மனித வாழ்க்கை உழைப்பை நோக்கி ,உண்மையை நோக்கி வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது ,அமைதியான வாழ்க்கை ,சந்தோசமான வாழ்க்கை ,நிம்மதியான வாழ்க்கை ,கௌரவமான வாழ்க்கை , வாழ்ந்து வந்தார்கள். இப்போது நாட்டுக்கு நாடு போட்டி ,பொருளாதார போட்டி ,விஞ்ஞான வளர்ச்சிப் போட்டி, ராணுவத்தின் வலிமையாக ஏவுகணைகள் போட்டி ,இது மட்டுமல்ல,
விண்வெளி தளத்தில் ராக்கெட்டுகளை ஏவி ஆராய்ச்சி செய்வது ,கோள்களுக்கு ராக்கெட்டுகள் அனுப்புவது ,தொழில் ரீதியாக வெற்றி என்று ஒவ்வொரு நாடும் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டிருந்தாலும், மனித வாழ்க்கையில் நிம்மதி ,சந்தோஷம் ,நிறைவு ,கேள்விக்குறியாக தான் நிற்கிறது .
இப்போது விஞ்ஞானத்தின் வளர்ச்சியை வளர்ந்த நாடுகள் வலிமை குறைந்த நாடுகளை வைத்து போரில் உலக நாடுகள் இந்த வலிமையை சோதித்துப் பார்க்கிறார்கள். அதாவது சிறிய நாடுகளை வைத்து பொருளாதரத்தில் ,ராணுவ பலத்தில், வலிமையான வல்லரசு நாடுகளான அமெரிக்கா ,ரஷ்யா, சைனா போன்ற நாடுகள் சிறிய நாடுகளை வைத்து இதை சோதித்துப் பார்க்கிறார்கள் .
இதற்கு முக்கிய மூல காரணமாக இருப்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் இவர்களை ஒடுக்குகின்ற அல்லது அழிக்கின்ற நோக்கத்தில் தான் தற்போதுள்ள நாடுகளில் போர் ஏற்பட்டுள்ளது இது சிறிது சிறிதாக வளர்ந்து உலகப்போராக மாறுமா? என்ற அச்சத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் இருந்து வருகிறது. அதனால் ஒவ்வொரு நாடும் அந்தந்த நாட்டில் பயங்கரவாதம் தீவிரவாதம் வளர்வதை ஆரம்பத்திலே தடுத்து நிறுத்துவது மிகவும் அவசியமான ஒன்று இந்த பயங்கரவாதிகளால் தான் இன்று அமாஸ் இடையே ஏற்பட்ட போர் உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்டபோது இடையே ஏற்பட்ட போர் மற்றும் இஸ்ரேல் ஈரான் இடையே ஏற்பட்ட போர் அனைத்தும் ஆரம்பத்தில் இந்த தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக தொடங்கப்பட்டது தான்.
இன்று பல நாடுகள் போரால் பாதிக்கப்பட்டும் ,அந்த நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களுக்கும் ,நோய்களுக்கும் ,பொருளாதார நெருக்கடிகளுக்கும் ஆளாகி வருவது மிகுந்த வேதனைக்குரிய சம்பவங்கள் .அதனால், உலக நாடுகள் தங்களுடைய விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் தங்களுடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ,மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கும் ,பயன்படுத்த வேண்டுமே தவிர ,
ஒரு நாட்டுடன் இன்னொரு நாட்டின் வலிமையை பரிசோதிப்பது, அது என்றுமே அந்த நாட்டுக்கு ஒரு உயர்வையோ கௌரவத்தையோ ஏற்படுத்தாது . அதனால் நாட்டுக்கு ,நாடு மனிதனுக்கு, மனிதன் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும் .அதை யாராலும் மாற்ற முடியாது. அதனால் ,,விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித வாழ்க்கைக்கு ,சந்தோஷத்தையோ, நிம்மதியோ ,நிறைவையோ தரப் போவதில்லை . அதனால் அழிவை நோக்கி விஞ்ஞானத்தின் வளர்ச்சி இருக்கிறது . ஆக்கபூர்வமான செயல் திட்டங்களுக்கு அதை பயன்படுத்துவதால் ,மக்கள் சில காலம் வாழ்ந்து விட்டு இறப்பார்கள் என்பதை உணர்ந்து, உலக நாடுகள் போரை கைவிடுவது மனித வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒன்று .