ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு விரைவு ரயிலும் புறப்பட்ட இடத்திலிருந்து ,போய் சேரும் வரை ரயில்வே நிர்வாகம் பாதுகாப்பு உறுதி செய்யுமா ? ரயில் பயணிகள்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட்

அக்டோபர் 12, 2024 • Makkal Adhikaram

நள்ளிரவில் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது விரைவு வண்டி மோதியதால் ரயில் பயணிகள் அதிர்ச்சி . 

சென்னையில் இருந்து புறப்பட்ட மைசூர் தார்பங்கா எக்ஸ்பிரஸ் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக முயற்சிதம் ஏற்படவில்லை. ஆனால், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல். மேலும், இந்த விபத்திற்கு முக்கிய காரணம் ரயில்வே நிர்வாக ஊழியர்களின் அலட்சியம் . லூப் லைனில் ஏற்கனவே சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. அதே லைனில் விரைவு வண்டி சென்றுள்ளதால், இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆனால், விரைவு ரயிலுக்கு விரைவு ரயில் பாதையில் தான் சிக்னல் கொடுக்கப்பட்டதாக வெளிவரும் தகவல். இதில் விரைவு ரயில் ஓட்டுனர்கள் தவறா? அல்லது ஸ்டேஷன் மாஸ்டர் தவறா? என்பது விசாரணையில் தெரியவரும். இது போன்ற விபத்துக்களால், ரயில் பயணிகள் அச்சமடைந்துள்ளனர் . அவர்கள் நள்ளிரவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், செய்வதறியாது திகைத்துள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்த மக்கள் உதவிக்காக சென்றுள்ளனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது.

 இது தவிர, இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து வருவருகிறது . இதை எல்லாம் ரயில்வே நிர்வாகம் ஒரு விரைவு வண்டி புறப்பட்ட பகுதியில் இருந்து அது போய் சேரும் வரை, ஆன்லைனில் அதை கண்காணிக்கப்பட வேண்டும். அதற்கு சரியான முறையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அந்த வண்டியை இயக்குகிறார்களா? என்பதை ஆன்லைன் மூலம் ஒவ்வொரு விஷயத்தையும் ரயில்வே நிர்வாகம் கண்காணிக்கப்பட வேண்டும்.

இது தவிர, ஸ்டேஷன் நிர்வாகம் இதற்கு சரியான முறையில் அதற்குரிய வழித்தடத்தில் சிக்னல் கொடுக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். இப்படி கண்காணித்தால் ரயில்வேயில் நிச்சயம் இது போன்ற விபத்துக்கள் நடக்க வாய்ப்பில்லை. அப்படியே வரும் விபத்துக்களை கூட ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் இஞ்சின் டிரைவர்களிடம் வாக்கி டாக்கி மூலம் பேசி அதை சரி செய்யலாம் . 

அதனால் ரயில்வே நிர்வாகம் உடனடியாக விபத்துக்களை தடுக்க ஒவ்வொரு விரைவு வண்டியும் அது புறப்பட்டுத்திலிருந்து, அது போய் சேரும் வரை கண்காணிக்க வேண்டியது முக்கிய பொறுப்பு ரயில்வே நிர்வாகம். அப்போது தான் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் . ரயில்வே நிர்வாகம் இதை செய்யுமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *