ஜூன் 17, 2024 • Makkal Adhikaram
தமிழ்நாட்டு பெரிய பத்திரிக்கை தொலைக்காட்சிகளாக இருக்கட்டும் அல்லது பிபிசி போன்ற வெளிநாட்டு நிறுவனங்களாக கூட இருக்கட்டும், இவர்கள் எல்லாம் அரசியலை, அரசியல் கட்சிகளுடன் ஒத்து ஊதுகின்ற ஊது குழலாகத் தான் இருக்கிறார்கள் . ஏனென்றால், அப்போதுதான் கோடிக்கணக்கில் சலுகை, விளம்பரங்கள் அரசாங்கத்திலிருந்து இவர்களுக்கு கிடைக்கும். ஆட்சியாளர்களும் ,அரசியல் கட்சிகளும் எவ்வளவு பொய் சொன்னாலும் அதற்கு ஒரு சப்பக்கட்டை கட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற வேலைதான், இந்த கார்ப்பரேட் ஊடகங்களின் மறைமுக அரசியல்.
அதை நடத்துகின்ற அந்த கம்பெனியின் முதலாளிகளுக்கு பத்திரிக்கை பற்றி, தொலைக்காட்சிகளை பற்றி ,பெரிய அளவில் ஒன்றும் தெரியாது. அதில் பணியாற்றக்கூடிய பத்திரிகை ஆசிரியர்கள், தொலைக்காட்சி ஆசிரியர்கள், நிருபர்கள் இவர்களெல்லாம் பெரிய சம்பளம் வாங்கினாலும், கூலிக்கு மாரடைக்கும் கூட்டம் தான் . அது இல்லை என்று மறுக்க முடியாது . இதில் எங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்கக் கூடாது என்பதில் ஒரு முடிவோடு இருக்கிறவர்கள் . கொடுத்தால் இவர்களும் நம்மோடு போட்டி .மேலும்,
பத்திரிக்கை உலகமே ஒரு போட்டி உலகம். நாம் இப்போது கார்ப்பரேட் கம்பெனி ஊடகங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்தால் இனி இதனுடன் போட்டி போட வேண்டி இருக்கும் .இது தவிர, சோசியல் மீடியாக்களுடன் போட்டி போட வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட ஒரு அரசியல் தான் இந்த பத்திரிகை உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது . இதில் அரசியல் மக்களுக்கான அரசியலாக இல்லாமல், ஆட்சியாளர்களுக்காகவும் ,அரசியல் கட்சிக்காகவும் இருந்தால் கூட அதை பெரிது படுத்தாமல், அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கின்ற இந்த கார்ப்பரேட் ஊடகங்கள், இதுவரை தங்களை வளர்த்துக் கொள்வதில் சுயநலமாக பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் இருந்து வருகிறது.
ஆனால் ,இவர்கள் நாட்டு மக்களுக்காக உண்மையான செய்திகளை கொடுப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள். இதில் என்ன ஒரு விஷயம் என்றால் எனக்கு எதுவும் தெரியாது. ஆட்சியாளர்கள் சொன்னார்கள், அரசியல் கட்சிகள் சொன்னார்கள் ,நாங்கள் போட்டு விட்டோம் .எங்களுக்கு எதுவும் தெரியாது. இதை போடுவதற்கு பெரிய பத்திரிகை, தொலைக்காட்சிகள் தேவையில்லை. எது உண்மை? எது பொய் என்று போடுவதற்கு தான் பத்திரிகைகள் தேவையே தவிர, ஒருவன் எதை சொன்னாலும் போடுவதற்கு அங்கே பத்திரிக்கை சுதந்திரம் தேவையில்லை.
அப்படி பட்ட பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் பெரிய பத்திரிகை என்று சொல்வதற்கும் அர்த்தம் இல்லை. அப்படியே இந்த பெரிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் நாட்டில் இவர்களால் என்னென்ன ஊழல் வெளிவந்திருக்கிறது? அல்லது மக்களுக்கு என்ன அரசியல் புரிய வைத்திருக்கிறார்கள்? மக்களை முட்டாளாக்கியதுதான் அதிகம் . ஆனால் ,எங்களைப் போன்ற ஒரு சில பத்திரிகைகள் சமூக சிந்தனையுடன் சமூகத்தில் போராடுகின்ற ஒரு எழுத்தாளனின் வடிவத்தில் வருகின்ற பத்திரிகைகள் மிக மிகக் குறைவு. அதற்கும் இந்த சலுகை விளம்பரங்கள் கொடுக்கக் கூடாது என்பதில் அதிகாரிகளும், இவர்களும் இருக்கிறார்கள்.
சமீபத்தில் செய்தித் துறையின் இயக்குனரையும், செய்து துறை செயலாளரையும் சந்தித்தேன். இயக்குனர் ஒரே வார்த்தை சொல்கிறார், வாங்க உங்களுக்கு என்ன தேவையோ, அதை செய்கிறேன். கொடுக்கிறேன். இது அரசியல்வாதிகள் சொல்கின்ற வார்த்தை. இதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், செயலாளர் சில உண்மைகளை சொன்னார் உங்களுக்கெல்லாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால், அவர் சொன்ன விஷயம் சர்குலேஷன் இல்லாமல், நாங்கள் எப்படி விளம்பரத்தை கொடுப்பது? உண்மைதான் .நானும் ஏற்றுக் கொண்டேன்.
இந்த சர்குலேஷன் (wide ) என்பது பணம் தான் என்றேன். பணம் இருந்தால் சர்குலேஷன். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. மேலும், இவர்களுடைய சர்குலேஷன் சொந்த பணத்திலா ? அல்லது மக்களுடைய வரிப்பணத்திலா ? மக்கள் வரிப்பணத்தில் சர்குலேஷன் காட்டுவது பெரிய விஷயம் அல்ல. சொந்த பணத்தில் சர்குலேஷன் காட்ட சொல்லுங்கள். அது எவ்வளவு நாளைக்கு இவர்களால் காட்ட முடியும்? ஏனென்றால் மக்களுடைய வரிப்பணத்தில் பல கோடிகளை சம்பாதித்து விட்டார்கள். அதனால் இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த பணத்தில் பத்திரிக்கை நடத்தி அதில் சர்குலேஷன் காட்ட சொல்லுங்கள்.மேலும்,
எத்தனை பேர் காட்டுகிறார்கள் பார்ப்போம்? மேலும், இதற்கெல்லாம் அரசியல் பின்புலம் இவர்களுக்கு வலுவாக இருக்கிறது. எங்களுக்கு அது இல்லை .அதனால் தான், ஸ்டாலின் பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் கூட உறுப்பினர்களாக சேர்க்கவில்லை என்பது பத்திரிகை உலகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கேவலம் . இதற்கெல்லாம் நிச்சயம் செய்தித்துறை, கார்ப்பரேட் பத்திரிக்கை உலகம் பதில் சொல்லியே தீர வேண்டும். இது பற்றி நீதிபதியிடம் விவாதித்து இருக்கிறேன். மேலும், எமது வழக்கறிஞரிடமும் விவாதித்து இருக்கிறேன். எல்லா விஷயமும் இங்கே சொல்ல முடியாது. அதனால், செய்தித் துறை மத்திய அரசும் சரி ,மாநில அரசும் சரி நீதிமன்றத்தில் இந்த பிரச்சனை கொண்டு சென்றால் அதற்கான தீர்வு நீதி வெல்லும்.மேலும்
ஐந்தாண்டுகளுக்கு மேலாக இந்த செய்திகளை வெளியிட்டும், செய்தித் துறை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை . எமது செய்தியாளர் தேனியில் இருந்து சொல்வார் நானும் இதைப்பற்றி சொல்வேன், மக்கள் அதிகாரத்தை தவிர, வேறு எந்த பத்திரிகையும், இந்த செய்தியை போடுவதில்லை. நானும் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக இச் செய்தியை வெளியிட்டு வருகிறேன்.சார் சப்ஜெக்ட் தெரியாது. தெரிந்தால் தானே அவர்கள் போடுவார்கள். அதனால் குருடன் யானையை தடவிய கதை போல் தான் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்களும், நாங்கள் சொல்வது தான் பத்திரிகை என்று இன்றுவரை தமிழ்நாட்டில் ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதை மக்களும், பத்திரிகை உலகமும் ,மத்திய ,மாநில அரசின் செய்தி துறையும் புரிந்து கொள்வார்களா?