இல்லாமல் நடுத்தெருவில் வந்த போது, எம்ஜிஆர் படம் நடித்து இவருடைய சொத்துக்களை காப்பாற்றியதாக தகவல். இன்று அதுவும் பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதியாகி, கார்ப்பரேட் அரசியல்வாதி.

தற்போதைய அதிமுகவில் தன்னை ஒரு குறு நில மன்னன் என்று சொல்லிக் கொள்ளும் ராஜேந்திர பாலாஜி ,விருதுநகரில் போஸ்டர் ஓட்டிக் கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜி, இன்று அவருடைய சொத்து மதிப்பு 500 கோடிக்கு மேல் என்று இன்றைய கட்சி வட்டார தகவல். அதேபோல், எடப்பாடி பழனிசாமி சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து காய்கறிகளை சந்தைக்கு ஓட்டி சென்றவராம். மேலும் ,கருணாநிதி சொல்ல வேண்டியதில்லை. தமிழ்நாட்டிலேயே இன்று உலகப் பணக்கார வரிசையில் வந்து விட்டார். 

இப்படி அதிமுக, திமுக கட்சியில் அன்று சோத்துக்கே வழியில்லாதவர்கள் எல்லாம் இன்று கார்பரேட் அரசியல்வாதியாக வந்து விட்டார்கள். இது எப்படி முடியும்? எந்த தொழிலும் இல்லை, எந்த படிப்பறிவும் இல்லை, எந்த உழைப்பும் இல்லை, ஆனால், பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு அதிபதி ஆகிவிட்டார்கள். இப்படி உழைக்காமல் மக்களுடைய வரிப்பணம், அரசியல் கொள்ளையர்களாக மாறி இருப்பது தான் இன்றைய கார்ப்பரேட் அரசியல் வாதிகளின் உண்மையான நிலைமை. 

இந்த கார்ப்பரேட் அரசியல்வாதிகள் எப்படி மீண்டும், மீண்டும் பணத்தை கொடுத்து மீண்டும், மீண்டும் ஊழல் செய்து, சொத்துக்களை கோடிகளாக பெருக்கி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சொத்துக்கள் வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இன்று 10 லட்சம் கோடி கடன் .இந்த இரண்டு ஆட்சியும் மாறி, மாறி வந்ததில் தமிழ்நாட்டின் நிதி நிலைமை கேள்விக்குறியாகி, கடனில் தத்தளிக்கின்ற நிலைமைக்கு தமிழகம் வந்துள்ளது. இதைப் பற்றி எந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலையாட்சியாவது மக்களுக்கு இந்த உண்மையை வெளிப்படுத்துவார்களா? அல்லது டி.வி. விவாதங்களில் விவாதிக்கின்ற நடுநிலையாளர் விவாதிப்பாரா? ஒரு போதும் விவாதிக்க மாட்டார்கள். 

ஏனென்றால், இவர்கள் இந்த கார்ப்பரேட் அரசியல்வாதிகளுக்காக தான், இந்த கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சமூக நன்மைக்காக, சமூக நலனுக்காக இருக்க வேண்டிய இன்றைய பத்திரிக்கைகள், கார்ப்பரேட் அரசியல் வாதிகளுக்காக  மாறிவிட்டது. அதனால்தான் சாமானிய மக்கள் ,நடுத்தர மக்கள் முன்னேற்றம் கேள்விக்குறியாக இருக்கிறது. 

மக்களுக்கு எதற்காக இலவசம் கொடுக்கிறீர்கள்? ஏன் கொடுக்கிறீர்கள்? ஊழல் அரசியலை மறைக்க கொடுக்கிறீர்களா? மக்களின் உழைப்புக்கு உண்மையான ஊதியம் கிடைத்தாலே போதும். அதே போல் தான் இன்று வரை இந்த சாமானிய பத்திரிகைகள் வளர்ச்சிக்கு ஒரு போதும், மத்திய – மாநில அரசாங்கம் சலுகை, விளம்பரங்களை கொடுக்கவில்லை. ஏன் அதை கொடுக்க மறுக்கிறார்கள்? இதில், கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் அரசியல் தலையீடு ரகசியமாக உள்ளது. மேலும், பத்திரிக்கை சட்டங்கள் அதாவது சர்குலேஷன் சட்டம், இது கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்காக போடப்பட்ட சட்டம், இது பற்றிய எத்தனையோ முறை உயர் அதிகாரிகளுக்கு பதிவு தபால்கள் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது .ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும்,

காலத்திற்கு ஏற்றவாறு பத்திரிக்கை துறை மாறி இருக்கிறது .அந்த காலத்தில் பத்திரிக்கை விடியற்காலையில் எப்போது வரும்? என்று எதிர்பார்த்து மக்கள் விருப்பத்துடன் வாங்கிப் படித்த காலங்கள் மாறிவிட்டது. அதேபோல், மாலை பத்திரிக்கை எப்போது வரும்? என்று எதிர்பார்த்து விரும்பி வாங்கி படித்த வாசகர்கள் மாறிவிட்டார்கள் .இன்று எல்லாமே இணையதளம் மயமாகிவிட்டதால், பத்திரிக்கை இணையதளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதனால், பத்திரிக்கை துறையும், அதற்கு ஏற்ற மாற்றங்களை, மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பத்திரிக்கை துறை மாற்றம் கொண்டு வர வேண்டும். 

அன்று இருந்த அதே சர்குலேஷன் சட்டம் இன்றும், அதே சர்குலேஷன் சட்டத்தை வைத்து எங்களைப் போன்ற சாமானிய பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களை ஏமாற்றிக் கொண்டு, இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், கார்ப்பரேட் அரசியல்வாதிகளுக்காக நடத்தப்படும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளாக மாறிவிட்டது. அதற்கு தான் மத்திய மாநில அரசின் செய்தித்துறை !சலுகை, விளம்பரங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கான உண்மை செய்திகளை விட, இந்த செய்தி துறையில் பணியாற்றக் கூடிய அரசு அதிகாரிகள்,

ஆட்சியாளர்களின் பேச்சுக்களை விளம்பரப்படுத்துவதிலும், போட்டோக்களை போட்டி, போட்டு மக்களிடம் விளம்பரப்படுத்துவதிலும், அவையெல்லாம் மக்களுக்கான முக்கியத்துவமான செய்திகளாக, மக்களிடம் செய்திகளாக திணித்துக் கொண்டிருக்கிறார்கள் .ஒரு அமைச்சரோ அல்லது அரசுத்துறை அதிகாரியோ அல்லது மாவட்ட ஆட்சியர் அவர்களுடைய வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக தான், அவர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதில் இவர்கள் இலவசமாக யாரும் வேலை செய்யவில்லை .எல்லோரும் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் வேலை பார்க்கிறார்கள். அப்படி இருக்கும்போது, இந்த செய்திகள் மக்களுக்கு முக்கியத்துவம் என்று தினசரி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அதை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு அமைச்சர் ஒரு இடத்தில் போய் அங்கே அடிக்கல் நாட்டுகிறார். அல்லது மக்களிடம் என்ன குறை என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்? இது எல்லாம் மக்கள் பணிக்காக அவர் வந்தவர். அந்த வேலையை செய்துதான் ஆக வேண்டும்.

 அதில் என்ன? இவருடைய முக்கியமான ஒரு பணி ,மக்களிடம் செய்திருக்கிறார் ?அப்படி ஏதாவது இருந்தாலும், பரவாயில்லை .எதுவுமே இல்லை. சாதாரண அவர்களுடைய ஒரு அலுவல் பணி என்றே தான், அதை சொல்ல வேண்டும் .அந்த அலுவல் பணி கூட, இந்த பத்திரிகைகளில் செய்தி என்று செய்தித் துறை அதிகாரிகள், அதற்கு ஒரு பிரஸ் ரிலீஸ் வெளியிடுகிறார்கள் .அவர்கள் பார்வையிட்ட போட்டோவை வெளியிடுகிறார்கள்.

இதையெல்லாம் கட்டிங் போட்டு அமைச்சர் பார்வைக்கு,ஆட்சியர் பார்வைக்கு, இவர் அனுப்பி வைக்க, இவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம். இது இரண்டு பேர் செய்யக்கூடிய வேலையை 10, 15 பேர் செய்து கொண்டு, இதற்கு மிகப்பெரிய ஒரு போலியான அரசியல் மற்றும் போலியான பத்திரிக்கை பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தி துறை அதிகாரிகள். இவர்களுக்கே செய்தியின் உண்மைத் தன்மை எது? எது செய்தி என்று கூட தெரியாதவர்கள் எல்லாம், இன்று பிஆர்ஓ.

இப்படி இருக்கின்ற இந்த பத்திரிகை துறைக்கு, மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், விரைவில் நீதிமன்றத்தின் கதவை மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில், இந்த உண்மைகளை கொண்டு செல்ல கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை மக்கள் முன் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சியும், கார்ப்பரேட் அரசியல்வாதியும், எப்படி அவர்களுக்குள், ஒரு அரசியல் உடன்படிக்கையோடு போலியான பத்திரிக்கை பிம்பத்தையும், போலியான அரசியலையும் மக்களிடம் கொண்டு செல்கிறார்கள் என்பதை தான் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *