ஒருவர் மத்திய அரசின் பணிகளில் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் அவருடைய ஆவணங்கள் சரி பார்ப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமான வழக்கு ஒன்று மேற்கு வங்கத்தில் ஒருவர் 1985 இல் மத்திய அரசு பணியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இவர் 2010ல் தான் இந்திய குடிமகன் இல்லை என்று மத்திய அரசுக்கு தெரிய வருகிறது. அதுவரை இவர் வேலை செய்து சம்பளமும் வாங்கிக் கொண்டு வருகிறார். பிறகு 2010ல் இவர் இந்திய குடிமகன் இல்லை என்ற உண்மை தெரிய வந்துள்ளது.
இப்பிரச்சனைக்கு என்ன தீர்வு? என்று புரியாமல் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. அப்போதுதான் உச்சநீதிமன்றம் ஒருவர் பணியில் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் அவருடைய ஆவணங்கள் அனைத்தும் சரி பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.