அரசு நிர்வாகத்தை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம் .

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூலை 24, 2024 • Makkal Adhikaram

நெடுஞ்சாலைத் துறையில் மிகப்பெரிய ஊழல்கள் அரசு அதிகாரிகள் தலையில் போய் விடிகிறது. வேலை செய்யாமலே 10% கமிஷன் ,சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டருக்கு போய் சேர வேண்டும் என்கிறார்கள். இது தவிர, 25 சதவீதம் கமிஷன், இப்படி எல்லாமே கமிஷனாக போய்விட்டால் ,அங்கே சாலையின் தரம் எப்படி இருக்கும்? அது மட்டுமல்ல, இப்படிப்பட்ட சாலைகள் போடுவதால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறது. 

இதனால் பாதிக்கப்படுவது அதிகாரிகளும், பொதுமக்களும், பொதுமக்களின் வரிப்பணம் தான். இதைப் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை. திமுக அரசு நாங்கள் எது செய்தாலும், எங்களை விட உத்தமர்கள் யாரும் இருக்க முடியாது என்று தான் பேசிவிட்டு போவார்கள். இதை தான் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றிக் கொண்டு எழுதி பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பார்கள் .ஏதோ ஒரு சில பத்திரிகைகள் தான் மக்களுக்கு உண்மையை சொல்லிக் கொண்டிருக்கிறது.

இதுபோல் சொன்னால் அவர்கள் பிழைப்பு நடத்த முடியாது. மனசாட்சி உள்ள பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இல்லை. மக்களுக்கு இந்த உண்மைகள் சொன்னாலும், அவர்களும் அலட்சியமாகத் தான் இருக்கப் போகிறார்கள். எதை நம்புவார்கள்? போலியை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் நாடு மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

நாட்டில் அரசியல் சுயநலமாகிவிட்டால், எவ்வளவு பேருக்கு அது பிரச்சினையாக உருவெடுக்கிறது? என்பது இந்தப் போராட்டத்தின் உச்சகட்டம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆடு, மாடுகளுக்கு தான் புரியாது. சொன்னால் எது உண்மை? எது என்று தெரியாது. ஆனால், மனித இனம் அப்படியல்ல, எப்படியும் பேசலாம், எப்படியும் வாழலாம் என்றால் இப்படித்தான் இந்த ஆட்சியாளர்களிடம் அடிமையாகவும், ஓட்டுக்கு பணம் வாங்கி, ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு, அதனால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள்?

அரசு ஊழியர்கள் முதல் மக்கள் மனசாட்சி உள்ள சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து, இந்த மக்கள் எப்போது இதையெல்லாம் உணர்ந்து திருந்தப் போகிறார்கள் ?என்பதுதான் அவர்களின் மிகப்பெரிய கவலை. ஒரு அரசு ஊழியர்களே காத்திருப்பு போராட்டம் நடத்துகிறார்கள் என்றால், திமுக அரசின் ஆட்சி நிர்வாகம் எவ்வளவு கேவலமாகி விட்டது என்பதுதான் சமூக நலன் பத்திரிகைகள் தெரிவிக்கும் கவலை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *