செப்டம்பர் 11, 2024 • Makkal Adhikaram
விருதுநகர் : பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையா ஊதியம் வழங்குவது, அரசாணை 243ஐ ரத்து செய்வது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வகணேசன் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணக்குமார், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அழகராஜ் பேசினர். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜேஷ் நன்றிக்கூறினார்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தனர். சி.பி.எஸ்., முறையை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை நடை-முறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசாணை 243ஐ ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட, 31 கோரிக்கையை வலியுறுத்தி, 500க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரி-யைகள் கலந்து கொண்டனர்.டிட்டோ ஜாக் சார்பில் நேற்று, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில், தொடக்க பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்-டனர். இதன்படி மாவட்டத்தில் மொத்தமுள்ள, 2,406 பேரில், 993 ஆசிரியர்கள் ஆப்சென்ட் ஆகினர்.