நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram
ஒரு பத்திரிக்கையில் தப்புன்னு சொல்லிட்ட அதை காப்பி பண்ணி 100 பேர் போட்டு விடுவார்கள். யாரு தப்பு பண்ணாங்க? என்ன தப்பு நடந்தது? இதைப்பற்றி சொல்றதுக்கு தான் பத்திரிக்கை இருக்கணும். யாரா இருந்தாலும் ஒரு நியாயத்தை மக்கள் முன் எடுத்து வைக்கணும். அதுக்கு தான் பத்திரிக்கை. ஆனா நியாயம் இல்லாதது எல்லாம் அதிகார வர்க்கத்திற்கு ஜால்ரா போடுவது பத்திரிகை அல்ல.மேலும்,
நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ !
இதுவரையில் நடிகை கஸ்தூரி சமூகத்திற்கு ஏதோ சில விஷயங்கள் பேசி இருப்பார் .ஆனால் என்ன நல்லது செய்தார்? என்பது தெரியாது. அப்படி யாரும் மக்களும் சொல்லவில்லை. இருப்பினும், ஒரு நியாயத்தின் அடிப்படையில் மனதில் பட்டதை எதார்த்தமாக பேசக்கூடிய ஒரு நபர்.
நடிகை கஸ்தூரியை போலீசார் தனிப்படை அமைத்து அவரைக் ஐதராபாத்தில் கைது போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டில் எத்தனையோ மக்களின் முக்கிய பிரச்சனைகள் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. இதற்கு இவ்வளவு முக்கியத்துவமா ? கஸ்தூரி பேசிய பேச்சு இந்த அளவுக்கு அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா? உண்மையிலேயே திமுக அரசு கஸ்தூரியை இரண்டு மாநிலங்களிலும், பெரிய அளவில் பேசக்கூடிய அளவுக்கு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நபராக ஆக்கிவிட்டார்கள் என்று தான் தோன்றுகிறது .மேலும்,
தன்னுடைய பேச்சுக்கு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கஸ்தூரி கேட்டார். அதற்கு அரசு தரப்பில் முன்ஜாமின் கொடுக்கக் கூடாது. தெலுங்கு மக்களை அவர் இழிவுபடுத்தி விட்டார். அவருடைய பேச்சு அருவருக்கத்தக்கது என்று நாயுடு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கு ஊழல் வழக்குகளில் ஒரு நல்ல நீதிபதி என்று பெயர் எடுத்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவரும் இதில் அரசியல் உள்நோக்கம் இருக்குமா? என்பது பற்றி விசாரிக்கவில்லை.
ஏனென்றால் நடிகை கஸ்தூரி எதார்த்த அரசியல்வாதி. மனதில் பட்டதை உண்மையை போட்டு உடைத்து விடுவார். அதில் சில உண்மையும் இருக்கும், தவறுகளும் இருக்கும். அதற்குள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இவருடைய பேச்சால் என்ன பாதிப்பு? எந்த சமுதாயத்திற்கு நஷ்டம்? அதன் பின் விளைவு என்ன? இவருடைய கைது அரசியல் உள்நோக்கமா? என்பதுதான் சமூக ஆர்வலர்கள் கேள்வி?