ஜூலை 27, 2024 • Makkal Adhikaram
விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க, மக்களுக்கு உழைக்கும் திறன் குறைந்து விடுகிறது .உடல் உழைப்பு குறைந்தால், மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தம் சமூகத்தில் இருந்து, அது மனிதனை வேறு படுத்துகிறது. 24 மணி நேரமும் தான் பிசியாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் .சரி அப்படியே இருந்தாலும், சந்தோஷம் கேள்விக்குறியாகும். நிம்மதி கேள்விக்குறியாகும்.
இது எதனால்?( Dopamine )என்ற மகிழ்ச்சி ஹார்மோன் (happy hormones) சுரப்பது குறைந்து விடுகிறது. அது மனிதன் கடினமான வேலை செய்தால் மட்டுமே சுரக்கும் . அதாவது உடற்பயிற்சி, படித்தல், வாழ்க்கைக்கு தேவையான வேலைகளை செய்து முடிக்கும் போது ,இந்த மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கும். மேலும், இந்த ஹார்மோன் துரித உணவுகள் ,இனிப்புகள் சாப்பிடும் போதும் சுரக்கிறது. அதனால் தான் நமக்கு ஒரு மகிழ்ச்சியான உணர்வு ஏற்படுகிறது. இது நம்மை அறியாமல் நம்மை சாப்பிட தூண்டுகிறது .
அதேபோல் நாம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் போன் பத்து நிமிடம் பயன்படுத்தலாம் என்று நினைத்தால், ஒரு மணி நேரம் மேல் ஆகிவிடுகிறது. இந்த நிலை பெரியவர்களாகிய நம்மளையே கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு காரணம் ஹார்மோன் .இதனால் என்ன விளைவு? என்றால் இந்த மகிழ்ச்சி ஹார்மோன்( Dopamine) குறைவாக சுரப்பதால், படித்தல், உடற்பயிற்சி, கடின வேலை ,நல்ல உணவுகளை சாப்பிடுதல், போன்ற செயல்களில் ஈடுபட தோன்றாது .
மேலும், அதை சுருக்கமாக சொன்னால், மனிதனை சோம்பேறியாக்கும் . இதனால் மன அழுத்தம் ஏற்படுத்தும் .மேலும், செல்போன் திரையில் இருந்து அதிகளவு ப்ளூ லைட் வெளிப்படும் .இது நமது கண்களை பாதிக்கும். அதனால் அளவோடு பயன்படுத்தி, நம்மை மன அழுத்தத்தில் இருந்தும், நம்முடைய மகிழ்ச்சியை இழக்காமல் இருப்பதும், எதிர்காலத்தில் நம்மை டென்ஷனில் இருந்து பாதுகாத்துக் கொள்வதும் ,நம் கையில் .
அதனால், செல்போன் சில நன்மைகள் இருக்கும்போது, அதனுடைய பாதிப்புகளும் மனித வாழ்க்கையில் இருக்கிறது .அதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புகள் அறிந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது எதிர்கால மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் .
அது பற்றி சமூக ஆர்வலர் ஒருவர் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி சொல்வது என்ன?