மே 11, 2024 • Makkal Adhikaram
youtube சவுக்கு சங்கர் விஷயத்தில் திமுக நினைத்தது வேறு, ஆனால் நடப்பது வேறு .அதாவது திமுக ஆட்சிக்கு எதிராகவும், ஸ்டாலின், உதயநிதி ,அவருடைய மருமகன் சபரீசன் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இது அவர்களுக்கு ஒரு பெரிய அரசியல் நெருக்கடியை கொடுத்து வந்தது.
அதாவது ஒரு வலுவான எதிர்க்கட்சிக்காரன் என்ன குடைச்சல் கொடுப்பானோ, அந்த குடைச்சல் சவுக்கு சங்கர் கொடுத்து வந்தார். இவர் ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக, அவருடன் நெருக்கமாகவும், அவர்களிடம் சில தொகை மாறியதாகவும், தகவல்கள் வெளிவந்தது. இதில் இந்த youtube பேச்சாளர்கள் எப்படி மீடியாவாக இவர்களை நினைத்துக் கொள்கிறார்கள்? என்பதுதான் எனக்குப் புரியவில்லை.இன்றைய கார்ப்பரேட் மீடியாக்களும் மறைமுகமாக இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள் . இதற்கு உதாரணம் பிரசாந்த் கிஷோர் ஸ்டாலின் மீடியாக்களுக்கு 2600 கோடி கொடுத்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.
அப்படி என்றால், எல்லாமே கூலிக்கு மாரடிக்கும் வேலைதானா ? அதாவது இன்றைய அச்சு ஊடகத்தில் அப்படித்தான் சில பத்திரிகைகளும்,அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகள் மற்றும் அதன் செய்தியாளர்களும், நினைத்து கொண்டு இருக்கிறார்கள் .நீங்கள் ஒரு கட்சி சார்பாக செய்தியை வெளியிட்டு கொண்டு, நீங்கள் எப்படி ஒரு பத்திரிகையாளர்களாக உங்களை நினைத்துக் கொள்கிறீர்கள்? பத்திரிக்கை என்றால் நடுநிலையாக இருக்க வேண்டும். மக்களுக்கான செய்திகள் இருக்க வேண்டும்.
யாருக்கு சாதகமாக பேசுவது? யாருக்கு எதிராக பேசுவது? இதில் எவ்வளவு பேரம்? என்ற ஒரு கணக்கில் இந்த youtube சேனல்கள் .தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் யாருக்கு சர்டிபிகேட் கொடுப்பது? ஆனால், சவுக்கு சங்கர் மூலம் சில தகவல்கள் வெளிவந்தது. திமுகவை நேரடியாக தாக்கி வந்தார் .அதில் மாற்றுக் கருத்து இல்லை .இவர் அதிகாரிகளிடமோ அல்லது அரசியல் கட்சிகளிடமோ தகவல் சோர்ஸ் இருந்து வந்துள்ளது. அதுதான் இந்த அளவுக்கு சவுக்கு சங்கர் வெளியில் தெரிய முக்கிய காரணம்.
ஆனால், இது போன்ற youtube ஆதரவாளர்கள் ஒவ்வொரு கட்சிக்கும், பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பொய்களும் வருகிறது. சில உண்மைகளும் வெளிவருகிறது. இதை பாமர மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களால் தான் இந்த நுணுக்கமான விஷயத்தை ஆய்வு செய்து பார்க்க முடியும். இந்த ஊடகத்துறையில் இருப்பவர்கள் கூட ,அந்த அளவிற்கு இந்த விஷயத்தை உண்மை எது? பொய்எது? என்பதை ஆராய முடியாது .
மேலும், திமுகவிற்கு ஆதரவான யூடியுப்கள் நிறைய இருக்கிறது.அதைத்தான் ஒவ்வொரு கட்சியும் ஐடி விங்கு என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை போல் அதிமுகவிற்கு இருக்கிறது. பிஜேபிக்கும் இருக்கிறது .இந்த மூன்று கட்சிகளுக்குமே, youtube சேனல்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது எப்படி மீடியாவாக எடுத்துக் கொள்வது? ஒரு கட்சிக்காக பேசுபவர்களை கட்சிக்காரர் என்று சொல்வார்களா? இல்லை, நடுநிலையாக செய்தி சேனல் போல் பேசினார் என்று சொல்வார்களா? அது சொல்ல முடியாது .
நடுநிலையாக பேசுபவர்கள் ஏதோ ஒன்று, இரண்டு இருக்கலாம் .அதிலும் அவர்கள் யாராவது ஒருவருக்கு கொஞ்சம் சாதகமாக தான் இருக்கும். ஏனென்றால், எதை நடத்தினாலும் பொருளாதாரம் என்பது மிக, மிக இங்கே முக்கியமான ஒன்று. அது அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, பத்திரிக்கையாக இருந்தாலும் சரி, youtube சேனலாக இருந்தாலும் சரி, அதற்காக இந்த கட்சிகளை சார்ந்து 99 சதவீதம் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள், youtube சேனல்கள் ஆகிய ஊடகங்கள் என போய்க்கொண்டிருக்கிறது.
நடுநிலை என்பது தேடித், தேடிப் பார்த்து, அதில் எத்தனை பேர்? என்பது விரல் விட்டு தான் எண்ண முடியும். இது கூட தெரியாமல் இன்று வரை செய்தித்துறை இருந்து வருகிறது. முதலில் இந்த செய்தி துறையை அரசியல் கட்சித் துறையாக ஆட்சியாளர்கள் மாற்றிவிட்டார்கள். இதை இவர்களிடம் கொடுப்பதை விட, வேறு ஒரு பொது துறையாக மாற்றினால் நல்லது தான். அதற்கான குழு அமைத்து செயல்படுத்த வேண்டும்.அப்போதுதான் போலி பத்திரிகைகள், இது போன்ற தேவையில்லாத கருத்துக்களை ,தகுதி இல்லாதவர்கள் பத்திரிகை என்று சொல்லிக் கொண்டு, அவர்களும் பத்திரிகை என்று நடத்திக்கொண்டு, இந்த துறைக்கு கலங்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது கூட சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் ஒரு கருத்து பதிவு செய்திருக்கிறார். இந்த youtube சேனல்கள் எல்லாம் வரைமுறைப்படுத்த வேண்டும் என்று, இதை வரைமுறை என்பது முடியாது. அது ஒரு புறம் இருந்தாலும், இவர்கள் பத்திரிகையாளர்கள் என்ற சட்டத்துக்குள் வர முடியாது. ஏனென்றால், யாரைப் பற்றி வேண்டுமானாலும், நல்லதோ, கெட்டதோ, தவறோ, சரியோ வழிப்போக்கர்கள் போல, பேசிவிட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். அதுபோல, நாங்கள் பேசவும் முடியாது. எழுதவும் முடியாது. இதற்கென்று சில கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்கட்டும்,. youtube பேச்சாளர் சவுக்கு சங்கரை ஆளுக்கு ஒரு கருத்து youtube பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது அவருடைய தவறுகள் தான் அதிகமாக சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தவறுகள் அது தனி நபருடையது. ஆனால், சவுக்கு சங்கர் திமுக ஆட்சி நிர்வாகத்தை எதிர்த்து பேசி குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். அதை தான் மக்கள் பார்க்கிறார்கள். அதைத்தான் இப்போது மக்கள் பேசுகிறார்கள். இவர்கள் செய்கின்ற அராஜகங்கள் எதிர்த்து சவுக்கு சங்கர் பேசியதால் பழிவாங்க திமுக அவரை ஜெயிலுக்குள் தள்ளி இருக்கிறது என்பதுதான் மக்கள் பேசுகின்ற ஒரு பொதுவான கருத்து .
அதுமட்டுமல்ல, தற்போது காவல்துறையில் கையை உடைத்தது. அவர் மீதுகஞ்சா வழக்கு போட்டது ஒரு அனுதாபத்தை மக்கள் ஏற்படுத்தி விட்டனர். அப்படி என்றால், சவுக்கு பேசியது, சொன்னது எல்லாமே கரெக்ட் என்பதை திமுக ஒத்துக் கொள்கிற மாதிரி தான், இந்த சம்பவங்கள் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டிருக்கிறது. காவல்துறையை வைத்து சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு போட்டது . இது எல்லாமே மக்களுக்கு இந்த ஆட்சியின் மீது இருந்த நம்பிக்கை காணாமல் போனது. இது ஒரு பக்கம்,
இது தவிர, காவல்துறை ஒரு மனிதனை தவறு செய்தால், கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் .அவர் என்ன குற்றம் செய்தாரோ, அதற்கு தகுந்தவாறு சட்டத்தின் விசாரணையில் நீதிபதி கொடுப்பது தண்டனை. ஆனால், சவுக்கு சங்கரின் கையை உடைத்து ,அவரை அழைத்துச் செல்லும் போது வேறு ஒரு வண்டியின் மீது மோதி ,இப்படியெல்லாம் அராஜகங்கள் காவல்துறையில் சவுக்கு சங்கருக்கு எதிராக நிகழ்ந்துள்ளது. இது மக்கள் மத்தியில் சவுக்கு சங்கருக்கு அனுதாபத்தை தான் ஏற்படுத்துகிறது .
மக்கள் என்ன பேசுகிறார்கள்? என்றால், ஒருவர் கைது செய்யப்பட்டால், கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால், காவல் நிலையங்களிலும், சிறை துறையிலும் அநியாயமாக தாக்கப்படுவது, மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை .இது காவல்துறையின் மீது உள்ள நம்பிக்கை முற்றிலுமாக மக்கள் இழந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், காவல் துறையை நம்பி தான் பொதுமக்கள் இருக்கிறார்கள். ஆனால், வேலையே பயிரை மேய்வது போல, இவர்களுடைய நடவடிக்கை இருக்கிறது. இதில் காவல் துறை மீது குற்றம் சுமத்த முடியுமா? அல்லது முடியாதா? என்றால், இந்த விஷயத்தில் காவல்துறை மீது நிச்சயம் வழக்கு தான். மனித உரிமைகள் ஆணையம் பதியும் என்ற தகவல் வெளிவருகிறது.
ஒரு கைதி ஜெயிலுக்கு போகும் முன் கை நல்லா இருந்து, வெளிவரும்போது அவன் கை தாக்கப்பட்டு ஒடித்து இருக்கிறார்கள் என்றால், இங்கே காவல்துறை தவறு செய்கிறது. ஒருவன் குற்றம் செய்தான் என்று தான் அவனை கைது செய்கிறார்கள் .காவல்துறை தவறு செய்தால், அவர்களை யார் கைது செய்வது? இந்த கேள்விக்கு காவல்துறையில் பணியாற்றக் கூடிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இது பற்றி சிந்திக்க வேண்டும். அதாவது காவல்துறை அதிகாரிகள், ஆட்சியாளர்களின் எடுபிடி அல்ல .சட்டத்தை பாதுகாப்பவர்கள். அதுதான் அவர்களின் முக்கிய கடமை.
ஆனால், ஆட்சியாளர்கள் சொல்வதெல்லாம் செய்வது, காவல்துறையின் கௌரவமிக்க பொறுப்புக்கு களங்கம். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் மாற்றலாம் அல்லது உங்களை பணியில்லாமல் கூட ரிசர்வில் (Reserve ) வைக்கலாம் . அல்லது உங்களுடைய பிரமோஷன் தடை செய்யலாம். இவ்வளவுதான் அவர்களால் செய்ய முடியும் . மேலும், ஆட்சி என்பது யாருக்கும் நிரந்தரமானது அல்ல .இந்த ஐந்தாண்டு திமுக என்றால், அடுத்த ஐந்தாண்டு வேற ஒரு ஆட்சி தான். அப்படி இருக்கும் போது, காவல்துறை தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தில், மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டுமே தவிர. ஆட்சியாளர்களுக்காகவும் ,அரசியல் கட்சிகளுக்காகவும் செயல்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது .
இங்கே காவல்துறை எல்லாரும் தவறு செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதுபோன்ற தவறுகளை செய்தால், சட்டத்தில் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால்தான், நிரபராதிகள் மீது பொய் வழக்கு போட்டு, அவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் சாகடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று . பத்திரிகை என்றால் எதை வேண்டுமானாலும் எழுதி விட்டு போகலாம் என்பது பத்திரிகை அல்ல . எந்த நோக்கத்திற்கானது பத்திரிக்கை? என்பதை உணர்ந்து பத்திரிக்கை நடத்தினால் தான் அது பத்திரிக்கை. இல்லையென்றால் அது பத்திரிகை இல்லை.
அதே போல் தான், ஒவ்வொருவரும், அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடமை என்னவோ, அந்த மையப் புள்ளியில் நின்று தான் செயலாற்ற வேண்டும், என்பதை காவல்துறைக்கு மக்கள் அதிகாரம் சார்பில் தெரிவிக்கின்ற முக்கிய கருத்து. எனவே, இனி அப்படிப்பட்ட தவறுகளை செய்து காவல்துறைக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்தாதீர்கள்.