செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடிகர் விஜய் தொடங்கினார். கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் பிப்ரவரி மாதமே தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியுள்ளதாகவும், கட்சியின் தலைவர் விஜய் நாளை இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்போது, தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.